Sunday, September 27, 2015

கீழக்கரை தமுமுக மாணவர் அணி சார்பாக தர்பியா முகாம் நடைபெற உள்ளது

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04.10.2015 காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை காஞ்சிரங்குடி தோட்டத்தில் கீழக்கரை தமுமுக மாணவர் அணி சார்பாக தர்பியா முகாம் நடைபெற உள்ளது இம்முகாமில் நமது மதிப்பிற்குரிய பேராசிரியர் MH ஜவஹிருல்லாஹ் MLA   அவர்கள் மற்றும்  பேரா ஹாஜாகனி அவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர் கீழக்கரையை சேர்ந்த கல்லூரி  மற்றும்  பள்ளி மாணவர்கள் பொதுமக்கள்  கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது.  

தமுமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது. மேலும் தொடருபுகு கீழக்கரை நகர் செயலாளர் முஹமது  சிராஜூதீன் 9443170984

இப்படிக்கு 
கீழக்கரை நகர் தமுமுக

Sunday, September 20, 2015

பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை

பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை மறைந்த பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும்
சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழுக்காக உழைத்த, தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட பத்திரிகையாளர், மறைந்த மாலை முரசு பத்திரிகையின் நிறுவனர், மரியாதைக்குரிய இராமசந்திரன் ஆதித்தனார். அவர்களுக்கு சென்னையில் அவர் தங்கிய தெருவிற்கு அவரது பெயரை சூட்டியதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் பாரத ரத்னா திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடலில் "மேரா நாம் அப்துல் ரஹ்மான்" என்று ஒரு பாடலை பாடுவார். அவருடைய நண்பர்தான் அந்த திரு. அப்துல் ரஹ்மான். கீழக்கரையைச் சேர்ந்தவர், தொழில் அதிபர், மிகப் பெரிய வள்ளலாக விளங்கியவர்.
இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு செல்லக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏறத்தாழ 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலையைப் போடுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்தபோது அவர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து சுமார் 75 இலட்சம் வட்டியில்லாமல் வழங்கினார். அதைப்போல் இராமநாதபுரத்தில் இருக்கக்கூடிய சேதுபதி சீதக்காதி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அவர்தான் நிதியுதவி செய்திருந்தார். அதுபோன்று நீச்சல் குளம் அமைப்பதற்கும் அவர்தான் வழி வகுத்து நிதியளித்தார். இராமநாதபுரம் கீழக்கரையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அமைப்பதற்கும் மற்றும் ஏராளமான அரசு அலுவலகங்கள் அமைப்பதற்கும் அவர் காரணமாக இருந்திருக்கிறார். எனவே, அவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலே வசித்த பகுதியில் ஒரு சாலைக்கு திரு.பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, September 12, 2015

சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.இராமநாதபுரம் தமுமுக மார்கஸில் நடைப்பெற்றது.


2.09.15 கீழக்கரை தமுமுக சகோதரர்கள் முயற்சியால் ஏர்வாடி தர்ஹாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் தமுமுக மார்கஸில் நடைப்பெற்றது.
மேற்பட்ட நான்கு நபர்களுக்கு தமுமுக உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் மௌலவி ஹனிப் ரஷாதி திரு கலிமாவை கூறி இஸ்லாமி அடிபடைகளை பற்றி அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம், கீழக்கரை தமுமுக சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Sunday, August 30, 2015

கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.


#கீழக்கரையில்_மக்கள்_குடியிருப்பு 
#பகுதியில்_மக்கள்_சந்திப்பு ! !

29-08-2015 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.

குப்பை கொட்டப்பட்ட பகுதியில் உள்ள சுவர் விழும் அபாய நிலையிலும், மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலையிலும் உள்ள இடம் சம்மந்தமாக அதை சரி செய்யும் பணிக்காக பகுதியில்  பொது மக்களிடம் #மமக சட்டமன்ற குழு #தலைவர்பேராசிரியர் #Dr_MH_ஜவாஹிருல்லா.,MLA., அவர்கள் மக்களை சந்தித்து குரைகலை கேட்ட  போது.

ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு





கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு. இந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும் 
தமுமுக - மமக நிர்வாகிகள் மற்றும் ஊர்  பொது மக்கள்  கலந்து சிறப்பித்தார்கள். 

Saturday, August 22, 2015

17வது வார்டு தெற்குதெரு பகுதிக்கு தொழிலதிபர் பெயர் சூட்ட நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது

17வது வார்டு தெற்குதெரு பகுதிக்கு தொழிலதிபர் பெயர் சூட்ட நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது




கீழக்கரை தெருக்களுக்கு பெயர் மாற்ற நினைக்கும் நகராட்சி தலைவரின் செயலை நகர் தமுமுக வன்மையாக கண்டிக்கிறது இது சம்பந்தமாக ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது கீழக்கரை மக்கள் மத்தியில் கெட்டுபோய் கிடக்கும் தனது பெயரை மாற்றவும் செல்வந்தர்களின் பெயரை சூட்டி அதன் மூலமும் ஆதாயம் அடைய துடிக்கும் கொள்ளைகும்பளிடம் இருந்து கீழக்கரை நகராட்சியையும் கீழக்கரை மக்களையும் ஆண்டவன் துணையுடன் மீட்காமல் விடமாட்டோம் கீழக்கரை தமுமுக கொடுத்த புகார் மனு தனியாக இணைக்கப்பட்டுள்ளது

இப்படிக்கு 
முஹமது சிராஜ்தீன் 
நகர் செயலாளர் 

Saturday, August 15, 2015

69வது சுதந்திர தின விழா‬ ‪‎கொடியேற்றும் நிகழ்ச்சி‬ ! !

 மேலப்பாளையம் த்தில்‬ பேரியக்கத்தின்_தலைவர்‬‪#‎ஜே_எஸ்_ரிஃபாயி_ரஷாதி‬ 

திருவாரூர் நகர அலுவலகத்தில் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

த.மு.மு.க தலைமை அலுவலகத்தில். 69 வது சுதந்திர தின நிகழ்ச்சி. தேசிய கொடியை மாநில  துணை தலைவர்  RM ஹனீபா அவர்கள் ஏற்றினார் 


இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி வாணி முகம்மது சித்திக் 


இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஆற்றாங்கரை கிளை சார்பாக மாநில தேர்தல் அதிகாரி வாணி முகம்மது சித்திக்  மற்றும் மமக மாவட்ட செயலாளர் அன்வர் அலி, 


தமுமுக முன்னால் மாநில செயளாலர்‪  ASM_ஜுனைது

சென்னை 69வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி‬ ! !

சென்னை  R.K நகர் பகுதி இரத்ததானம் முகாம்


                                          சென்னை   இராயபுரம் கண் சிகிச்சை முகாம்

சென்னை இராயபுரம் 39
சென்னை இராயபுரம்


சென்னை இராயபுரம் 48 வது வட்டம்