Tuesday, April 1, 2014

ஹைத்ராபாதில் தொடர்ந்து வரும் காவல்துறை அராஜகம்





புகழ்பெற்ற மார்க்க அறிஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஹைத்ராபாதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, 
ஹைத்ராபாதில் உள்ள அஷ்ரபுல் உலூம் அரபிக் கல்லூரியின் நிறுவனரும், அக்பரி மசூதியின் இமாமாகவும் உள்ள மவ்லானா அப்துல் கவி அவர்கள், கடந்த 23/03/14 அன்று, உ.பி மாநிலம் தேவ்பந்தில் நடக்கும் மதராஸாக்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஹைத்ராபாதில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லி சென்றார், இரவு 7.30மணியளவில், அங்குகாத்திருந்த குஜராத் போலீசார், மார்க்க அறிஞர் அப்துல் கவி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் பாண்டியா கொல்லப்பட்ட வழக்கில் இவருக்கு தொடர்புள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர், இவரது கைது ஹைத்ராபாதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது, அங்குள்ள அனைத்து சமுதாய அமைப்புகளும், இவரின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் மமக மாநில அமைப்பு செயலாளர் மவ்லவி சம்சுதீன் நாசர் உமரி தலைமையில் வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத், மவ்லவி அப்துல் கதீர் காஜி, மாவட்ட து.செயலாளர் கிசர் உசேன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் பாபுசேட் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவை, உண்மை நிலையை அறிய, ஹைத்ராபாதிற்கு தமுமுக அனுப்பியுள்ளது, அவர்கள் அங்குள்ள அரசியல் தலைவர்கள், அஷ்ரபுல் உலூம் அரபிக் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர், மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைத்ராபாதின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி அவர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்தினர்,

No comments :