Thursday, September 30, 2010

கட்டப் பஞ்சாயத்து - இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து

உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.

சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுகின்றது.


news by:www.tmmk.in

அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறோம். - தமுமுக தலைமையகம்

அலஹாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. தேவைப் பட்டால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டுகிறோம். - தமுமுக தலைமையகம்

Wednesday, September 29, 2010

உணர்ச்சிவசப்படாமல் அமைதி காக்க வேண்டும்-தமுமுக

சென்னை: அயோத்தி தீர்ப்பு எவ்வாறாக இருந்தாலும் அமைதி காத்து, சட்டம்- ஒழுங்கை பேணிக் காக்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [^] கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1949ம் ஆண்டு முதல் நடந்து வரும் பாபர் மசூதி வழக்கில் செப்டம்பர் 24ம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க தேதி குறிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பை வெளியிடக் கூடாது என ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் [^] இடைக்கால தடை விதித்தது.

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய இருதரப்பும் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து உச்ச நீதிமன்றம் இடைக் காலத் தடையை நீக்கி உத்தர விட்டுள்ளதை தமிழ்நாடு [^] முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனமார வரவேற்கிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட்டமாக கருதாமல், அவரவர் தனியாக இறைவனுக்கு நன்றி செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயம் தீர்ப்பு பாதகமாக வந்தால் அதை சட்டரீதியாக அணுகுவதற்கு முஸ்லிம் அமைப்புகள் தயாராக உள்ளன என்பதை நினைவில் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது அமைதி, சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

news by:thatstamil.com

Tuesday, September 28, 2010

பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பு வியாழக்கிழமைமதியம் வெளிவருகிறது

பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பு வியாழக்கிழமைமதியம் வெளிவருகிறது 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருக்கும் அயோத்தி சர்ச்சை தீர்ப்பு தொடர்பான தடை கோரிய மனு உச்ச நீதி மன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 24 ம் தேதி அலகாபாத்உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பளிக்க இருந்தது. ஆனால் இந்த நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என காரணம் காட்டி ரமேஷ் சந்த் திரிபாதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தடை உத்தரவு வழங்கினர். இந்த தடை ஒருவார காலம் அமலில் இருக்கும் என கடந்த 23 ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு நீதிபதிகள் , வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், மத்திய அரசு அட்டர்னி ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். இதனால்பாபர்மச்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் எச். கப்பாடியா தலைமையிலான நீதிபதிகள் அப்தாப் ஆலம், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கொண்டஅமர்வு விசாரிக்கும் என நீதிமன்றம் அறிவித்தது. இதன்படி தடை தொடர்பான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பந்தப்பட்டவழக்கறிஞ்ர்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர். மனுதாரர் வழக்கறிசர் நாட்டில் யாரும் அயோத்தி தீர்ப்பு வெளிவர விருப்பம் காட்டவில்லை.,சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படும். செட்டில்மென்ட் ஆகும் வகைக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். என வாதிட்டார். காமன்வெல்த்போட்டி , ஒபாமா வருகை குறித்தும் அங்கு எடுத்து கூறப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் தனது வாதத்தில் காலம் தாழ்த்தாத எந்த ஒரு நல்ல முடிவு ஏற்பட்டாலும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார். இதனையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு உத்தரவு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்படி மதியம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அலகாபாத்உயர்நீதிமன்றம் என்று வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கலாம் என்றனர். அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமைமதியம் பாபரி மஸ்ஜித்நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என தலைநகர தகவல்கள் தெரிவிக்கின்றன.







தீர்ப்பை தள்ளி வைக்க எதிர்ப்பு : சன்னி மத்திய வக்ப் வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில், "60 ஆண்டு காலமாக நடக்கும் சர்ச்சையில், கோர்ட்டிற்கு வெளியே பிரச்னையை தீர்த்து கொள்வது என்பது முடியாத காரியம். 19 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில், வழக்கு போட்டுள்ள திரிபாதி பங்கேற்கவில்லை. மேலும், இறுதி தீர்ப்புக்காக 90 நாட்கள் நடந்த இறுதி விசாரணையிலும் திரிபாதியோ அவரது சார்பில் வக்கீலோ பங்கேற்கவில்லை. எனவே இதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு மனுதாரரும் 89 வயதான முகமது ஹசிம் தாக்கல் செய்த மனுவில், "திரிபாதியின் மனுவை டிஸ்மிஸ் செய்து, அலகாபாத் ஐகோர்ட் உடனடியாக தீர்ப்பு வழங்கும் வகையில், இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என' கேட்டுக் கொண்டுள்ளார். மற்றொரு முக்கிய மனுதாரரான நிர்மோகி அகாரா, தன் மனுவில், "தீர்ப்பு வழங்குவதை மூன்று மாதத்திற்கு தள்ளிவைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு சுப்ரீம் கோர்ட் வழி வகுக்க வேண்டும்' என கோரியுள்ளார்.

முக்கிய மனுதாரரான, அகில பாரத இந்து மகாசபா தாக்கல் செய்த மனுவில், "இப்போதுள்ள சூழ்நிலையில் சுமுகமான தீர்வு என்பது இயலாத காரியம். கோர்ட் தீர்ப்பு மூலம் தான் முடிவு காண வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் பதில் மனு தாக்கல் செய்துள்ள அனைவரும் ஒரு கருத்தை உறுதிப்பட தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரிக்கும் அலகாபாத் ஐகோர்ட்டின் மூன்று உறுப்பினர் பெஞ்சில் இடம் பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவர், அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, தீர்ப்பு அதற்கு முன்பாக வெளிவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Monday, September 27, 2010

இராமநாதபுரம் ஆம்புலன்ஸ் டிரைவர் விபத்தில் உயிரிழந்தார்

இன்று தினம் இரவு 25.09.2010 இராமநாதபுரம் ஆம்புலன்ஸ் டிரைவர் ராம்குமார் பரமக்குடி அருகே விபத்தில் உயிரிழந்தார். அன்னாரின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Friday, September 24, 2010

நியூயார்க் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்-ஈரான் அதிபர் அகமதிநிஜாத்

ஐ.நா. சபை: நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கி்ன்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீ்ண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம்.இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது.தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது என்றார்.அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.தொடர்ந்து பேசிய அகமதிநிஜாத், இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.அணு ஆராய்ச்சி விஷயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும்.அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது என்றார்.

sorce by:thatstamil.com

பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

வரலாற்று சிறப்புமிகு பாபரி பள்ளிவாசல் வழக்கில் நாளை அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லியில் வரும் 3ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இந்த சூழலில் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும். இதனால் காமன்வெல்த் போட்டிகள் பாதிக்கப்படும் என சொல்லி ரமேஷ் சந்த் திரிபாதி என்ற ஒய்வுப் பெற்ற அரசு அதிகாரி இந்த வழக்கை தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி அல்தமாஸ் கபீர் தலைமையிலான உச்சநீதிமன்ற பிரிவு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று மனுதாரர் வேறு பிரிவுக்கு இந்த வழக்கை மாற்ற உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகலாம் என்று தீர்ப்பு கூறினர்.
இதனை தொடர்ந்து இன்று மனுதாரரின் வழக்கு நீதிபதி ரவீந்தரன் தலைமையிலான உச்சநீதிமன்றப் பிரிவின் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர். 28ம் தேதி விசாரணைக்கு பிறகே பாபரி பள்ளிவாசல் வழக்கின் தீர்ப்பு காமன்வெல்த் விளையாட்டுகள் தொடங்குவதற்கு முன்பு வழங்கப்படுமா அல்லது அது முடிவடைந்த பிறகு (அக்டோபர் 14) வழங்குப்படுமா என்பது தெரியும்.
இந்த வழக்கை விசாரிக்கும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவின் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சர்மா செப்டம்பர் 30ம் தேதி ஒய்வு பெறுகிறார். எனவே தீர்ப்பு செப்டம்பர் 30க்கு முன்பு வழங்கலாம் என்று 28ம் தேதி விசாரணையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் தான் உடனடி தீர்ப்பு கிடைக்கும். இல்லையெனில் லக்னோ பிரிவிற்கு மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டு மறு விசாரணை நடைபெற்று அதற்கு பிறகு தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.