Friday, February 20, 2009

தமுமுகவின் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் நலவாரியம் தமிழக பட்ஜெட்டிற்கு தமுமுக வரவேற்பு


தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி
வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

தமிழக அரசின் 2009-2010 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையின் சிறப்பு அம்சங்களை வரவேற்று பாராட்டுகிறோம். குறிப்பாக உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பினை இதய பூர்வமாக வரவேற்கிறோம் தமிழக அரசின் இந்த அறிவிப்பு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஆயிரக்கணக்கான உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களின் காதில் நிச்சயம் தேனாய் பாய்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் சமுதாயத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் உலமாக்கள், பணியாளர்கள் நலனில் சீரிய அக்கறை எடுத்து அவர்களது அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் தமுமுகவின் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கான நலவாரியம் அமைப்பதாக அறிவித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் கலைஞருக்கும், நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகனுக்கும், மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆறு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பதையும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசின் அச்சாணியாக திகழும் தமிழக முதல்வர் கலைஞர் தொடர் அழுத்தங்களைக் கொடுத்து நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

No comments :