Monday, October 12, 2009

முஸ்லீம் மக்கள்: மூன்றாவது இடத்தில் இந்தியா

முஸ்லீம் மக்கள்: மூன்றாவது இடத்தில் இந்தியா

அமெரிக்காவில் உள்ள திங்டாங் ஆய்வு மையம் உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. 1500 வகையான ஆதாரங்களை மையமாக வைத்து இந்த கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.

அதில் உலகில் மொத்தம் உள்ள 680 கோடி மக்களில் 157 கோடி பேர் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது உலகில் 23 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 232 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அங்கு 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 2-வது இடம் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. அங்கு 17 கோடியே 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 16 கோடியே 9 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

உலகில் வாழும் மொத்த முஸ்லிம்களில் 87-ல் இருந்து 90 சதவீதத்தினர் ஷன்னி பிரிவு முஸ்லிம்கள் 10-ல் இருந்து 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள்.

ஷியா முஸ்லிம்களில் 68ல் இருந்து 80 சதவிதத்தினர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.

மக்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர். உலகில் 60 சதவித முஸ்லிம்கள் ஆசியாவில் வசிக்கின்றனர்.

Sunday, October 11, 2009

பெரம்பலூரில் தமுமுக மாணவரணியின் பண்பொழுக்க பயிற்ச்சி முகாம்

தமுமுக மாணவரணி சார்பாக பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கான பண்பொழுக்க பெரம்பலூர் பயிற்சி முகாம் பெரம்பலூர் ஜே.கே மஹாலில் 28.10.09 திங்களன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் இல்யாஸ் தலைமை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் வழக்கறிஞர் பேரா. முருகையன், அப்துல் காதிர் நூரி, அச்சிறுபாக்கம் ஷாஜஹான், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தாஹிர் பாட்சா ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் வகுப்பெடுத்தனர். இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பலன் பெற்றனர். மாவட்ட செயலாளர் தாஹிர், மாவட்ட தலைவர் பாபு, துணை செயலாளர் ஜீலானி, ஜஹாங்கீர் மற்றும் நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

09.10.2009

லால்பேட்டை பேரூராட்சி மூன்றாவது வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையில் துவங்கியது.

மொத்தம் பதிவான வாக்குகள் 187 இதில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் 102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய லீக் வேட்பாளர் சிராஜுத்தீனை விட கூடுதலாக 17 வாக்குகள் பெற்றார்.

வெற்றிபெற்ற யாசிர் அரஃபாத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கும்,வெற்றிக்காக உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி

தென்காசி, அக். 9: தென்காசி நகராட்சி 16-வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும் இது.

அந்தக் கட்சியின் வேட்பாளர் முகமது அலி தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் தமீம் இப்ராஹிமை 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள் : 1441

பதிவானவை : 881

முகமது அலி (தமக) : 414

தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214

முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)

Monday, October 5, 2009

விபச்சாரிகளுக்கு புர்கா அணிவித்து முஸ்லிம் பெண்களை இழிவு படுத்தும் காவல்துறையின் போக்கைக் கண்டித்து காவல்துறை ஆணையரிடம் தமுமுக மனு

(தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜா கனி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:)


விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகின்ற புர்காவை அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன. மேலும், விபச்சார வழக்கில் கைதாகும் கழிசடைப் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுக்கே உரிய கண்ணியமான புர்காவை அணிவித்து, அழைத்து வரும் கயமைத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது.


இதனால் முஸ்லிம் சமுதாயப் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். புர்கா அணிந்து செல்லும் பெண்கள் கேலி செய்யப்படும் வாய்ப்பும் இதனால் உருவாகியுள்ளது. விபச்சாரிகளுக்கு புர்கா அணிவிக்கும் தரங்கெட்ட செயûலைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக முதல்வருக்கும், தமுமுக தலைவர் பேரா. டாக்டர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமுமுக மாநிலச் செயலாளர் , பி.எஸ்.ஷாகுல் ஹமீத், வடசென்னை
மாவட்ட செயலாளர் ஏ.செய்யது அபூதாஹிர் ஆகியோர் தமுமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர்.

Thursday, October 1, 2009

இலங்கையி­ருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

இலங்கையி­ருந்து ஒரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு

இலங்கையி­ருந்து தமிழுலகிற்கு புதியதொரு தமிழ் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வந்து சேர்ந்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யது அன்ஸாரிஸ் ஸீன்னத்தில் முஹம்மதிய்யாவும், சர்வ தேச நூல் வெளியீட்டாகமான தாருஸ் ஸலாமும் இணைந்து இப்பணியைச் செய்துள்ளன.


இதுவரை தமிழில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருந்தாலும் இலங்கையி­ருந்து வெளிவரும் முதல் தமிழ் மொழியாக்கம் என்ற அடிப்படை யில் இது சிறப்புப் பெருகின்றது.
அத்துடன் இது தனிநபர் முயற்சியாக அல்லாமல் கூட்டு முயற்சியால் உருவான புது வரவு என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.

அன்ஸாருஸ் ஸின்னாவின் அறிஞர் குழுவான எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி), எம்.ஜெ.எம். ரிஸ்வான் மதனி, எம்.எச்.எம். அஸ்பர் பலாஹி ஆகியோர் இதன் மொழியாக்கப் பணியில் ஈடுபட எம்.சி. அன்ஸார் ரியாதி, என்.பி. ஜூனைத் மதனி, எம்.எஸ்.எம். ரிஸ்வி மதனி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டுள்ளனர். அத்துடன் அன்ஸாரிஸ் ஸþன்னாவின் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம். அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் கண்கானிப்பின் கீழ் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அபுபக்கர் சித்திக் மதனி அவர்களின் மதிப்புரையில் ''இம்மொழியாக்கத்தின் தமிழ்நடை எளிமையானதாகவும் அடைப்பு குறிகள் குறைவானதாகவும் இருப்பது இதன் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். அதேவேளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஸலபுஸ் ஸா­ஹீன் களது விளக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இம்மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழாக்க மற்றும் மேற்பார்வை குழுவினரின் முன்னுரையில் ''ஏற்கெனவே பல மொழி பெயர்ப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. முதன்முத­ல் திருக் குர்ஆனைத் தமிழில் தரும் பணியைச் செய்த அப்துல் ஹமீத் பாகவி (ரஹ்) அவர்களை இவ்வகையில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். இவருக்குப் பின்னரும் பலரும் இப்பணியைச் செய்துள்ளனர். அவர்கள் அனை வரையும் நன்றி யுடன் நாம் நிறை வு கூர்கின்றோம்'' எனக் குறிப் பிட்டுள்ளமை இக்குழுவின் பணிவையும் பண்பாட்டையும் பறை சாட்டுகின்றது.
கடந்த காலத்தில் பணியாற்றி யவர்களையெல்லாம் குறைகூறி கேவலப் படுத்திவிட்டு தமது பணியைத் தூக்கி நிறுத்தும் தவறான போக்கு அவர்களிடம் தென்படாமை இஸ்லாமியப் பணியாளர் கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
அத்துடன் பலர் பங்கு கொண்ட பணி என்றாலும் இதில் தவறுகளும் குறை களும் இடம் பெற வாய்ப்பு உள்ளமையை நிச்சயமாக நாம் மறுக்க மாட்டோம். எனவே, எமது தமிழாக்கத்தில் குறைகளை யும், தவறுகளையும் காணும் வாசகர்கள் அவற்றைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளப் பெரிதும் உதவியாக அமையும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள் கின்றோம்'' என்று குறிப்பிட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
அழகிய வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த தமிழாக்கத்தின் இலங்கை தவிர்த்த ஏனைய நாடுகளுக்கு பதிப்புரிமையை சவூதியை தலைமையகமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவை சார்பாக சென்னையில் ரமலானில் நடைபெறும் தொடர் சொற்பொழிவில் பங்குக் கொள்ள சென்னை வந்திருந்த குழுவைச் சேர்ந்த மவ்லவி இஸ்மாயில் சலபி, தமுமுக தலைவருக்கு அகில இலங்கை ஜம்மியத்து அன்ஸாரிஸ் ஸீன்னத்துல் முஹம்மதிஸ் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதி ஒன்றை வழங்கினார். தாருஸ்ஸலாம் வெளியீட்டு உரிமையை தன்னுடைமையாக்கியுள்ளது.
இந்த புதிய வரவு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நிச்சயமாக இது நல்ல வரவேற்பையும் பெறும் எனக் கட்டியம் கூறலாம்.