Monday, February 23, 2009

வரலாற்றை எங்கள் திசையில் இழுத்து போவோம்!

வரலாற்றை எங்கள் திசையில் இழுத்து போவோம்!
மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி

மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சி மாற்று அரசியலுக்கான முன் முயற்சி என்ற முழக்கத்தோடு கூடியிருக்கும் சகோதர... சகோதரிகளே...

வரலாறு மீண்டும் திரும்புகிறது. வஞ்சிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை கைப்பற்ற கூடியிருக்கிறார்கள்.

நாங்கள் கூடியிருப்பது கலைவதற்காக அல்ல... அணி திரள்வதற்காக...
தாம்பரத்தில் தொடங்குகிறோம் விரைவில் டெல்லியில் நமது கொடி பறக்கும்...

இன்று செங்கோட்டை மேடையில் இருக்கிறோம்...

அடுத்து செயின் ஜார்ஜ் கோட்டையில் உட்காருவோம்...

மாவோ சீனாவில் நீண்ட பயணத்தை நடத்தினான்.

சீனாவில் ஆட்சி மாற்றம் நடந்தது.

சேகுவேரா படை நடத்தினான். க்யூபாவில் ஆட்சி மாற்றம் நடந்தது.

நெல்சன் மண்டேலா குமுறி எழுந் தான் தென்னாப்பிரிக்க வரலாறு மாறியது

இதோ...மனிதநேய மக்கள் கட்சி புறப்படு கிறது. இந்தியாவின் சரித்திரம் மாறப் போகிறது

வரலாற்றை அதன் திசையில் அல்ல..

எங்கள் திசையில் இழுத்துப் போக றோம்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிரித்தவர்கள் என அரசியலை பிரித்தவர்களின் ரதமும் ஓடாது.. இனி ரத்தமும் ஓடாது...


இனி சமூக நீதி அரசியலை, சமூக நல்லிணக்க அரசியலை வழி நடத்துவோம்..


நாங்கள் தடம் மாறவில்லை... புதிய தடத்தை பதிக்கிறோம்...


பாதைகளை மாற்றவில்லை... குதிரை களை மாற்றுகிறோம்...


இந்தக் கூட்டம் ஒன்றை தெளிவாக பிரகடனம் செய்கிறது.


சிலர் வடக்கே இருப்பார்கள், தெற்கே இருக்கமாட்டார்கள்...


தெற்கே இருப்பார்கள் வடக்கே இருக்க மாட்டார்கள்.


ஆனால் மனிதநேய மக்கள் கட்சி தொடங்கும் போதே 30 மாவட்டங்களிலும் வலுவோடு தொடங்குகிறது.


எனவே தமிழ்நாட்டிலே 5வது பெரிய கட்சி மனிதநேய மக்கள் கட்சி தான். இனி போயஸ் தோட்டமும், கோபாலபுரமும் வடமரைக்காயர் தெருவை புறக்கணித்து விட்டு அரசியல் செய்ய முடியாது! நாடாளுமன்ற தேர்த­ல் முஸ்லிம்களுக்கு ஒரு தொகுதிதான் என்ற நிலையை மாற்றுவோம். நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கும் கலாச்சாரம் முடிந்து 3மணி நேரமாகிவிட்டது. மத்திய சென்னை, ராமநாதபுரம், வேலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நெல்லை என ஆறு தொகுதிகளை குறிவைத்திருக்கிறோம்.


எங்களுக்கு மத்திய அரசு பதவிகளில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்து ரையை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமல்படுத்த வேண்டும். சோனியாகாந்திக்கும், கலைஞருக்கும் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம் நாங்கள் உங்களோடு இருக்க விரும்பு கிறோம். எங்களை வஞ்சித்தால் தமிழ் நாட்டின் வீதிகளை யாராலும் கட்டுப் படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல் அருந்ததியி னர் இன மக்களுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடும் விரைவில் அமல்படுத்தப் பட வேண்டும். இடஒதுக்கீடு சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கவனிக்க கண்காணிப்புக் குழு ஒன்றும் அமைக்கப்படவேண்டும்.


தமுமுக அதன் பாதையில் வீரியமாக இயங்கும். ம.ம.க. அரசியல் கடமைகளை ஆற்றும். நேற்று சொன்னதை இன்றும் சொல்கிறோம் இன்ஷாஅல்லாஹ் நாளை யும் சொல்வோம். எங்களை, எங்கள் கொள்கைகளை விலைக்கு வாங்கும் ரூபாய் நோட்டுக்கள் இன்னும் அச்சடிக்கப்பட வில்லை.

No comments :