தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியை பெற த.மு.மு.க., திட்டமிட்டுள்ளது. கடந்த 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் த.மு.மு.க.,வினர், தி.மு.க., தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் பணி ஆற்றினர். தற்போது த.மு.மு.க., சார்பில் மனித நேய மக்கள் கட்சி துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் அரசியல் தலைவர்களின் பார்வையை தங்கள் பக்கம் திரும்ப செய்தனர். இதை தொடர்ந்து, லோக்சபா தேர்தலில் குதிப்பதற்கான ஆயத்தப்பணிகளையும் துவக்கி உள்ளனர். மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சாதகமான தொகுதி நிலவரங்கள் குறித்து விசாரித்துள்ளனர். அதன்படி சாதகமான தொகுதிகளை கணக்கெடுத்துள்ளனர். தி.மு.க., தேர்தல் பணிக்குழுவினருடன் தொகுதி பங்கீடு சம்பந்தமாக நடைபெறும் பேச்சு வார்த்தையில் ராமநாதபுரம் உட்பட ஆறு தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளனர்.
நன்றி : தினமலர்
No comments :
Post a Comment