Wednesday, December 31, 2008

ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்

ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்!

அபூசாலிஹ்


உலகின் ஒரே வந்தேறி ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் வன்கொடுமைகள் எல்லை மீறியது. டிசம்பர் 27, 2008ல் இஸ்ரேலின் வான்படை தாக்குதலில் அந்த ஒரே நாளில் மட்டும் 205 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது. 60 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க குழந்தையான இஸ்ரேல் என்ற அந்த முறையற்ற குழந்தை ஜனித் தது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் விரட்டப்பட்ட அவர்களிடம் எந்த பகைமையும் காட்டாது சமாதானத் துடன் வாழ்ந்து வந்த ஒரு தூய சமூகத் தினரை வதைத்து அவர்களது நிலப் பரப்பை முற்றிலும் அபகரித்து தாங்கள் ஒரு இழிமக்கள் கூட்டம்தான் என்பதை நிரூபித்தார்கள். எவ்வித உரிமைகளும் வழங்காது மேற்குலகின் வக்கிரப் புத்தி யுடன் கூடிய நிதி மற்றும் ராணுவ உதவியுடன் அப்பாவிகளை வதைத்தனர்.


இப்பூமி கிரகத்தின் முதல் பயங்கர வாத நாடு இஸ்ரேல். மோசமான பயங்கர வாதிகள் யூதர்கள் என்ற இழிபெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. முஸ்லிம்களின் மூன்றாம் புனிதத்தலம் அமைந்துள்ள தியாக பூமியாம் பாலஸ் தீனத்தை முழுமையாக மீட்கும் நாள் எந்நாளோ என உலக முஸ்லிம்களும் நீதி விரும்பும் அனைத்து மக்களும் ஏங்கித் தவித்தனர். உரிமை வேண்டி போராடிய இயக்கங்களுடன் இரக்கமற்ற முறையில் போர் தொடுத்தனர் யூத கோழைகள். போரின் கொடுமைக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடும் அப்பாவி மக்களைக் கூட யூதவெறிக் கூட்டம் விட்டு வைத்ததில்லை. அகதி முகாம் களைக் கூட, அதிலுள்ள குழந்தைக் கொழுந்துகளைக் கூட கொத்துக் குண்டுகளால் குதறிய கொடுமை இந்த உலகமே கனவிலும் நினைத்துப் பார்க் காதது. ஆம்புலன்ஸ்களைக் கூட குண்டு களால் துளைத்தது. இத்தனைக் கொடு மைகள் இழைத்த இஸ்ரேலைத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் பிற ஐரோப் பிய நாடுகளும், ஏன் மன்மோகனின் அமெரிக்க காதல் அரசும் தலைமேல் தூக்கிப் பிடித்து வருகின்றன. கொண் டாடி, கூத்தாடி வருகின்றன.


இத்தகைய இக்கட்டான நிலையிலும் பாலஸ்தீன மக்களின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆத ரவு வேண்டி நின்றனர். யாசர் அராஃபத் போன்ற வர்களுக்கு தார்மீக ரீதி யிலான ஆதரவினை வழங்கிய இந்தியா போன்ற நாடுகள் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு அணியில் இணைந்து விட்ட நிலையில் பாலஸ் தீன மக்களின் உரிமைப் போருக்கான சர்வதேச ஆதரவு என்பது அரசாங் கங்களின் மட்டத்தில் அறவே இல்லை என்ற நிலையில் உலகெங்கும் உள்ள வெகு ஜன மக்களின் ஆதரவு என்ற உயிர்க் காற்றை மட்டுமே பெற்று பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகம் உலகெங்கும் ஒரு ஏக்கப் பிரச்சாரமாக வெளிப்பட்டி ருக்கிறது.


இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற விடுதலைப் போராளி களின் இயக்கம் தேர்தல் பாதைக்கு திரும்புவதாக அறிவித்தது. முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள் குதித்து பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இஸ்மாயில் ஹனியா, பாலஸ்தீனத்தின் பிரதமரானார்.


போராளி அமைப்பு, தேர்தல் பாதைக்கு பிரவேசம் செய்து பெருவாரியான வெற் றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டவோ, வரவேற்கவோ பரந்த மனம் இல்லாத போலி ஜனநாயக தத்துவ வாதிகளான மேற்குலக அரசுகள் ஹமாஸை அங்கீகரிக்க மறுத்தன. சிறப் பான முறையில் ஆட்சி செய்த ஹமாஸ் அரசை செயல்பட விடாமல் முடக்கும் சதிச்செயலை ஃபத்தாஹ் அமைப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி அமெரிக் காவும் இஸ்ரேலும் செய்தன. பாலஸ்தீன அதிபர் என்று அழைக்கப்படும் மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கோண்டி என்ற கண்டலீசா ரைஸுடனும் அதிக மாக உறவு பாராட்டத் தொடங்கினார். பாலஸ்தீனத்தின் நிதி ஆதாரம் முடக்கப் பட்டது. அரசு அதிகாரிகளுக்குக் கூட மாதாந்திர ஊதியம் வழங்க முடியா அவலத்தை ஹமாஸ் தலைமையிலான அரசு சந்தித்தது. பிற்போக்கு ஆக்கிர மிப்பு சக்திகளின் தீய நோக்கத்தை முறியடிக்கும் விதமாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஒரு சமாதான முன்முயற்சியை மேற்கொண்டார். அதனடிப்படையில் சொந்த சகோதரர் களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையை ஒழித்துக்கட்ட வேண்டும் என விரும்பினார்.ஃபத்தாஹ்வின் அப்பாஸும், ஹமாஸின் தலைவர் ஹாலித் மிஷாலும், இஸ்மாயில் ஹனியா வும் சவூதி அரேபியாவுக்கு வரவழைக் கப்பட்டனர். உணர்ச்சிமிகு சந்திப்பில் எங்கள் மூத்த சகோதரரின் (மன்னர் அப்துல்லாஹ்வின்) கட்டளைக்கு கீழ்ப் படிவோம், சமாதானத்தைப் பேணுவோம் சகோதரச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உள்ளம் உருக உறுதிமொழி மேற்கொண்டனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத் தின்படி ஹமாஸுடன் பத்தாஹ் கூட்டு அமைச்சரவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. சவூதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு இரு பிரிவு தலைவர் களும் போய் சேர்ந்த சில நாட்களில் பிளவும் பிணக்கும் தோன்றின. இது எதிரிகளுக்கு கொண்டாட்டத்தைக் கொடுத்தது. மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவின் அடியொற்றி நடந்தார். ஹமாஸ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஹமாஸின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைகள் போடும் விதமாக பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்கா தனது வக்கிரப் புத்தியைக் காட்டியது. பொருளாதாரத் தடையால் உயிர் காக்கும் மருந்துகள், எரிபொருள், உணவு, மின்சாரம் என அனைத்தையும் இழந்து பெரும் துயரத்தைச் சந்தித்தனர் காஸா பகுதி மக்கள். நிவாரணப் பொருட்களை சுமந்துகொண்டு சர்வதேச உதவிக் குழுக்கள் படகுகளில் வந்த போது அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் அனுமதி மறுத்தது. பொறுமை இழந்த ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.


இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடை யிலான சமாதானப் பேச்சுவார்த்தையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எகிப்து முன்னெடுத்தது. இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஹமாஸுக்கும் இஸ்ரேலுக் கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாதம் 19ஆம் தேதி ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் தொட ருமா? என கேள்விகள் எழுந்தபோது போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட மாட்டாது; போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என அறிவித்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி இஸ்ரேல், எல்லைகளை மூடியது. சொல்லொணாத் துயரங்களை விளைவித்தது. 15 லட்சம் மக்கள் இன்று காஸாவில் வாழ்வாதார உதவிகள் ஏதுமின்றி வாடி வருகிறார்கள். உணவு, உயிர்காக்கும் மருந்துகள் ஏதுமின்றி தவிக்கும் நிலையில் ஹமாஸ் மற்றுமொரு இண்டிஃபாதாவை (மக்கள் போர்) அறிவித்திருக்கிறது.


இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கிய முதல் நாள் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியா னார்கள். இரண்டாவது நாள், மூன்றா வது நாள் என தொடர்ந்து தனது வன்தாக்குதலை இஸ்ரேலை தொடர்கிறது.


இதுகுறித்து காஸா பகுதியின் சமாதான ஆர்வலரும், புகைப்பட செய்தியாளருமான சாமெஹ் ஏ. ஹபீப் குறிப்பிடும் பொழுது “சனிக்கிழமை காலை 11 மணிக்கு எப்.16 வகையைச் சேர்ந்த குண்டுவீசும் 60 விமானங்கள் காஸா பகுதியில் குண்டுமழை பொழிந் தன. நூறு காவல் நிலையங்கள் மற்றும் காஸா பகுதியிலுள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின. முதல் குண்டு வீச்சில் 160 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர் களில் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கட்டடங்களின் இடிபாடுகளுக்கிடையில் ஏராளமான உடல்கள் சிக்கிக் கொண்டுள்ளன. அல்ஜவாஸத் காவல் நிலையத்தில் மட்டும் 70 இளம் காவல்துறை அதிகாரி கள் பலியானார்கள்.


ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக பலியானார்கள். பலியான வர்களில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். ஏராளமான பெண்களும் பலியாகி உள்ளனர்.


காஸாவின் காவல்துறை இயக்குநர் தவ்ஃபீக் அல்ஜாபர் இந்த வன்தாக்குதலில் பலியாகி விட்டார். படுகாயம் அடைந்தவர் களில் மூவர் ஒரே படுக்கையில் கிடத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய பரிதாப நிலை. எழுபதுக்கும் மேற்பட்டோர் எகிப்தின் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.


மான் செய்தி நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் நாசர் அல் லஹாம் தெரிவிக்கும் போது முதல் நாள் தாக்குதலில் 60 போர் விமானங்கள் கண்மூடித்தனமாக தாக்கு தலை நடத்தின.


காஸாவின் அனைத்துப் பகுதிகளும் குறிவைத்து தாக்கப்பட்டன. மாநகரங்கள், பெருநகரங்கள், குக்கிராமங்கள் என எதனையும் விட்டுவைக்கவில்லை.


காஸா, ரஃபா, கான்யூனிஸ், நுசிரியாத் மஹாஜி, பைத்லஹியா, ஜபலிய்யா, பைத் ஹானூன், அல்ஷாதி, ரஃபா பகுதியில் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகள் கூட இந்தக் கொடியவர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை. நடைபெற்ற அக்கிரமம் உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.


பச்சிளம் குழந்தைகள் பள்ளிவிட்டு மதிய உணவுக்காக திரும்பிக் கொண் டிருக்கும் போது இந்தக் கொடுமைகள் நடந்து குழந்தைகள் குதறப்பட்டி ருக்கிறார்கள். பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருப் பதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித் திருக்கிறது. காஸாவில் உள்ள 20 சதுர கிலோ மீட்டர் பகுதியை ராணுவ பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச் சர் எஹுத் பராக் அறிவித்திருக்கிறார்.


இஸ்ரேல் வான்தாக்குதலில் காஸாவின் உள்துறை அமைச்சக அலுவலகம் மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இரண்டும் தாக்கப் பட்டிருப்பதாக கடைசிக்கட்ட தகவலை பி.பி.சி. தெரிவிக்கிறது. இஸ்ரேலின் இந்த ஈனத்தனமான செயலை எதிர்த்து மூன்றாவது புரட்சிக்கு தயாராகுவோம் என ஹமாஸ் இயக்கத் தலைவர் காலித் மிஷால் தெரிவித்திருக்கிறார். இந்த நிமிடம் வரை அப்பாவி பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைகள், அழித்தொழிப்பு வேலைகள் தொடர்கின்றன.

ஹனியாவின் கதி?

சர்வதேச போர் விதிமுறைகளை மீறி அப்பாவிகளைக் கொல்வது மட்டுமின்றி மக்கள் தலைவர்களையும் கொலை செய்ய முயன்று வருவதை உலகமே கண்டிக்கிறது. பல்கலைக் கழகங்களின் மீது தாக்குதல் நடத்திய தோடு காஸாவின் காவல்துறை தலைவர் தௌஃபிக் ஜாஃபரையும் படுகொலை செய்த இஸ்ரேல் இன வெறி படை பாலஸ்தீன மக்களின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்யவும் கெட்ட எண்ணத் தோடு முயற்சி செய்தது. ஹனியா அலுவலகம் மீது இஸ்ரேலிய வான் படை வெறித்தனமாக குண்டுகளை வீசியது. ஹனியா அப்போது அங்கு இல்லாததால் அவர் உயிர் பிழைத்தார். யாசர் அராஃபத் அலுவலகத்தின் மீதும் இதுபோன்ற தாக்குதலை தான் இன வெறி இஸ்ரேலிய அரசு தொடுத்தது. மின்சாரத்தைத் துண்டித்தது. மெழுகுவர்த்தி ஒளியில் அந்தப் பெருந்தகை தனது அன்றாடப் பணி களை செய்ய வேண்டியதாயிற்று. இஸ்ரேலின் ஈனச் செயல்களுக்கு முடிவு எப்போது?

எதற்கும் தயார்! ஹிஸ்புல்லாக்கள அறிவிப்பு!!

“லெபனானுடனான போரில் ஹிஸ்புல்லாக்களால் முறியடிக்கப்பட்ட இஸ்ரேல் தற்போது பாலஸ்தீன மக்களின் மீது காஸா பகுதியில் அரச வன் முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாலஸ்தீனர்களுடனான கடும் தாக்கு தலை முறியடிக்க அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம். பாலஸ்தீன தெருக்களில் கண்டன கோஷங்கள் எழுப்புவதை விட அந்நாடுகளின் அரசுகள் இஸ்ரேலை வன்மையாகக் கண்டித்து தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினால் அதன் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். இன்று எகிப்தின் தெருக்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் வந்து ஆர்ப்பாட்டம் செய்யும் தகவல்கள் வெளிவந்திருக் கின்றன. அவர்கள் அவ்வாறு ஆர்ப் பாட்டம் செய்வதை விட காஸா எல்லை களைத் தகர்த்துவிட்டு பாலஸ்தீனத்திற் குள்ளே நுழையுங்கள். ஆயிரக்கணக் கானோரை, பல்லாயிரக்கணக்கா னோரை, பல லட்சக்கணக்கானோரை ஒரே அடியாகக் கொல்ல அவர்களுக்கு துணிவிருக்கிறதா பார்ப்போம். உங்கள் நாட்டின் எல்லைகளை உங்கள் இதயங்களால் முட்டி மோதி உடையுங் கள் எகிப்திய சகோதரர்களே!’’ என ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ் அறைகூவல் விடுத்தி ருக்கிறார்.


லெபனானின் பகுதிகளை யூத விரோதிகள் தாக்குதல் நடத்தினால், மரண அடி நிச்சயம் என்ற ஹிஸ்புல் லாஹ் தலைவர், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் அரசுகளை இஸ் ரேலை எதிர்த்துப் போராட நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

No comments :