Wednesday, April 7, 2010

இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி இருசக்கர சீருடை பேரணி

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான 2.5 சதவிகித தனி இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வலியுறுத்தி, காரைக்கலில் இருசக்கர வாகனத்தில் சீருடை அணிந்து தமுமுகவினர் நேற்று பேரணி நடத்தினர். மாவட்ட துணைத்தலைவர் யூசூப்கான் தலைமை வகித்தார். பொருளாளர் ஷாஜகான், துணை செயலர் அப்துல்காசிம், செயற்குழு உறுப்பினர் லியாகத் அலி, மாநில தொண்டர் அணி செயலாளர் முஹமது ஜியா வுதின் முன்னிலை வகித்தனர். காரைக்காலை அடுத்த வாஞ்சூரில் துவங்கிய பேரணியை, எம்.எல்.ஏ சிவக்குமார் துவக்கி வைத்தார்.

போலகம், திரு.பட்டினம, நிரவி, காரைக்கால், திருநள்ளாறு, சேத்தூர், அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கன்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் பயணம் செய்து காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது.

இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம், புதுச்சேரி மாவட்ட தலைவர் அப்துல்ரஜாக், முஹமது பீர்தவ்ஸி ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர். ஊர்வலத்தில், த.மு.மு.க நிர்வாகிகள் நியாஜ், ஜலாவுதின், முஹமது ஹாஜா, பாவா பஹ்ருதீன், சர்புதீன், சபுரூதீன் கலந்து கொண்டனர்.

No comments :