Thursday, December 1, 2011
கீழக்கரை நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக
கீழக்கரை நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கடந்த 25.11.2011 அன்று இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கீழக்கரை நகராட்சி சேர்மன் ரபியதுல் ஃபசரியா நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் செல்வ குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Saturday, November 26, 2011
கீழக்கரை தமுமுக அலுவலகத்துல வைத்து நடத்த தர்பியா



இன்று 25 / 11 / 2011 கீழக்கரை தமுமுக அலுவலகத்துல வைத்து நடத்த தர்பியா நடந்தது இந்த தர்பியா கூடத்துக்கு தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் இன்றைய முஸ்லிம்களின் நிலை என்ன என்று சிறப்புரையாற்றினர். பின்பு கீழை ஹசன் அவர்கள் தமுமுகவில் இருத்து அப்படி பணி செய்வது என்று உரையாற்றினர். இந்த கூட்டம் த.மு. மு.க., -ம.ம.க மாவட்ட பொருளாலர் அன்வர் தலைமை தாங்கினார் துணை தலைவர் அஜ்முள் கான் கீழக்கரை நகர் அமைப்புக்குழு உறுப்பினர்கள மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டவர்கள்.
திருப்புரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழக்கரை தமுமுக சார்பாக 10000rs தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யாது அவர்கள் இடம் வழக்கப்பட்டது
Thursday, November 24, 2011
பஸ் டூவீலரில் மோதி கீழக்கரையை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் உயிரழப்பு !
கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி சேனா என்பவரின் மகன் முகம்மது ஹனிபா என்பவரின் மனைவியுமான செய்யது அலி பாத்திமா(30) கர்ப்பிணியான இவர் சம்பவத்தன்று அவருடைய கணவர் முகம்மது ஹனிபாவுடன் ராமநாதபுரம் மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக டூவீலரில் அவரது மூத்த பெண் குழந்தையுடன் ஆர்.எஸ் மடை அருகே உள்ள பால்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அசுர வேகத்தில் வந்த பஸ் ஒன்று இவர்கள் பயணம் செய்த டூவீலரில் மோதியது.இதனால் டூவீலரில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் செய்யது அலி பாத்திமா விழுந்தார் இதில் அவருடை இடுப்பு பகுதியில் பஸ் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பாத்திமா உயிரழந்தார். இறந்த பாத்திமாவின் உடலை ராமநாதபுரம் பி1 காவலர்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்த விபத்துகுள்ளாக்கிய பஸ்சையும்,டிரைவரையும் தேடி வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனைக்கு சென்ற செய்யது அலி பாத்திமா உயிரற்ற உடலாக பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது அப்பகுதியில் உள்ளோர் நெஞ்சை உறைய வைத்தது.இச்சம்பவம் கீழக்கரை பகுதியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
news by: keelakaraitimes.com
Tuesday, November 22, 2011
Friday, November 18, 2011
கீழக்கரையில் த.மு. மு.க., -ம.ம.க., செயற்குழு கூட்டம்
கீழக்கரையில் த.மு. மு.க., -ம.ம.க., செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது. நகர் அமைப்புக்குழு உறுப்பினர்களாக ஹெச்.சீனி ஜகுபர் சாதிக், ஐ.செய்யது இபுராகிம், எம்.ஏ.ஹமீது இக்பால், ஏ.சேக் தாவுத் சாதிக், கே.ராஜா ஹூசைன், எச்.ஜெயினுல் ஆப்தீன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
Subscribe to:
Posts
(
Atom
)


