Saturday, October 12, 2013

மாணவர் சமூகம் மாண்பு பெற அனைத்து தளங்களிலும் போர்க்கால அடிப்படையில் முயற்சி முன்னெடுக்கப்படவேண்டும்.

மாணவர் சமூகம் மாண்பு பெற அனைத்து தளங்களிலும் போர்க்கால அடிப்படையில் முயற்சி முன்னெடுக்கப்படவேண்டும். 

த மு மு க தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை


தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் ஒரு தனியார் கல்லூரி முதல்வர் அக்கல்லூரி மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்துள்ளது. மாணவர்களின் இந்த விபரீத போக்குக்கு காரணம் என்ன ? மாணவர்களை நல்வழிபடுத்தும் ஆசிரியர் சமூகம் மீது மாணவர்களுக்கு பகை உணர்ச்சி ஏற்பட காரணம் என்ன ? இது போன்ற வினாக்க்கலுக்கு விடை காணும் முன்பு எதுவாக இருந்தாலும் கொலை, வன்முறை போன்றவற்றை தீர்வாக கருதும் செயலை யார் செய்தாலும் அந்த செயல் நிச்சயம் கண்டிக்ககூடியதே . கல்வி கற்று எதிர்கால சமூகத்தை எழிலுற கட்டமைக்க வேண்டிய இன்றைய மாணவர் சமூகம் ஆசிரியர் சமூகத்தை விரோதமாக பார்க்கவேண்டிய அவசியம் என்ன ? 

மாணவர்களிடையே திடீரென புகுந்திருக்கும் இந்த வன்முறை மிகவும் ஆபத்தானது. இது போன்ற நிகழ்வுகள் கற்போர் கற்பிப்போர் என்ற இரு சாராருக்கும் ஒரு சேர அவப்பெயரை தரக்கூடியது என்றால் அது மிகையன்று. இதனை உடனடியாக களைய வேண்டியது அவசியமாகும். இதற்கான பொறுப்பு அரசுக்கு மட்டும் அல்ல அனைத்து தரப்பினருக்கும் உண்டு . அண்மையில் சென்னை மாநகரத்தில் கல்லூரி மாணவர்களிடையெ சச்சரவுகளும் தகராறுகளும் ஏற்பட்டு மாநகரத்தையே பதட்டத்தில் ஆழ்த்தியதை மறந்து விட முடியாது. இன்றைய கல்விக்கூடங்கள் வணிக மய மாக்கப்பட்டு ஆசிரியர் சமூகமும் மாணவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு கடமையாற்ற வில்லை என எழும் குற்ற சாட்டுக்களையும் புறம் தள்ள முடியவில்லை.

இன்றைய ஊடகங்களில் குறிப்பாக திரைத்துறை மற்றும் தொலைகாட்சிகளில் தொடர்ந்து பரப்பப்படும் ஆபாசம் , மற்றும் வன்முறைகள் இளைய தலை முறையினரை தவறான பாதைக்கு இட்டு செல்லும் போக்கு போன்றவை நிச்சயம் கவலைக்குரிய ஒன்றாகும் இது போன்ற தீயவைகள் கட்டுப்படுத்தப்படவேண்டியவை மட்டும் அல்ல கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டியவையாகும் .

உடனடியாக அரசும் ஆசிரியர் சமூகமும் மாணவர் சமூகமும் , பெற்றோர்களும் இணைந்து இந்த தீய சூழலை ஒடுக்க முன் முயற்சிகள் எடுப்பது அவசியமாகும் ஒவ்வொரு கல்வி கூடங்களிலும் உடனடியாக மாணவர் ஆசிரியர் பெற்றோர் உள்ளிட்டோரின் மனக்குறைகளை களையும் நோக்கோடு நிரந்தர கவுன்சிலிங் மையங்கள் அமைக்கப்படவேண்டும்

மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்கும் வழியாக விளங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

ஜே எஸ் ரிபாயி

தலைவர் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம்

No comments :