Saturday, May 16, 2015

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு



மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மண்டபம் ஒன்றியம், வழுதூர் ஊராட்சி , வாலாந்தரவை கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக ரூபாய்.17.14 பதினேழு லட்சத்து பதினான்கு ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம், வழுதூர் ஊராட்சி , வாலாந்தரவை கிராமத்தில் பொதுமக்களின் வசதிகளுக்காக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வந்தது.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர் DrM.H.ஜவாஹிருல்லா MBA.,M.Phil.,PhD.,MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2013 - 2014 ம் ஆண்டின் கீழ்மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 17.14 பதினேழு லட்சத்து பதிநான்காயிரம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டிருந்தது.
அப்பணிகள் நிறைவுற்று ஊர் மக்கள் முன்னிலையில் புதிய பேவர் பிளாக் சாலை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.மேலும் ஊர் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் புதிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது .ராமநாதபுரம்:வாலாந்தரவையில் கட்டப்படும் சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.வாலாந்தரவை மக்கள் உடல் நலம் பாதிப்பின்போது 10 கி.மீ., தூரமுள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, 17 கி.மீ.,தூரமுள்ள புதுமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.இங்குள்ள துணை சுகாதார நிலையம், புதன்கிழமை மட்டும் செயல்படுகிறது.
நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளது. குயவன்குடி, தெற்குவாணி வீதி, வாலாந்தரவை துணை சுகாதார நிலையங்களை ஒன்றிணைத்து வாலாந்தரவையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.சுகாதார நிலையம் கட்ட ஓ.என்.ஜி.சி., நிறுவனம், தனியார் தொழிற்சாலைகள் நிதி வழங்க முன் வந்தன. இதையடுத்து ஊருக்கு நடுவே, ஒரு ஏக்கரில் பொதுமக்கள் சார்பில் இனாமாக நிலம் வழங்கப்பட்டது.ரூ.15 லட்சத்தில் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட வாலாந்தரவையில் கட்டப்படும் சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஊராட்சித் தலைவர் முனியாண்டி அவர்கள் கூறும்போது ஊராட்சி பகுதியில் உள்ள மக்கள் நோய் பாதிப்பின்போது சிகிச்சைக்கு ரெகுநாதபுரம், புதுமடம்,ராமநாதபுரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், இங்கு ஓ.என்.ஜி.சி., தொழிற்சாலைகள் பங்களிப்புடன் அமையும் சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றார் .இதன் தொடர்ச்சியாக இன்று வாலாந்தரவைக்கு புதிய பேவர் பிளாக் சாலை திறப்பு நிகழ்வுக்கு வந்திருந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் புதிதாக கட்டப்பட்டும் மருத்துவமனையை தரம் உயர்த்தி தர பரிந்துரை செய்திடக்கோரி கிராமம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும் என கூறினார்கள்.இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட, ஒன்றிய , கிளை நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments :