Saturday, February 6, 2010

வேலூர் மறியல் போராட்டம் தமுமுகவினர் கைதாகி விடுதலை


E-mailPrintPDF
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். குறிப்பாக உருது மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் அதிக அளவில் தங்களுடைய வசிக்கும் நகரம் வேலூர். அந்நகர மக்களுக்கு தேவையான கல்வியை அளிப்பதற்காக கடந்த 1906 ஆண்டு அப்பகுதி முஸ்லிம்களால் அவர்களுடைய சொந்த பணத்தின் மூலம் உருது வழி கல்வியில் ஓர் உயர்நிலை பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. அப்பள்ளிக்கூடம் கடந்த 1978லில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்பொழுது வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இதில் கல்வி பயின்றவர்கள் தற்பொழுது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மருத்துவர் பொறியாளர் மற்றும் தொழிலதிபர்களாக உள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். குறிப்பாக உருது மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் அதிக அளவில் தங்களுடைய வசிக்கும் நகரம் வேலூர். அந்நகர மக்களுக்கு தேவையான கல்வியை அளிப்பதற்காக கடந்த 1906 ஆண்டு அப்பகுதி முஸ்லிம்களால் அவர்களுடைய சொந்த பணத்தின் மூலம் உருது வழி கல்வியில் ஓர் உயர்நிலை பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. அப்பள்ளிக்கூடம் கடந்த 1978லில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்பொழுது வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. இதில் கல்வி பயின்றவர்கள் தற்பொழுது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மருத்துவர் பொறியாளர் மற்றும் தொழிலதிபர்களாக உள்ளனர்.



இன்றைய காலகட்டத்தில் 1660 மாணவ, மாணவியர்களைக் கொண்ட பள்ளிக்கூடம் அவர்களுக்கு கல்வி அளிப்பதற்கு மொத்தம் 17 உருது வழி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளது. அதில் 10 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாக்கப்பட்டு அரசு மற்றும் கல்வித்துறையின் அலட்சியத்தினாலும், மெத்தன போக்கினாலும் நிரப்படாமல் இருக்கிறது.

நிரப்படாமல் உள்ள பணியிடங்களில் கணித பாடத்திற்கென முதுகலை பட்டதாரி ஆசிரியர் சுமார் 12 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் சிறுபான்மை மக்களின் அடிப்படை கல்வி உரிமையை பறிக்கும் செயலில் அதிகாரவர்கங்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவ்விஷயம் குறித்து தமிழக முதல்வர் அப்போதைய வேலூர் மாவட்ட எம்.பி.காதர் மொய்தீன், வேலூர் எம்.எல்.ஏ. ஞானசேகரன், மாவட்ட ஆட்சி தலைவர், பள்ளிக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர்களுக்கு த.மு.மு.க. தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் கழகம் (மாநில அமைப்பு) மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக பலமுறை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு கோரிக்கைகள் வைக்கப்பட்டும், பள்ளியின் சார்பாக படிவம் 1.8 சமர்ப்பிப்பட்டும் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.


இந்நிலையில் கடந்த 5.1.2010 அன்று நடைபெற்ற வேலூர் மாநகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி உருது ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப கோரி த.மு.மு.க தலைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் பள்ளியின் முன்பு மறியல் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. போராட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே காவல்துறை மறியல் போராட்டத்தை வாபஸ் பெறுமாறும் அல்லது ஆர்பாட்டமாக நடத்துமாறும் கோரியது இதற்கு பணியாத த.மு.மு.க திட்டமிட்டபடி மறியல் நடந்தே தீரும் என்பதை காவல்துறைக்கு எடுத்துரைத்தது. மே 9. 2009 த.மு.மு.க. நடத்திய வேலூர் கோட்டை முற்றுகை போராட்டத்தில் திணறிய வேலூர் காவல்துறை இப்போரட்டத்திற்கு முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தியது.

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிகூடம் முன்பு மறியலில் ஈடுபட அனுமதி மறுத்த காவல்துறை, மீறினால் கைது செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு வளையத்தை மேலும் கடுமையாக்கியது,

த.மு.மு.க தலைவர் பேரா. M.H. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் த.மு.மு.க. மாநில துணைப்பொது செயலாளர் J.S. ரிஃபாயி ரஷாதி, மாநில துணை செயலாளர் தருமபுரி சாதிக்பாஷா, ம.ம.க. மாநில அமைப்பு செயலாளர் நாஸிர் உமரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற மறியலில் த.மு.மு.க. தொண்டர்கள், மாணவ, மாணவியர்களின், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்துக் கொண்டு தமிழக அரசின் முஸ்லிம விரோத போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


மறியலின் இறுதிகட்டத்தில் எழுச்சியுரையாற்றிய த.மு.மு.க. தலைவர் பேரா. எம்.ஹெச், ஜவாஹிருல்லாஹ், சர்சார் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுவதில் அதிக அக்கரை கொண்டுள்ளதாக கூறும் தமிழக உடனே வேலூர் முஸ்லிம் உருது பள்ளிக்டத்தில் உள்ள காலியாக உள்ள 10 இடங்களை நிரப்ப வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் தமிழகம் தழுவிய அளவில் போராட்டமும் சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று கூறி கைதானார் அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கைதாயினர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments :