Tuesday, February 10, 2009

சரித்திரத்தைத் தொடங்கியது மனிதநேய மக்கள் கட்சி!

சரித்திரத்தைத் தொடங்கியது மனிதநேய மக்கள் கட்சி!


மண்டிய இருள் கிழிக்கும் மக்களின் எழுச்சி! மாற்று அரசியலுக் கான மாபெரும் புரட்சி!! என்ற முழக்கத்தோடு சென்னையை நோக்கி படையெடுத்தனர் சமுதாய மக்கள், இல்லை... இல்லை... தமிழக மக்கள் படையெடுத்தனர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.


பிப்ரவரி 6ஆம் தேதி மாலையில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள்தான் பயணத்தை முதலில் தொடங்கிய தகவலைத் தந்தனர். அன்று இரவு தமிழக சாலைகளில் கறுப்பு வெள்ளை கறுப்பு கொடிகளுடன் பேருந்து, வேன், கார் என வாகனங்களில் மக்கள் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது.


வழியெங்கும் உளவுத்துறையினர் வாகனங்களின் எண்ணிக்கையையும், அதில் நெரிசலுடன் நிரம்பி வழிந்த மக்களையும் கணக்கெடுத்தவாறு தங்கள் பணியைத் தொடர... ராஜ கம்பீரத்தோடு வாகனப் படையெடுப்பு சென்னையை நோக்கி நகர்ந்தது. ஆம் எல்லா சாலை களும் சென்னையை நோக்கித் திரும்பின.


விடியற்காலை 4 மணி முதல் வாகனங்கள் சென்னையை நெருங்க... ஆங்காங்கே கொட்டும் பனியில் பாது காப்புப் பணிகளை செய்து கொண்டிருந்த தமுமுக தொண்டரணியினர், வாகனங்களுக்கு வழிகாட்டத் தொடங்கினர்.


காலை 6, 7 மணிக்கெல்லாம் திருச்சிக்கு தெற்கே உள்ள மாவட்டங்களிலிருந்து வந்த வாகனங்கள் சென்னைக்குள் நுழைய,
காலையிலிருந்தே போக்குவரத்து நெரிசல் தொடங்கியது. தாம்பரத்தி­ருந்து செங்கல்பட்டு வரை கறுப்பு வெள்ளை கொடிகளுடன் வாகனங்களின் அணிவகுப்பு தொடங்கியது.


மதுராந்தகம், செங்கல்பட்டு என வரும் வழியிலேயே ஏரிகள், ஆறு களில் மக்கள் கூட்டம் இறங்கி குளிக்கத் தொடங்கியது. அங்கு நின்றிருந்த மதுக்கூரைச் சேர்ந்த ராவுத்தர்ஷா என்ற சகோதரர் நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ''1 நிமிடத்திற்குள் பல வண்டிகள் சாரை சாரையாகப் போவதைப் பார்க்கிறோம், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது'' என்றார்.


இதேபோல் கிழக்கு கடற்கரை சாலை காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்களால் நிரம்பியது. மறுபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, நந்தம்பாக்கம் வழியாக வந்த மேற்கு, வடமேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்களின் வருகையால் திணற... இந்த செய்திகள் எல்லோரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.


ஒருபக்கம் தொழுகை, மறுபுறம் குளியல், எல்லாம் முடிந்தபிறகு ஊரி­ருந்து கொண்டுவந்த காலை உணவை உண்ணும் காட்சிகளை தாம்பரம் சென்னையைச் சுற்றி பரவலாகப் பார்க்க முடிந்தது.


தாம்பரத்தில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள் ஏற்கெனவே திகைத்துப் போயிருந்த மக்களை மேலும் திக்கு முக்காட வைத்தது. 100 அடி பேனர்கள், காணுமிடமெல்லாம் கொடிகள், பிரம் மாண்ட வளைவுகள் என மக்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.


மகிழ்ச்சி, உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு என ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு செய்திகளை சொல்லாமல் சொல்லியது. 10 மணிக் கெல்லாம் மக்களின் ஒரு பகுதியினர் திடலுக்குள் நுழைந்தனர்.


அவர்களை வெடிகுண்டுகளைக் கண்டறியும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து தமுமுக தொண்டர்கள் உள்ளே அனுப்பினர்.


காலை பனி விலகி, சூரியன் தன் பணியை முடுக்கியது. 11.00 மணிக்கு சமூக நீதி கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கம் மிகுந்த உற்சாகத்தோடு நடக்க, செறிவுமிக்க கருத்துக்களோடு மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் பி. அப்துஸ் ஸமது தலைமை யில், பேரா. ஹாஜாகனியின் ஒருங் கிணைப்போடு தொடர்ந்தது. கருத்தரங்கம் 2 மணி வரை அனல்பறத்தியது. கொஞ்சம்கூட உற்சாகம் குறையவில்லை.


அதன்பிறகு மக்கள் உணவகங்களை நோக்கிச் சென்றனர். ஏராளமானோர் ஊரிலிருந்து கொண்டுவந்திருந்த சாப்பாட்டு பொட்டலங்களைப் பிரித்து உண்ணத் தொடங்கினர்.


அவர்கள் உணவு உண்டுகொண் டிருந்த நேரம் காஞ்சி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கான வாகனங்கள் தாம்பரத்தில் நுழைந்து கொண்டிருந்தன. போக்கு வரத்து செரிவால், போக்குவரத்துக் காவலர்களும் சிரமத்துடன் பணியை செய்துவந்தனர்.


தாம்பரம் மூச்சுவிட முடியாமல் திணறத் தொடங்கிய அந்த மாலை வேளையில் மனிதநேய மக்கள் கட்சி யின் தொடக்க விழா மாநாட்டின் முதல் அமர்வு மாலை 4.30 மணியளவில் தொடங்கியது.


அப்போதே திட­ன் மூன்றில் ஒரு பகுதி நிரம்ப, இதர பகுதிகளில் மக்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது. ஆறு வழிகளிலும் கூட்டம் வர, உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் முதல் அமர்வை மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீத் தலைமை தாங்குவார் என அறிவித்தார்.


மாணவரணியின் அனுபவங் களோடு மைக் முன்பு வந்த ஹாரூண் ரஷீத், திருக்குர்ஆன் விரிவுரையாற்ற உலமா அணி செயலாளர் யூசுப் எஸ்.பி.யை அழைத்தார். பல்வேறு சமூகங்களும் மாநாட்டிற்கு வருகை தந்திருந்ததை மனதில் கொண்டு அவரது உரை அமைந்திருந்தது.


அதன்பின்னர் வரவேற்புரை ஆற்றிய துணைச் செயலாளர் ஹாஜா கனி, தொடக்க உரையிலேயே மக்களை எழுச்சியூட்டினார். ''உணவுக் காக மானை அடித்துக் கொல்கிற பு­யைவிட, தன் குஞ்சுக்காக பருந்திடம் போராடுகிற கோழியின் வீரம் பாராட்டுக் குரியது. பண பலம், பதவி பலம், அடியாள் பலம் என அரசியலுக்கான பல்வேறு பலங்கள் தேவைப்பட்டாலும் அதையெல்லாம நம்பாமல், சத்தியத்தின் வ­மையையும், திரண்டிருக்கும் உங்களின் பலத்தையும் துணையாகக் கொண்டு மனிதநேய மக்கள் கட்சி களமிறங்குகிறது'' என்றார்.


அவரைத் தொடர்ந்து மனித உரிமைகள் அணி செயலாளர் அன்வர், மருத்துவ சேவை அணி செயலாளர் எம்.எம்.பாஷா, வர்த்தகர் அணி செயலாளர் யாஸீன், தொண்டரணிச் செயலாளர் ரபீக், மாணவர் அணி பொருளாளர் அமீன், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுலாபிதீன் ஆகியோர் ஒருவர்பின் ஒருவராக தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். உலமா அணி பொருளாளர் மவ்லவி நாசர் உமரி உருது மொழியில் ஆற்றிய கம்பீர உரை கூட்டத்தைக் கட்டிப் போட்டது.
இவர்களது உரைகள் தொடர்ந்து கொண்டே இருக்க, மறுபுறம் திடல் நிறைந்து கொண்டிருந்தது. மேடையில் தலைமை நிர்வாகிகளும், துணைச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள், தலைமைக்கழகப் பேச்சாளர்கள், வெளி நாட்டுப் பிரதிநிதிகள் என அமர்ந்திருந்த குழு திடல் நிரம்பும் மக்கள் வெள்ளத்தை ரசித்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தது.


இறுதியாக, தலைமைக்கழகப் பேச்சா ளர்கள் கோவை ஜாஹிர், கோவை செய்யது ஆகியோர் தங்கள் பாணியில் தீர்மானங்களை முன்மொழிந்து பேசி வரவேற்பைப் பெற்றனர்.


போதிய நேரமில்லாததால் தலைமை யேற்ற ஹாருண் ரஷீது அவர்கள், பேச்சாளர்களை 5 நிமிடத்திற்குள் பேசி முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். மாலை 6 மணி நெருங்கும்போது 14 கோபுரங் களில் கட்டப்பட்ட ராட்சத விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிரத் தொடங்கியது.


அப்போது மேடைக்கு வாழ்த்து ரையாளர்கள் ஒருவர்பின் ஒருவராக வருகைதரத் தொடங்கினர். வெளியே வாக்கி டாக்கி கருவிகளுடன் மக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் நின்ற தொண்டரணியினர் கட்டுக்கடங்காமல் திரண்ட மக்கள் வெள்ளத்தை முறைப் படுத்தத் திணறும் செய்திகள் மேடையில் இருந்த தலைவர்களை வந்தடைந்த வண்ணமிருந்தன.


தாம்பரத்தைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகன அணிவகுப்பு கள் போக்குவரத்து சிக்கலில் தவிப் பதாகவும், மக்கள் திடலுக்குள் நுழைய முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் அலறின.


மகிழ்ச்சியும் பரபரப்பும் குதூகலமிட, மேடை நிகழ்ச்சிகளும் விறுவிறுப்பாக நகர்ந்தது. மக்கள் கூட்டம் திட­ல் நிறைய நிறைய தக்பீர் முழக்கங்களும் எழும்பிய வண்ணமிருந்தன. இடையில் ஹாஜாகனி எழுதிய ம.ம.க.வின் கொள்கை விளக்கப் பாடலை ஆயிரம் விளக்கு உசேனின் மகன் அப்துல் காதர் தன் பிசிறற்ற குரலில் பாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.


மாநில துணைச் செயலாளர்கள் இஸ்மாயில், கோவை சாதிக் ஆகியோர் தீர்மானங்களை வாசிக்கும் போது மக்ரிப் தொழுகைக்கான நேரம் நெருங்கியது. இதனால் முதல் அமர்வு நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது. கடும் பனி மூட்டம் தொடங்கியதால மக்கள் அதை எதிர் கொண்டே அமர்ந்திருந்தனர்.


மக்ரிப் தொழுகைக்கான நேரம் நெருங்கியதும் மவ்லவி அப்துல் காதர் மிஸ்பாஹி அவர்கள் பாங்கலி முழங்கினார். அப்போது அவ்வளவு பெரிய திடலில் நிறைந்திருந்த கூட்டம் மெய் மறந்து அதை காதில் வாங்கியது. அந்த பரபரப்பான சூழலில் நிலவிய திடீர் அமைதி எல்லோருக்கு ஏதோ ஒரு வகையான உள்ளச்சத்தை ஏற்படுத்தியது.


பலர் நின்ற இடத்திலேயே தொழுதனர். பலர் தொழுகைக்கான இடத்தை நோக்கி நகர்ந்தனர். ஒளு செய்யும் பகுதி நெரிசல் ஆனது. மேடையில் இருந்தவர்கள் மேடையிலேயே தொழுதனர். அப்போது பத்திரிகையாளர் பகுதியில் இருந்த நண்பர்கள் மிகுந்த பவ்யத்தோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.


பிறகு மாநாட்டின் இரண்டாம் அமர்வான வாழ்த்தரங்கம் தொடங்கியது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்குவார் என தமுமுக தலைவர் பேராசியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அறிவித்தார். கட்சியின் தொடக்க விழாவை உணர்த்தும் பொருட்டாக தமுமுகவின் முன்னாள் முதல் பொரு ளாளர் சையத் நிஸார் அஹ்மத் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் கறுப்பு, வெள்ளை, கறுப்பு நிற கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு தமுமுக தலைவர் கள் பத்திரிகையாளர்களுக்கு கொடியை அறிமுகப்படுத்தினர்.


இரண்டாம் அமர்வின் முதல் நபராக சென்னை வடபழனி பள்ளிவாசல் இமாம் மவ்லவி தர்வேஸ் ரஷாதி அவர்கள் அமர்க்களமான ஒரு எழுச்சியுரையை நிகழ்த்தினார். ''இந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு சீட்டு கலாச்சாரம் இன்றோடு முடிந்துவிட்டது'' என பேச, லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் அதை உணர்ச்சிகரமாக ஆமோதித்தது.


அவரைத் தொடர்ந்து பேசிய சுவாமி சுரேஷ் கானி சுவாமியின் உரை படுநேர்த்தியாக இருந்தது. ''இறைவனின் திருப்பெயரால்...'' என்ற வாசகத்தை சுட்டிக் காட்டி, இந்த மாநாட்டிற்கு ஆண்டவனே தலைமை தாங்குகிறான் என்று அவர் கூறியதும், எல்லோரின் கவனமும் அவரது பேச்சின் பக்கம் திரும்பியது. திருக்குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டி பேசிய அவர் முழு மாநாட்டையும் வசீகரித்தார் என்றால் அது மிகையாகாது.


அவரைத் தொடர்ந்து தாத்தா ரெட்டை மலை சீனிவாசனார் பேரவையின் தலைவர் எஸ்.நடராஜன் பேசினார். தலித் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியவர், தலித் இயக்கங்கள் தமுமுக விடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அஹ்லுஸ் சுன்னா ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரி அவர்கள், அரசிய­ல் இறையச்சத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி கவனமுடன் செயல்பட வேண்டியதை சுட்டிக் காட்டினார்.


வாழ்த்தரங்கம் நிகழ்ந்து கொண்டிருந்த போது திடல் நிரம்பி கூட்டம் திமிறி, வெளியேயும், கூட்டம் திமிறி, அலை மோதிய பரபரப்புகள் எங்கும் பேரெழுச் சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.


இறுதியாக வாழ்த்துரை வழங்க வந்த அரசியல் விமர்சகர் வீரபாண்டியன் அவர்கள், தமுமுகவின் சேவைகளை கண்டு தான் வியந்ததைப் பட்டிய­ட்டுப் பேசி தன்னை தமுமுகவின் தீவிர ரசிகன் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார்.


வாழ்த்தரங்கம் நிறைவு பெற்று இறுதி அமர்வு தொடங்கியது. அப்போது கோவை ரபீக் எழுதிய ம.ம.க.வின் கொள்கை விளக்கப் பாடலை கோவை சாகுல் தன் வெண்கலக் குரலில் பாடி கூட்டத்தை ஆளுமை செய்தார்.


முதல் அமர்வில் நேரமில்லாததால் பேச வாய்ப்பிழந்த மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான், ஜே. அவுலியா மற்றும் மாநிலச் செயலாளர்கள் மௌலா நாசர், காஞ்சி ஜுனைத், மதுரை கௌஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தீர்மானங்களை வலியுறுத்திப் பேசிவிட்டு அமர்ந்தனர்.


இவர்களைத் தொடர்ந்து மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தீப்பொறி உரையை நிகழ்த்த, தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத் துல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் பரபரப்பான உரைகளை நிகழ்த்தினர்.


கடும் பனிப்பொழிவு ஒருபுறம் கொட்ட, மாநாட்டின் 30 சதவீத பரப்பளவை நிரப்பிய பெண்கள் கூட்டம் மெல்ல மெல்ல வெளியேறத் தொடங் கியது. குழந்தைகளால் குளிரையும், பனியையும் தாங்க முடியவில்லை. அதனால் தலைவர்களின் பேச்சுகள் அனைத்தும சுருக்கமாக முடித்துக் கொள்ளப்பட, இரவு 10.30 மணியளவில் காஞ்சி மாவட்டத் தலைவர் மீரான் நன்றியுரை கூறு. மாநாடு புதிய சரித்திரத்தை தொடங்கிய திருப்தியுடன் நிறைவடைந்தது.
அதன்பிறகு மாநிலச் செயலாளர் தமிமுன் அன்சாரி தொடர்ந்து போக்கு வரத்து குறித்தும், காணாமல் போனவர் கள் குறித்தும் அறிவிப்பு செய்து கொண்டே இருந்தார்.


இரவு 10.45க்கு கலையத் தொடங்கிய கூட்டம் திடலை விட்டு கலைய 1 மணி நேரம் பிடித்தது. வெளியே வாகன நெரி சலால் இரவு 2 மணி வரை வாகனங்கள் வெளி யேறியபடியே இருந்தன.


தாம்பரத்தைச் சுற்றிலும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் ஸ்தம்பித்து நின்ற செய்தியை போக்குவரத்து காவலர்களின் வயர்லெஸ் போன்கள் அலறியபடி அறிவித்துக் கொண்டே இருந்தன.


நாம் நுழவெற்றிடங்கள்! நாம் நுழைந்து விட்டால் அவை வெற்றி இடங்கள்!
என்ற முழக்கத்தின் மீது சமுதாயமையாதவரை அழுத்தமாக தன் ஆதரவைப் பதிவு செய்துவிட்டது.

No comments :