Friday, September 14, 2012

சென்னை: அமெரிக்க துணை தூதரகம் மீது த.மு.மு.க.வினர் கல்வீசி தாக்குதல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இன்று அளித்த பேட்டியில்:-

இறைவனின் இறுதி தூதர் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வாழும் யூதரான சாம்பாஸைல்
 என்பவர் தி இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரின் உள்ளங்களையும் புண்படுத்தியுள்ளது.

உலக வரலாற்றில் ஒப்பற்ற முறையில் சீரிய மாற்றங்களை கொண்டு வந்த 100 நபர்களில் முதன்மையானவர் நபிகள் நாயகம் என்று ஒரு அமெரிக்க ஆய்வாளர் மைக்கல் ஹார்ட் நீண்ட ஆய்விற்கு பிறகு அறிவித்தார்.

ஆனால் இந்த படத்தை தயாரித்தவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கருத்துத் தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கை கண்டித்தும் இந்த படத்தை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இன்று மாலை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை 4.45 மணி அளவில் த.மு.மு.க.வினர் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சிலர் தூதரகம் மீது கற்கள் வீசியதாக தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா படமும், அமெரிக்க கொடியும் எரிக்கப்பட்டன.

இந்த போராட்டம் காரணமாக அண்ணாசாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments :