Thursday, December 8, 2011

பாபர் மசூதி இடிப்பு தினம் ராமநாதபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்






இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டத்தில் அரசு பணிமனை முன்பு நடைபெற்ற டிசம்பர் 6 - கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் 2400௦ க்கு மேற்பட்ட சகோதரர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம், டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மதிமுக துணைப் பொதுச் செயலர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக, பாபர் மசூதி மீட்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மதிமுக துணைப் பொதுச் செயலர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள் பாபரை தொழுதுவிட்டு செல்கின்றனர். முகலாய மன்னர் பாபர் முடிசூட்டி இருந்த காலத்தில், இந்து ஆலயங்களுக்கும் மானியங்களை வழங்கியிருக்கிறார்.

இந்திய தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். அவரவர் மதச் சுதந்திரங்களில் மற்றவர்கள் தலையிடக்கூடாது.

பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையாக உள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டியது கடமையாகும். எந்த உயிருக்கும் எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்கிறது இஸ்லாம் என்றார் நாஞ்சில் சம்பத்.

ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார்.

மாவட்டப் பொருளாளர் அன்வர் அலி, மாவட்டச் செயலர்கள் சாதிக்பாட்சா, தஸ்பீக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுகவின் மாநிலப் பேச்சாளர் கோவை ஜெயினுலாவுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் முருகபூபதி, தமுமுக வர்த்தக அணிச் செயலர் பாபு இஸ்மாயில் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவேண்டும். லிபர்ஹான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மீதும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நகர் தலைவர் சுல்த்தான் நன்றி கூறினார்.


No comments :