Tuesday, April 1, 2014

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 6 இடங்களில் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலி வாக்குறுதி அளித்தார்.

ஹைதர்அலி பிரசாரம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக மனித நேய மக்கள் கட்சி யை சேர்ந்த ஹைதர்தலி போட்டியிடுகிறார். அவர் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே உள்ள தளவாய்பாளையத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
வீதி, வீதியாக சென்று ஹைதர்அலி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தால் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை சீறிய முறையில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் முதன்மையான தொகுதியாக மாற்றுவேன். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் 6 தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ ராமலிங்கம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சோம.செந்தமிழ்ச்செல்வன், அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், அம்மாப்பேட்டை பேரூராட்சி தலைவர் கார்த்திகேயன், துணைத்தலைவர் ரமேஷ், பேரூராட்சி செயலாளர் வீரமணி, கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மகரூப் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஹைதர்அலி நிருபர்களிடம் கூறுகையில், “மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். மக்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணிக்கு மிகுந்த எழுச்சி உள்ளது. இதனால் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட எம்.பி.யை தேர்தலுக்கு பிறகு நாங்கள் பார்க்கவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை போல விவசாயிகளின் அவல நிலையை போக்க, மீனவ சமுதாயத்தை, பழங்குடி சமுதாயமாக மாற்ற, மாணவர்களின் கல்விக்கடன்களை தள்ளுபடி செய்ய நான் பாடுபடுவேன்”என்றார்.

செய்திகள்: Daily Thanthi

No comments :