Wednesday, June 30, 2010

மதுரையில் நடைபெற்ற பெட்ரோல், டீசல் விலைஏற்ற கண்டன ஆர்பாட்டப் புகைப்படங்கள்



கீழக்கரை அருகே முள்ளுவாடியில் ரூ. 32,000 மதிப்புள்ள 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்


ராமநாதபுரம், ஜூன் 26: கீழக்கரை அருகே முள்ளுவாடியில் ரூ. 32,000 மதிப்புள்ள 50 மூட்டை ரேஷன் அரிசியைக் கடத்தியதாக 4 பேரை காவல் துறையினர் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôரிடம் ஒப்படைத்துள்ளனர். கீழக்கரை போலீஸôர் முள்ளுவாடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ் வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 மூட்டை ரேஷன் அரிசியைக் கடத்தியதாகத் தெரிய வந்ததைத் தொடர்ந்து, மினி லாரியின் டிரைவரான ராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (32) மற்றும் லாரியில் இருந்த கூலித் தொழிலாளர்களான மணிவண்ணன், மாரிமுத்து, முனியசாமி ஆகிய 4 பேரையும் விசாரித்து, அவர்களை விருதுநகர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக வருவாய்த் துறையினரும் கீழக்கரையில் எந்த ரேஷன் கடையிலிருந்து அரிசி கடத்தப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

dinamani news

Tuesday, June 29, 2010

தமிழக அரசின் 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை


தமிழக
அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது


1 - 10 வகுப்பு வரை
தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*
குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
*
ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
*
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
*
சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
*
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
*
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல் நகல் (xerox)
*
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*
குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
*
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30%
கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
தொழிற்படிப்புகள் ( Engineering )


தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (
சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm

Monday, June 28, 2010

ராசல் கைமா : மு.மு.க நிர்வாகிகள் அலோசனைக் கூட்டம்



கடந்த 25/06/2010- வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ராசல்கைமா - அல் நக்கீல் ஹாஜா அவர்களின் இருப்பிடத்தில் ராசல் கைமா மண்டல முஸ்லிம் முன்னெற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது, அக்கூட்டத்திற்கு ராசல் கைமா கிளை பொருளாளர் கடியச்சேரி ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார்அதனைத்தொடர்ந்து சார்ஜாவிலிருந்து வருகை தந்த மு.மு.க அமீரக து.தலைவர் சகோ. ஹுஸைன் பாஷா அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள் பின்னர் தீர்மானங்கள் இயற்றப் பட்டது

  • வருகின்ற ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராசல் கைமா மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்படுகள் செய்யவும்
  • அமீரகத்தில் நமது சகோதர்களிடத்தில் பெருகிவரும் தற்கொலைகள் குறித்தும் நடக்கவிருக்கும் கூட்டத்தில் சிறப்பு "கவுன்சிலிக்" மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
  • ரமலானில் தாயகத்திலிருந்து வருகை தரும் தாயிக்களைக் கொண்டு சிறப்பான முறையில் பயான் நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யவும்
  • கேம்ப்'கள் தோறும் சென்று சந்திப்பு நடத்துவது என்றும்
  • நமது பத்திரிக்கையான "மக்கள் உரிமை" க்கு புதிய சந்தாக்களை உருவாக்குவது
  • புதிய மர்கஸ் மற்றும் நூலகம் அமைக்கவும் தீர்மானங்கள் இயற்றப் பட்டது
பின்னர் தூஆ ஓதி கூட்டம் இனிதே நிறைவுற்றது, இக்கூட்டத்திற்கு மதுரை.பரக்கத் அவர்களும் அபு ஆதில் அவர்களும் சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தனர்.

350 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் வேலூர் மாவட்ட தமுமுக மீட்பு




வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுகவால் இன்று (27-06-2010) மீட்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)


பள்ளிவாசலை மீட்கப்படுவதற்கு முன்னர் இவ்விடத்தில் சமூக விரோதிகளின் புகழிடமாக இருந்துள்ளது. தற்போது 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்தப் பழமையானப் பள்ளிவாசலில் (27-06-2010)இன்று மாலை அஸர் தொழுகை (இன்ஸா அல்லாஹ்) நடத்தப்பட உள்ளது.


மேலும் செய்திகள் இன்ஷா அல்லாஹ்...

Friday, June 25, 2010

சிறைவாசிகள் விடுதலையில் கோமாளி சு.சாமியின் முட்டுக்கட்டை

செம்மொழி மாநாடு: ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கக்கூடாது-சு.சாமி

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்பாகவே விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு 1,405 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்னதாகவே சிறையில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில் முடிவு ஏற்படாத நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால், அது நீதிமன்ற அவமதிப்பு செயலாக அமையும்.

எனவே, தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.காம்

Thursday, June 24, 2010

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லீம் வீரர் சேர்ப்பு

சிட்னி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் காஜா என்பவர் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற முதல் முஸ்லீம் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில்தான் உஸ்மான் இடம் பிடித்துள்ளார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி இது. இதில் இடம் பெற்றுள்ள உஸ்மானுக்கு 23 வயதாகிறது. இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.

காயமடைந்துள்ள பிலிப் ஹ்யூக்ஸுக்குப் பதிலாக உஸ்மானுக்கு இடம் கிடைத்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஆண்ட்ரூ ஹிட்லிட்ச் கூறுகையில், சிறப்பாக விளையாடியதற்காக உஸ்மானைத் தேர்வு செய்துள்ளோம். எந்த வரிசையில் இறக்கினாலும் சிறப்பாக விளையாடக் கூடியவராக இருக்கிறார் உஸ்மான். எனவே அவருக்கு இடம் கிடைத்துள்ளது என்றார்.

ஆஸ்திலேயி அணி - ரிக்கி பான்டிங், மைக்கேல் கிளார்க், டோக் போலிங்கர், பிராட் ஹாடின், ரியான் ஹாரிஸ், நாதன் ஹாரிட்ஸ், பென் ஹில்பென்ஹாஸ், மைக் ஹூசே, மிட்சல் ஜான்சன், சிமோன் காடிச், உஸ்மான் காஜா, மார்கஸ் நார்த், ஸ்டீவன் ஸ்மித், ஷான் வாட்சன்.

உஸ்மான் காஜா, 1986ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.