Monday, August 26, 2013

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்!.

கீழக்கரை முத்துச்சாமிபுரம் மக்களிடம் ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா குறைகள் கேட்டார்.
பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தராத கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.
கீழக்கரை நகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத்தில் 200 அருந்ததியின குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கீழக்கரை நகராட்சி துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இப்பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதியளவு இல்லை. கழிப்பறை வசதியின்மையால் திறந்த வெளியிலேயே மலம் கழிப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக ஜவாஹிருல்லா எம்எல்ஏவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து நேற்று அவர், முத்துச்சாமிபுரம் பகுதியை நேரில் ஆய்வு செய்தார்.
கீழக்கரை நகராட்சி துப்புரவு தொழிலாளர் சங்கத் தலைவர் ஹமீதுகான் கூறுகையில்,
இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் 3 கழிப்பறைகள் கட்டப்பட்டு தண்ணீர் வசதி இன்றி இது நாள் வரை பயன்பாட்டுக்கு விடாமல் பூட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மராமத்து பணி செய்ய ரூ.8 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டு ஒரு மாதமாகியும் இதுவரை பணி துவங்கப்படவில்லை. குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி இல்லை என நகராட்சியில் பல முறை புகார் கொடுத்தும் எந்நடவடிக்கையும் இல்லை. மழைக்காலம் துவங்கினால் வீடுகளில் தண்ணீர் புகுந்து படுக்கக்கூட இடமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாவர் என்றார்கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு ஜவஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம்!.
ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறியதாவது:
 ஊரையே துப்புரவு செய்யும் தொழிலாளர்களின் இருப்பிடம் உள்ள இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் தூங்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறேன். ரூ.5 லட்சம் செலவில் கட்டிய கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்காமல் பூட்டி வைத்து மீண்டும் மராமத்து செய்ய நிதி ஒதுக்கி பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது இப்பகுதியை புறக்கணிப்பதாக உள்ளது. நகராட்சி நிர்வாக செயல் திறமையின்மையை முதல்வர், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பகுதிக்கு குடிநீர் வசதி செய்ய ஏற்பாடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி துணைத்தலைவர் ஹாஜாமுகைதீன், நகர் தமுமுக தலைவர் முகமது சிராஜூதீன், நிர்வாகிகள் சேகுதாவூது சாதிக், ரைஸ் இபுராகிம், மாவட்ட செயலர் அன்வர்அலி, கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, முகைதீன் இபுராகிம், முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

source keelakaraitmies.blogspot.com

No comments :