Monday, March 10, 2014

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக ஹைதர் அலி அறிவிப்பு

                


 மயிலாடுதுறை தொகுதிக்கு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக ஹைதர் அலி அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி
மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ. ஹைதர் அலி

பத்திரிகை அறிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பிஎம்ஆர். சம்சுதீன் வெளியிடும் அறிக்கை
இன்று காலை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு இன்று காலை சென்னையில் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழுக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, உயர்நிலைக் குழு உறுப்பினர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லா உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் ப.அப்துல் ஸமது, குணங்குடி அனிபா, எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, கோவை உமர் உள்ளிட்ட 150 செயற்குழு உறுப்பினர்கள் பங்குக் கொண்டார்கள். 
இக்கூட்டத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் முன்னாள் தலைவர் எஸ். ஹைதர் அலி அவர்களை வேட்பாளராக நிறுத்துவது என்று ஏகமனதாக முடிவுச் செய்யப்பட்டது.

தன்விபரக் குறிப்பு (பயோ டேட்டா)
பெயர்: எஸ் ஹைதர் அலி
தந்தைப் பெயர்: செய்யத் முஹம்மது
வயது: 57
பிறந்த ஊர்: தொண்டி
மனைவி பெயர்: ஜம்ரூத் நிஷா
குழந்தைகள்: 1. முஹம்மது நாஸீர்
2. நாபிஆ
3. நஃபில்
தொழில்: வியாபாரம்
பொறுப்புகள்: 1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர். 1995 முதல் தமுமுகவின் தலைமை நிலையச் செயலாளர் 1997 முதல் 2012 வரை தமுமுகவின் பொதுச் செயலாளர். தற்போது தமுமுகவின் மூத்தத் தலைவர். மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்கம் முதல் (2009) அதன் உயர்நிலைக் குழு உறுப்பினர். 
2. முத்த தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான சென்ற திமுக ஆட்சியில் 2007 முதல் 2009 வரை தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றி ஆக்கிரமிப்பில் இருந்த கோடிக்கணக்கான சொத்துகள் மீட்கப்படுவதற்கு அரசு உதவியுடன் சிறப்பாக காரணமாக இருந்தார். இவர் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவராக இருந்த வேளையில் வக்ப் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு அக்குழு இந்திய முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு இவர் தலைமையிலான தமிழ்நாடு வக்ப் வாரியம் சிறப்பான முறையில் செயல்பட்டதாக சான்று அளித்தது. இவர் தலைவராக இருந்த போது வக்ப் வாரியத்தின் நிர்வாகத்தின் மின்ஆளுமை நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஐரோப்பா கூட்டமைப்பின் தலைநகரமான ஸ்டராட்ஸ்பெர்கில் நடைபெற்ற மனிதஉரிமை தொடர்பான மாநாட்டில் பங்குக் கொண்டார்.
இது தவிர சவூதி அரேபியா, கத்தார், குவைத், மஸ்கட், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டிருக்கிறார்.
4. தெரிந்த மொழிகள்:
தமிழ், இந்தி, உருது, அரபி மற்றும் ஆங்கிலம்

No comments :