Thursday, November 5, 2009

ஏர்வாடி கிளையின் சார்பாக தமுமுக உடற்பயிற்சி நிலையம்



நெல்லை மாவட்டம் ஏர்வாடி கிளையின் சார்பாக தமுமுக உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட மைதீன் பாரூக் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, உடற்பயிற்சியினால் ஏற்படும் ஆரோக்கியத்தை பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.

மாவட்டச் துணைச் செயலாளளர் சர்தார் ம.ம.க களக்காடு ஒன்றிய செயலாளர் மைதீன் அலி ஏர்வாடி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இரத்த தானம் செய்வோம் ! மனித உயிர் காப்போம் !

முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு குறித்து 150 மில்லியன் டாலர்கள் செலவிலான ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை தயா


முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு குறித்து 150 மில்லியன் டாலர்கள் செலவிலான ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை தயாரிக்கும் ஒரு திட்டம் செல்வந்த அரபு நாடாகிய கதாரில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

லார்ட் ஆப் தி ரிங்ஸ், மேட்ரிக்ஸ் போன்ற படங்களை தயாரித்த பேரி ஒஸ்போர்ன், ஆங்கில மொழியில் வெளியாகவுள்ள இப்படத்தை தயாரிக்க வுள்ளார்.

இஸ்லாம் குறித்து மக்களுக்கு அறிவூட்டுவதுவும், மேற்கத்திய நாடுகளில் நபிகள் நாயகம் குறித்து நிலவும் தவறான புரிதல்களைப் போக்குவதும் இதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று இந்த படத்தின் பின்னணியில் இருக்கும் கதாரி ஊடக நிறுவனம் கூறுகிறது.

இந்தப் படத்துக்கான கதை அடுத்த ஆண்டு தாயாராகும் என்றும் அதற்கு அடுத்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கும் என்றும் இந்தப் படத்துக்கு பண முதலீடு செய்யவுள்ள கதாரி ஊடக நிறுவனம் கூறுகிறது.

நபிகள் நாயகத்தை உருவகப்படுத்திக் காட்டக் கூடாது என்று இஸ்லாமிய இறை நம்பிக்கைகள் கூறுவதால் இந்தப் படத்தை தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று இதன் அமெரிக்க தயாரிப்பாளர் பேரி ஒஸ்பார்ன் கூறியுள்ளார்.

Tuesday, November 3, 2009

சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக துபாய் முனிசிபாலிட்டி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி அக்டோபர் 30ம் தேதி துபாயில் உள்ள நாதல்ஷெபா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. நபுதா, ஈடிஏ, ஜீனத் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களும், வேலி ஆஃப் லவ், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், துபாய் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் தொண்டர்களும் திரளாக கலந்துக் கொண்டு சேவையாற்றினர். கலந்துக்கொண்டவர்களின் பணியும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக ஒருங்கிணைப்பாளர் அஹமது சுலைமான் தெரிவித்தார். இதுப்போன்றதொரு நிகழ்ச்சியை ஷார்ஜா அரசாங்கம் அக்டோபர் 3ம் தேதி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Links :
புகைப்படங்கள்
ஷார்ஜா : சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

__._,_.___

பேராசிரியர் முனைவர் .ஜவாஹிருல்லாஹ் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக உரை‏

30-10-2009 வெள்ளி இரவு 9.15 மணியளவில் துபை முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் .ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பாபரி மஸ்ஜித் வழக்கு ஒரு ஆய்வு என்ற தலைப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக உரையாற்றினார்கள்.

பாபரி மஸ்ஜிதின் ஆரம்ப கால வரலாற்றையும் இந்திய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி,ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோர்களுடைய காலத்தில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் தொடர்பான நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார்கள்.

தற்போதுள்ள வழக்கின் நிலையையும் துபை சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அதன் பிறகு சகோதரர்கள் கேட்ட சமுதாயம் மற்றும் பொதுப்பிரச்சனைகள் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள். ஒன்றரை மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்ற அமர்வில் பெருந்திரலான சகோதரர்கள் கலந்துகொண்டு ஆக்கப்பூர்வமான கேள்விகளை ஆர்வமுடன்
கேட்டார்கள். இது போன்ற அமர்வுகள் மாதம் ஒரு முறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று துபை முமுக நிர்வாகிகளை கலந்துகொண்ட சகோதரர்கள் அன்புடன் வலியுறுத்தி சென்றார்கள்.

Saturday, October 31, 2009

கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது

கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அது சார்ந்த துறைகளில் சிறுபான்மையினருக்கும், 16 கி.மீ சுற்று வட்டார மண்ணின் மைந்தர்களுக்கும் உரிய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் இடஒதுக்கீடு கேட்டு மனிதயே மக்கள் கட்சியின் சார்பில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அணுமின் நிலைய வளாகத்தின் முக்கிய வாயில்கள் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போராட்டத்திற்கும் காவல்துறை தடை விதித்தது.


இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடையை மீறி அங்கு கூடினர்.


தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ம.ம.க பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, மதிமுக தலைமைக் கழக பிரதிநிதி வந்திய வேந்தன், டாக்டர். புகழேந்தி, புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளர் சங்கர் உட்பட பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Thursday, October 29, 2009

கல்பாக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சிறுபான்மையினர் மற்றும் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய அளவில் வேலை வாய்ப்பு கேட்டு மமக கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

நாள்: 29.10.2009 வியாழன் காலை 11:00 மணிக்கு

இடம்: அணுவாற்றல் நகரின் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு