
மனிதநேயமும்,சமூகநீதியும் உலகினில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டினை செயல் வடிவம் கொடுத்திட உழகை;கும் தமுமுக ஊழியர்கள் ரமளானில் செய்து வரும் எண்ணற்ற நல்லறங்களில்.. மகுடமாய் விளங்கிக் கொண்டிருக்கின்றன இந்த இஃப்தார் நிகழ்வுகள்.அல்-அய்ன் மண்டலம் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த வியாழக்கிழமை 17 வது நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அல்-அய்ன் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிரபல உணவகம் ஒன்றின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.இதைனையொட்டி மார்க்க சமுதாய விழிப்புணர்வு பிரச்சார உரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கடும் கோடை வெப்பத்தையும் பொறுட்படுத்தாது நோன்பாளிகள் 4.30 மணி தொடங்கி நிகழ்ச்சி அரங்கத்திற்கு வரத்தொடங்கினர்.

கூட்டம் அளவுக்கதிகமாக கூடியதால் ஏராளமான நோன்பாளிகள் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே உரைகளை செவிமடுத்தனர். இஃப்தார் நேரம் தொடங்தியவுடன் நோன்பாளிகளுக்கு பழங்களும் பழச்சாறும் வழங்கப்பட்டன. பின்னர் நோன்பாளிகள் அணைவரும் உடனடியாக அருகில் உள்ள பள்ளியில் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் அந்த உணவகத்திலேயே அவர்களுக்கு உணவு விருந்து பறிமாறப்பட்டது.மண்டல துணை செயலாளர் அதிரை அப்துல் ரஹ்மான்,இணை செயலாளர்கள் களப்பால் சையது யூசுஃப்,விழுப்புரம் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட சகோதரர்கள் நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் போது வாகன வசதி செய்து கொடுத்தால் மாத்திரமே பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என்ற நிலை மாறி பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாத நிலையிலும் பெரிய அளவில் மக்கள் திரண்டிருக்கின்றனர் என்றால் இது சமுதாயம் தமுமுக வின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பைக் காட்டுவதாக அமைந்திருப்பதாக மூத்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
கலந்தாய்வுக் கூட்டம்.
அல்-அய்ன் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தலைமை நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.அமீரக முமுக செயலாளர் யாசின் நூருலாஹ் தலைமை தாங்கினார். தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அமீரக முமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments :
Post a Comment