தமிழக மீனவர் பிரச்னை - இலங்கையின் மிரட்டலுக்கு மோடி அரசின் மெத்தனமே காரணம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை:
தமிழக, இலங்கை மீனவர்களிடையே சென்னையில் கடந்த மார்ச் 24ம் தேதி மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின்போது தமிழக மீனவர்கள் சார்பில், ஆண்டுக்கு 83 நாட்கள் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை கோரியிருந்தனர். இந்த கோரிக்கை குறித்து இலங்கை மீனவர்கள் இலங்கை அதிபரிடம் ஆலோசித்து விட்டு அறிவிப்பதாக இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தனர்.
கொழும்புவில் மீனவ தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, "இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்குமாறு கடற்படைக்கு உத்தரடிவிட்டுள்ளார். மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தலை நிறுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேனாவின் இத்தகைய அறிவிப்பு மிகவும் கண்டனத்திற்குரியது, இப்பிரச்சினையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என உலகத்தில் எந்த பிரதமரோ, அதிபரோ சொல்லாத கூற்றை தெரிவித்துள்ளார். இந்தியாவின் வலிமையான பிரதமர் என்று சொல்லப்படுகின்ற மோடி, ரனில் விக்ரம சிங்கேவின் பேச்சுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்காதது தான் தற்போது தமிழக மீனவர்களின் பராம்பரிய மீன்பிடி உரிமையை மறுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த அறிவிப்பு தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை கேள்விக் குறியாக்கி உள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை மீனவர்களுக்குகென இந்திய கடல் பகுதியில் உள்ள பர்ஜூ பேங்க் இலங்கைக்கு குத்தக்கைக்கு விட்டதுபோல், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களுக்குகென ஒரு பகுதியை குத்தக்கைக்கு எடுக்க வேண்டும்.
மேலும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நிர்மூலமாக்கும் வகையில் அந்நிய நாட்டு மீன்பிடி கப்பல்களை அனுமதி அளிக்கக்கோரும் மீனா குமரி அறிக்கையினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
(ஒ-ம்)எம்.எச்.ஜவாஹிருல்லா
(ஒ-ம்)எம்.எச்.ஜவாஹிருல்லா
No comments :
Post a Comment