Saturday, February 27, 2010

கீழக்கரை முதல் ராமநாதபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமுமுக கோரிக்

25-2-2009 அன்று நாடாத விபத்து புகை படம்




கீழக்கரை முதல் ராமநாதபுரம் வரை செல்லும் கிழக்குக் கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமுமுக கோரிக்கை அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நெடுஞ்சாலையில் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நிகழ்ந்து, பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இச்சாலையில், பல கல்லூரிகள் உள்ளன. இதனால் இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ராமேசுவரம், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்து போகும் கனரக வாகனங்களும் இவ்வழியாகவே செல்கின்றன. கீழக்கரை அகஸ்தியர் கோயில் கிழக்குக் கடற்கரை தேசிய நெடுஞ்சாலை வளைவுப் பகுதியில் மாதத்திற்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து விபத்துகள் வரை நிகழ்கின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள்தான். எனவே, இப்பகுதியில் செல்லும் வாகனங்களின் அதிவேகத்தைக் கட்டுப்படுத்தவும், அதிகரித்துவரும் விபத்துகளை தடுக்கவும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் காவல்துறை ஈடுபடவேண்டும் என்று கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், வாலிநோக்கம், இதம்பாடல், சாயல்குடி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் கீழக்கரை தமுமுக கோரியுள்ளனர்.

No comments :