Sunday, December 11, 2011

சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுகவின் 43 ஆவது மண்டல செயற்குழு விமரிசையாக நடைபெற்றது.


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் கடந்த வெள்ளியன்று (09.12.2011) ஜுபைலிலுள்ள தனியார் வளாகத்தில் சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுகவின் 43 ஆவது மண்டல செயற்குழு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் அரைமணி நேர தாமதத்துடன் துவங்கினாலும் ஜுபைல் நகர துணைத்தலைவர் சகோ.ரிஃபாயி அவர்களின் துடிப்பான வரவேற்புரையைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சித் துவக்கமாக மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் ஆற்றிய தலைமை உரையில் நேரந்தவறாமையின் அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன் உள்ளாட்சி தேர்தலில் தமுமுக மற்றும் மமக வின் செயல்பாடு மற்றும் அதன் தாக்கமும் வீச்சும் எந்த அளவில் உள்ளது என்பதனை சுருக்கமாக எடுத்துரைத்தார். இயக்க செயல்பாடுகளில் முன்னேற்றம் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

தலைவரின் உரையைத் தொடர்ந்து மண்டலம் பொதுச் செயலாளர் சகோ.இஸ்மாயில் அவர்கள் கிளைவாரியான செயல்பாடுகளின் அறிக்கையைப் பெற்று கலந்தாலோசனை செய்தார்.

அதனைத் தொடர்ந்து கிளை நிர்வாகிகளின் கருத்துரைகள் பெறப்பட்டன.

ஜும்ஆ மற்றும் உணவு இடைவேளைக்குப் பின் சகோ.நிஸார் (ஜுபைல் மாநகர செயலர்) அவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

அனைவரின் முன்னேற்றத்திற்காக 'உணர்வாய் உன்னை!' நிகழ்ச்சியின்
ஒரு பகுதியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

பின்னர் தமிழகத்திலிருந்து மாநில துணைப் பொதுச் செயலாளர் மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி முதன் முறையாக அலைபேசி வழியாக அனைவரிமும் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மண்டல பொருளாளர் சகோ.நஸ்ருத்தீன் ஸாலிஹ் அவர்கள் நிதிநிலை அறிக்கையின் சாராம்சத்தை விளக்கிக் கூறினார்.

அஸர் மற்றும் தேனீர் இடைவேளைக்குப் பின் கலந்துரையாடல் நடைபெற்றது.

அஸர் மற்றும் தேனீர் இடைவேளைக்குப் பின் மாநிலத் தலைவரும், ராமநாதபுர எம்.எல்.ஏ வாகவும் உள்ள பேரா.டாக்டர்.எம்.ஹெச்.ஜே. அவர்கள் அலைபேசி வழியாக உரையாற்றினார்.

தமுமுகவைப் பின்பற்றி பலரும் முஸ்லிம் அரசியல் கட்சி துவங்கி நமக்குப் போட்டியாக நடத்தி வருகின்றனர். அவர்களை இயக்கும் பிற பொருளாதார சக்திகள் மூலமாக முழுநேர பணியாளர்களை நியமித்து நமக்கு எதிராக வலுவாக செயல்படத் துவங்கியுள்ளனர்.

இதனிடையே நமது நிர்வாகிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டுமென்ற கிழக்கு மண்டல தமுமுக நிர்வாகிகளின் வற்புறுத்தலுக்கிணங்க அத்தகைய பயிற்சி முகாம்கள் நடத்த உத்தேசித்துள்ளோம்.

இத்துடன்,

நமது ஊடகப்பணிகளின் செயல்பாடுகள் துரிதப்படுத்தவும், மேம்படுத்தவும், முழுநேர பணியாளர்களை நியமிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் உள்ளதால் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் உதவியும் அவசியம் எனக் குறிப்பிட்டார். இதன் பின் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தலைவர் பதிலளித்தார்.

குறிப்பாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென வாரியம் குறித்து எதிர்வரும் கூட்டத்தொடரில் எடுத்துரைப்பதாக உறுதியளித்துள்ளார்.

மமகவின் உள்ளாட்சி மன்ற மாற்றுமத சதோர சகோதரிகளின் நிலை குறித்தும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் செயல் அறிக்கை பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

மாநிலத் தலைவரின் விரிவான உரை மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிக்குப் பின் மாநில அளவில் நடத்த உத்தேசிகப்பட்டுள்ள தர்பியா பயிற்சி வகுப்புகள் குறித்த விளக்கங்களை மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் எடுத்துரைத்தார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில்,

நிர்வாகிகளின் பொறுப்புகளும் பங்களிப்பும் குறித்து மண்டலச் செயலாளர் சகோ.இஸ்மாயில் எடுத்துக் கூறினார். இறுதியாக சகோ.ஸக்கரிய்யாவின் சிறப்புரையைத் தொடர்ந்து சகோ.இம்தியாஸ் நன்றியுரையாற்றினார்.

அனைவரும் புத்துணர்ச்சியுடன் கலைந்தனர்.

No comments :