Thursday, May 30, 2013

சென்னை-இராமேஸ்வரம் விரைவு இரயில் நேரத்தை மாற்றக் கோரி தெற்கு இரயில்வேக்கு எம்.எல்.ஏ. கடிதம்

சென்னை-இராமேஸ்வரம் விரைவு இரயில் நேரத்தை மாற்றக் கோரி தெற்கு இரயில்வேக்கு எம்.எல்.ஏ. கடிதம்

சென்னை தெற்கு இரயில்வே, தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் மற்றும் தலைமை ரயில் இயக்க மேலாளர் அவர்களிடம் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சென்னை-இராமேஸ்வரம் விரைவு ரயில் (எண்: 16713) தினமும் மாலை 5 மணியளவில் புறப்பட்டு மாவட்டத் தலைநகரான இராமநாதபுரத்திற்கு இரவு 2:55 மணிக்கும், இராமேஸ்வரத்திற்கு அதிகாலை 4:45 மணிக்கும் வந்தடைகிறது. அதேபோல் சென்னை-இராமேஸ்வரம் விரைவு ரயில் (எண்:16701) சென்னையிலிருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு இராமநாதபுரத்திற்கு காலை 9:56 மணிக்கும், இராமேஸ்வரத்திற்கு முற்பகல் 11:40 மணிக்கும் வந்தடைகிறது. இந்த இரு இரயில் வருகை நேரமும் பயணிகளுக்கு மிகுந்த சிரமப்பத்தை ஏற்படுத்துகிறது, முதல் விரைவி இரயிலில் இராமநாதபுரத்திற்கு வருகை தரும் பயணிகள் இரவு 2:55 மணியிலிருந்து காலை 5 மணிவரை பேரூந்துக்காக இரயில் நிலையத்திலேயே காத்துக்கொண்டிருக்கவேண்டியுள்ளது. அதேபோல் இரண்டாவது இரயிலில் இராமநாதபுரத்திற்கு வருகை தருபவர்கள் சுமார் 12 மணியளவில் இரயில் நிலையத்தை விட்டு வெளியேறுவதால் பயணிகளின் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே இரயில்வே துறை இரண்டு விரைவு இரயில்களில் ஏதாவது ஒரு இரயில் காலை 7 மணியளவில் இராமநாதபுரத்தை வந்தடையும்படி நேரத்தை மாற்றியமைக்க கேட்டுக்கொள்கிறேன்

No comments :