Thursday, July 29, 2010

லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு

லண்டன்,ஜுலை27:22 வயது மதிக்கத்தக்க இரண்டு முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் முகத்திரை அணிந்த காரணத்திற்காக பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விசாரணை செய்வதாக லண்டன் பேருந்து நிறுவனமான மெட்ரோலைன் கூறியுள்ளது.இரண்டு மாணவிகளில் யாஸ்மின் என்ற மாணவி ஹிஜாப் அணிந்திருந்ததாகவும்,மற்றொருவர் அதூஃபா கண்கள் மட்டும் தெரியும்படி முகத்திரை அணிந்திருந்தனர்.அவ்விரு மாணவிகளும் பேருந்தில் ஏற முற்படும்போது அப்பேருந்தின் ஓட்டுநர், "நான் உங்களை பேருந்தில் ஏற்ற முடியாது, நீங்கள் இருவரும் அச்சுறுத்தும்படி இருக்கிறீர்கள்" என்று கூறி பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளார்."நாங்கள் இந்த விவகாரத்தை அக்கறையுடன் எடுத்து விசாரித்து வருகிறோம். எங்களின் நிறுவன ஊழியர்கள் இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் இல்லை, ஏனெனில் நாங்கள் சமத்துவம், வேற்றுமை எல்லோருக்கும் உண்டு என்பதை மதித்து உறுதி செய்திருக்கிறோம்." என்று மெட்ரோலைன் கூறியிருக்கிறது."இதுகுறித்து மூன்று ஓட்டுநர்களை விசாரித்து வருகிறோம், எங்கள் நிறுவன ஓட்டுநர் அனுமதி மறுத்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது.இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது, ஆனால் தனிநபர் வழக்கிற்காக கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளது

இடுகையிட்டது பாலைவனத் தூது

வண்மையாக கண்டிக்கிறோம்

இந்திய அரசியல் சாசண சட்டப் பிரிவு-25க்கு, எதிராக செயல்படுபவர்களை...
வண்மையாக கண்டிக்கிறோம்


பொதக்குடி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் கல்வி கற்க்கும், மாணவிகள் தங்களின் இஸ்லாமிய மார்க்க சட்டத்திற்க்கு உட்பட்டு தலையில்
துணி அணிவதை(ஹிஜாப்), அப்பள்ளியின் ஆசிரியர்கள் தடுப்பதையும்,
இஸ்லாமிய கோட்பாடுபளை பின்பற்றுவதற்க்கு தடையாக இருப்பதையும்,
வண்மையாக கண்டிக்கிறோம். மேற்படி விசயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியக விசாரணை செய்து, இஸ்லாமிய மாணவிகளின் கோறிக்கை ஏற்கப்படவேண்டும். இல்லையெனில் பொதுமக்களை ஒண்றுதிரட்டி ஜணநாயகமுறையில் எங்களது போறாட்டம் தொடரும் என்பதை தெரிவிக்கின்றோம்.

குறிப்பு: இந்தியாவில் வசிக்கும் மக்கள் அவர்கள் ஏற்றுப்கொண்டுள்ள எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும், தங்களின் கோட்பாடுகளை பின்பற்றவும்,நடைமுறை படுத்தவும் மற்றவர்களுக்கு எடுத்துகூறி பிறச்சாரம் செய்வதற்க்கும் உள்ள சுதந்திரத்தை வழங்குபிறது. (இந்திய அரசியல் சாசணம் சட்டப் பிரிவு-25)

இவண்,
என்றென்றும் உங்கள் சமுகப்பணியாளன்,
த.மு.மு.க மாணவரணி
பொதக்குடி கிளை

Wednesday, July 28, 2010

ஏர்வாடி தமுமுகவினர் மீது பொய் வழக்கு: பொதுமக்கள் கடும் கண்டனம்


நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் 6வது தெருவில் உள்ளது மெர்ஸி நர்ஸிங்ஹோம். இங்கு தங்கும் ஒரு நர்சுடன் வெளியூரைச் சேர்ந்த (நான்குநேரி) வக்கீல் கண்ணன் என்பவருக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. தினமும் இரவு அந்த வெளியூர் நபர் வருவதும் கள்ளத் தொடர்பை தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.குடும்பத்துப் பெண்கள் தங்கள் பணியின் நிமித்தம் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது மற்ற நர்சுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் இவர்களில் சிலர் அக்கம்பக்கத்து வீட்டினர்களிடம்ஷ இதனை குமுறலுடன் கூறியுள்ளனர்.அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க இயக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களிடம் இந்த அநியாயம் குறித்த பொதுமக்கள் முறையிட்டனர்.12.07.2010 அன்று வழக்கம் போல்கள்ளத் தொடர்புக்கு வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய பேர்வழி கண்ணன் வந்தபோது இதனைஎதிர்பார்த்து காத்து இருந்தபொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். நம்ம பகுதியை கேவலப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் பொது மக்களிடையே வெடித்தது. கோபத்தோடு கூடியிருக்கும் மக்கள் தனிநபரான கண்ணனைசரமாரியாக தாக்கினால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எண்ணிய தமுமுக தலைவர் பக்ருதீன் கண்ணனை மருத்துவமனையில் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அத்தோடு ஆத்திரம் அடைந்த மக்களையும் அமைதிப்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சில நர்சுகள் கண்ணனை தப்பிக்க வைத்து விடுகின்றனர்.பிடிபட்ட பேர்வழி தப்பியதை அறிந்து பொதுமக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் பொதுமக்கள் நாலாபுறமும் தேடத் தொடங்கினர். தப்பி ஓடி நான்குநேரி சென்றகண்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏர்வாடி பொதுமக்களும், தமுமுகவினரும் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தமுமுக நிர்வாகிகள் மீது நான்குநேரி காவல்துறை பொய் வழக்கு (இபிகோ பிரிவு 308) போட்டது.13.07.2010 அன்று பக்ருதீன், அம்ஜத், முகைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல்அறிந்த தமுமுக நிர்வாகிகள் தமுமுக அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலகத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமுமுகவினரின் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் நியாயமற்ற முறையில் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டனர். மமக நகர செயலாளர் மாகின் ஊனமுற்ற சகோதரர் ஆவார். இவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்கூறியும் கூட காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி அம்மா உனக்கும் தொடர்பு எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கிறார்.இதைப்போல வஷீமீளியூர் காவல்நிலையத்தில் தமுமுகவினரைகைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டதோடு அவர்களை பார்க்க வந்த மாவட்ட நிர்வாகிகளை வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் பார்க்கவே அனுமதிக்கவில்லை.கடந்த ஆண்டு ஏர்வாடி அருகில் உள்ள சூரங்குடியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தசமையல் மாஸ்டர் அசன்ரபிக் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையை தற்கொலை என மூடிமறைத்த காவல்துறை தற்போது தமுமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான்,பொருளாளர் ரசூல் மைதீன்துணை செயலாளர் நயினார் முகம்மது, சுல்தான், துணை தலைவர் சர்தார் அலிகான்மற்றும் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர். -களத்தொகுப்பு எஸ்.ஒ.எஸ்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்
ஆம்புலன்ஸ் சேவைகளுக்குஇடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும்.ஆனால், கற்ப்பிணிகளின்வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தமிழகத்தில் தங்களது இருப்பைவெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்குகல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.கடந்த ஜுலை 24 அன்றுதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதேகோரிக்கைக்காக மாநில தலைவர்பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது தமுமுகவின்ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்துஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தகுடும்பத்தினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும்என்றும், வேகமாக வருமாறுஅதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்தாஜுதீன் வேகமாக ஹனீபாமருத்துவமனையை நோக்கி திருப்பினார்.வரும் வழியில், பாஜகவினர்ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியைமெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.அப்போது காவல்துறையும் கூட்டத்தைவிலக்கி, ஆம்புலன்ஸ்செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜகதலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனதுª த £ண்ட ர் களிட ம்ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அறிவித்திருக்கிறார்.எந்த விதி மீறலும்யாருக்கும் இடையூறுஇல்லாமலும் ஹனீபாமருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்றுவிட்டார்.அதற்குள் சுமார் 30 பேர் கொண்டபாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,ஆம்புலன்ஸை கட்டைகளால்உடைத்து, டிரைவரை கொலைவெறியுடன் தேடி உள்ளனர்.டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்டேங்கை உடைத்து, வண்டியைதுவம்சம் செய்ய, இதைப் பார்த்தபொதுமக்கள் சப்தம் போட,அதற்குள் ஓடிவந்த காவல்துறையினர் பாஜகவினர் மீதுதடியடி நடத்தியதும், வன்முறைகும்பல் ஓடத் தொடங்கியது.அதற்குள் பாஜகவினர் தங்களின்அயோக்கியத்தனத்தை மறைக்க,ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்விதமாக வந்தது என வதந்திகளைபரப்பினர்.ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்முகாமிட்டு இருந்ததால், அவர்தலைமையிலான போலிசார்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளைபோட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர்சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மாவட்ட தலைவர் தாஜுதீன்,ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ்,யூசுப் உள்ளிட்டோர் தலைமையில்சாலை மறியலில் தமுமுகவினர்இறங்க, பிறகு வழக்கு தொடுத்துவிட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது.செய் தியறிந்து திருவாரூர்மாவட்ட தமுமுகவினர் திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந் தனர்.திருத்துறைப் பூண்டி நகரெங்கும்பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்கொண்டிருந்தனர்.இதே, ஆம்புலன்ஸை பலமுறைபாஜகவினர் அவசரத்துக்கு பயன்படுத்தியது திருத்துறைப் பூண்டிமக்களுக்கு நன்கு தெரியும்.அப்போது கூட ஒரு இந்து சமுதாயகுடும்பத்துக்குத்தான் உதவ அந்தஆம்புலன்ஸ் சென்றதும். திருத்துறைப்பூண்டி மக்களால் மூலைக்குமூலை பேசப்பட்டது.காவல்துறை பாஜகவினரைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்தே அழுத்தங்களும அதிகரிக்க, அனைத்துக்கட்சியினரும் இந்த அராஜகத்தைகண்டித்து, தமுமுகவினருக்குஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.அடுத்த நாள் மமக துணைப்பொதுச் செயலாளர் எம். தமிமுன்அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்குவந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர்அலுவலகம் நோக்கி கருப்புக்கொடிஊர்வலம் நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டது.டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச்செயலாளர் ஹைதர் அலியிடமும்,மற்ற அதிகாரிகள் மமக துணைப்பொதுச்செயலாளர் எம். தமிமுன்அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்குவரும் தினத்தில் கருப்புக் கொடிஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும்,ஜுலை 30க்குள் குற்றவாளிகளைபிடிக்கிறோம் என்று கூறியதால்,ஜுலை 31 அன்று கருப்புக் கொடிஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.ஈவு, இரக்கமற்ற பாஜகவன்முறை கும்பலின் செயல்பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரைதமிழகமெங்கும் கொந்தளிக்கவைத்துள்ளது.தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறைதனது கடமையை வாக்களித்தப்படிசெய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான்பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்தம் வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீதுவிழுந்த தாக்குதல், எங்களின் P நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.

Friday, July 23, 2010

ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்குத் தடுப்பூசி

ராமநாதபுரம், ஜூலை 22: ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வியாழக்கிழமை போடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து ஏராளமானோர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 3,000 பேர் செல்ல மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. ஆனால், 12,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தனர்.
இதில் குலுக்கல் முறையில் 3,000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போட வியாழக்கிழமை வருமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அலுவலகம் 146 பேருக்கு கடிதம் அனுப்பயதில், வியாழக்கிழமை 76 பேர் ராமநாதபுரத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் உமாமகேசுவரி தலைமையில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவர் குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
சௌதி நாட்டு அரசு உத்தரவுப்படி, அந் நாட்டுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் அனைவருக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்தும், மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் போட்டு அதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தடுப்பூசியும் போலியோ சொட்டு மருந்தும் போட்டுக் கொண்டனர். இதில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி அதில் தடுப்பூசி போடப்படும் எனவும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக் குழு ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

thanks by dinamani.com

Thursday, July 22, 2010

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தல்:
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு
மாநில பொதுசெயலாளர் அப்துல் சமது தகவல் திருச்சி, ஜுலை.21-திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மீரான் மைதீனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-கண்டனம்திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்மீரான் மைதீன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து எங்கள் கட்சியினர் பிரசராம் செய்த சென்ற போது, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு வேட்டி- சேலைகளை வழங்கி உள்ளனர். இதை கொடுத்த தி.மு.க.வினர் மீது போலீசார் எந்த வித வழக்குப்பதிவு செய்யவில்லை. அதற்கு மாறாக பஸ் மீது கல்வீசியதாகவும் எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்குபதிவு செய்துள்ளனர்.கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவுஅதைப்போல, மனித நேயமக்கள் கட்சி விமானநிலைய தலைவர் பாபா பக்ரூதீன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சாதாரண வழக்கு போட்டு உள்ளனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் கூடிய மனிதநேய மக்கள் கட்சியினர் 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போட்டு உள்ளனர். இது கண்டனத்துக்குரியதாகும். பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட எங்கள் கட்சியினரை போலீசார் விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை விரும்புகிறோம். இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை தருகின்றனர். அதுபோல, இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் அ.தி.மு.க. கட்சியிடம் ஆதரவை கேட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.பேட்டியின் போது திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் பஷீர்அகமது, மாவட்ட துணைச்செலயாளர்கள் ரியாசுதீன், ராஜாமுகமது, வக்கீல காஜாமைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்றி: தினத்தந்தி

Wednesday, July 21, 2010

மீனவர்களை கொல்லாதே! வேதாரண்யத்தில் மமக ஆர்ப்பாட்டம்

இந்திய இலங்கை கடற்பகுதியில் சமீபத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து ஜூலை 16 அன்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மமக து.பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார். மமக மாவட்டச் செயலாளர் முபாரக், ஒன்றியச் செயலாளர் நஸ்ருல் இஸ்லாம், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ஜபருல்லாஹ், சாகுல், பரக்கத்அலி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.