Thursday, May 7, 2015

இராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2015 இல் தேர்வு நடைபெற்ற 121 பள்ளிகளில் மொத்தம் 14,844 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,051 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி சதவீதம் 94.66 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டு மார்ச் 2014ல் தேர்ச்சி சதவீதம் 93.06 விழுக்காடு ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.6 விழுக்காடு தேர்ச்சி அதிகரித்துள்ளது.

10 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி
________________________________________

இராமநதபுரம் மாவட்டத்தில் 64 அரசு பள்ளிகளில் 10 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும,; 28 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியும் மற்றும் 29 மெட்ரிக் பள்ளிகளில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி என மாவட்டத்தில் மொத்தம் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக பயின்று 1172 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் நேஷனல் அகடாமி மாண்டிஸோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.சுருதி முதலிடத்தையும், 1170 மதிப்பெண்களைப் பெற்ற இராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி எம்.மகேஷ்வரி இரண்டாம் இடத்தையும், 1168 மதிப்பெண்களைப் பெற்ற இராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் ஜி.பிரகதீஷ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவ மணிகள் சாதனை
______________________________________________________

அரசு பள்ளிகளில் இராமநாதபுரம், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி என்.தங்கவேல் என்பார் 1120 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், பனைக்குளம் அரசு மகளிர் பள்ளியைச் சார்ந்த மாணவி எ.சம்சூல் ஹத்தியா மற்றும் கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவன் எ.பழனிமுருகன் ஆகியோர் 1111 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் என்.பிரேம் சந்த் என்பார் 1110 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

வெற்றிப் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இவர்கள் சாதனை பின் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

அரசு பள்ளிகளை இரண்டாம் தரமாக கருதுவோரை வாயடைக்கும் வகையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மணிகள் சாதனை புரிய பெரிதும் உழைத்த அரசு பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவ மணிகள் அனைவரும் எனது இராமநாதபுரம் தொகுதியைச் சேரந்த்வர்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பிற்கு பெரிதும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து செயல் திட்டமும் தீட்டி செயல்படும் இராமளநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் இ.அ.ப. அவர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




இப்படிக்கு 
ஜவாஹிருல்லாஹ் 

No comments :