Sunday, September 20, 2015

பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை

பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை மறைந்த பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும்
சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழுக்காக உழைத்த, தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட பத்திரிகையாளர், மறைந்த மாலை முரசு பத்திரிகையின் நிறுவனர், மரியாதைக்குரிய இராமசந்திரன் ஆதித்தனார். அவர்களுக்கு சென்னையில் அவர் தங்கிய தெருவிற்கு அவரது பெயரை சூட்டியதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் பாரத ரத்னா திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடலில் "மேரா நாம் அப்துல் ரஹ்மான்" என்று ஒரு பாடலை பாடுவார். அவருடைய நண்பர்தான் அந்த திரு. அப்துல் ரஹ்மான். கீழக்கரையைச் சேர்ந்தவர், தொழில் அதிபர், மிகப் பெரிய வள்ளலாக விளங்கியவர்.
இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு செல்லக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏறத்தாழ 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலையைப் போடுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்தபோது அவர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து சுமார் 75 இலட்சம் வட்டியில்லாமல் வழங்கினார். அதைப்போல் இராமநாதபுரத்தில் இருக்கக்கூடிய சேதுபதி சீதக்காதி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அவர்தான் நிதியுதவி செய்திருந்தார். அதுபோன்று நீச்சல் குளம் அமைப்பதற்கும் அவர்தான் வழி வகுத்து நிதியளித்தார். இராமநாதபுரம் கீழக்கரையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அமைப்பதற்கும் மற்றும் ஏராளமான அரசு அலுவலகங்கள் அமைப்பதற்கும் அவர் காரணமாக இருந்திருக்கிறார். எனவே, அவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலே வசித்த பகுதியில் ஒரு சாலைக்கு திரு.பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

No comments :