Tuesday, March 9, 2010

மார்ச் 15-ல் ஆர்ப்​பாட்​டம் நடத்த கமுதி மனி​த​நேய மக்​கள் கட்சி முடிவு

கமுதி,​மார்ச் 7:​ பெட்​ரோல்,​​ டீசல் மற்​றும் அத்​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை உயர்​வைக் கண்​டிப்​பது உள்​பட பல்​வேறு கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி இம்​மா​தம் 15-ம் தேதி ​ ஆர்ப்​பாட்​டம் நடத்த மனி​த​நேய மக்​கள் கட்சி முடி​வு​செய்​துள்​ளது.​ ​

​ கமு​தி​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற நகர மனித நேய மக்​கள் கட்​சி​யின் செயற்​குழு,​​ பொதுக்​குழு கூட்​டத்​தில் தீர்​மா​னிக்​கப்​பட்​டது.​

​ கூட்​டத்​திற்கு ஒன்​றி​யச் செய​லர் முகம்​மது காசீம் தலைமை வகித்​தார்.​ ராம​நா​த​பு​ரம் மாவட்​டத் தலை​வர் சாதிக் ஜப​ருல்லா முன்​னிலை வகித்​தார்.​ நக​ரச் செய​லர் சேட் வர​வேற்​றார்.​

பெட்​ரோல்,​​ டீசல் விலை உயர்​வைக் கண்​டித்​தும்,​​ கமுதி அரசு மருத்​து​வ​ம​னை​யில் மகப்​பேறு மருத்​து​வரை நிய​மிக்​கக் கோரி​யும் ஆர்ப்​பாட்​டம் நடத்த கூட்​டத்​தில் தீர்​மா​னிக்​கப்​பட்​டது.​

​ கூட்​டத்​தில் கட்சி நிர்​வா​கி​கள் அஜீஸ் கனி,​​ கலி​முல்லா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​ ​

No comments :