வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள்
அப்துற் ரஹிம் பேரிடர் மையத்தில் தங்க வைப்பு
அப்துற் ரஹிம் பேரிடர் மையம்
நிஷா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் ராமேஸ்வரத்திற்கும் நாகப்பட்டிணத்திற்கும் மையம் கொண்ட புயலால் தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடும் மழையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. கடலூர், நாகை மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. சில இடங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில் தமுமுக சார்பில் அவசர மீட்புக் குழுக்கள் கடலூர் மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரையிலான இடங்களில் 15 ஆம்புலன்ஸ்களும், தமுமுகவைச் சேர்ந்த அவசர மீட்பு குழுவினரும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது.
பல்வேறு பணிகளில் இருந்த தமுமுகவினர் அனைவரும் மீட்பு நிவாரணப் பணிகளில் திரும்பி இருக்கின்றனர். அவர்கள் உள்ளுர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு பணிப் பகிர்வுகளை திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சுனாமியால் பாதிக்கப் பட்ட நாகூர் தெத்திப் பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களின் சார்பில் கட்டிக் கொடுக்கப் பட்டுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால், அப்பகுதியில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமுமுக சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட மவ்லவி. அப்துற் ரஹிம் பேரிடர் மையத்தில் மக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை நாகை (தெ) மாவட்ட தமுமுக தலைவர் ஜபருல்லாஹ் தலைமையினலான மீட்புக் குழுவினர் அதிகாரிகளுடன் பேசி அவசர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் குறித்து சென்னையில் இருந்தவாறு தமுமுக தலைமை கழக நிர்வாக மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.
No comments :
Post a Comment