Tuesday, October 1, 2013

இன்று தினமலரில் வெளியான செய்தியை பேரா ஜவாஹிருல்லா மறுத்துள்ளார் இது குறித்து அவர் தினமலர் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

இன்று தினமலரில் வெளியான செய்தியை பேரா ஜவாஹிருல்லா மறுத்துள்ளார் இது குறித்து அவர் தினமலர் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

நாள்: 01.10.2013
பெறுநர்:
ஆசிரியர் அவர்கள்
தினமலர்
சென்னை

பேரன்புடையீர்!

தினமலர் 01.10.2013 தேதியிட்ட நாளேட்டின் மதுரை உட்பட சில பதிப்புகளில் 5 ஆம் பக்க செய்தியில் தமுமுக., ஜவாஹிருல்லா ராஜினாமா லோக்சபா தேர்தலில் களமிறங்க முடிவு என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும், கடந்த சட்டமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்று அன்று முதல் இன்றுவரை எனது தொகுதி மக்களுக்காக பணி செய்துவருகிறேன்.

இனிவரும் காலங்களிலும் எனது இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.

இந்த செய்தியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதும் மக்களுக்காக செலவு செய்யப்பட்டிருப்பதும், இராமநாதபுரம் தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள நன் நம்பிக்கையின் காரணமாகவும் என்னை இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தமுமுக முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர் யார் என்பதை கட்சியின் உயர்நிலைக்குழு தான் முடிசெய்யும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதி உடைய வேட்பாளர்களுக்கு எங்கள் கட்சியில் பஞ்சம் இல்லை.

எனவே நான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதென்ற பேச்சுக்கே இடமில்லை

தினமலரின் செய்தியால் இன்று காலை முதல் எனக்கு எனது தொகுதி மக்களிடமிருந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்தவன்ணம் உள்ளன. இதனால் நான் மிகவும் மனஉலைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன்.

எனவே இந்த மறுப்பு செய்தியை தங்களது நாளிதழிலும், இணையதளத்திலும் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments :