Sunday, June 21, 2015

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகராட்சியில் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக 

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு.

அதுசமயம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வீதிகள் தோறும் வீடுகளில் அன்றாடம் குப்பைகளை சேகரிப்பதற்காக 21 தள்ளு வண்டிகள் புதிதாக வாங்குவதற்கு ஆவண செய்து தர வேண்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதுபோல் கீழக்கரை நகராட்சிப்பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிமூலம் புதிய சொந்த கட்டிடங்கள் கட்டித்தருவதற்கும் கோரிக்கை தரப்பட்டது.

மேலும் கீழக்கரை பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான குடிதண்ணீர் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடின்றி கிடைத்திட அதற்கான திட்டங்களை மன்றத்தின் மூலமாக ஆவண செய்து வழங்கும்படி அறிவுறுத்தினார்கள்.

இந்த நிகழ்வுகளின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள், 21 வது வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

உடன் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி, மற்றும் நிர்வாகிகள் யாசர் அரபாத், நூருல் அஃப்பான், மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments :