Saturday, July 16, 2016

சென்னையில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


மாபெரும் இஸ்லாமிய அறிஞர் #Dr_ஜாஹிர்_நாயிக் அவர்களை விசாரித்து கைது செய்ய துடிக்கும் மத்திய மகாரஷ்டிரா அரசுகளை கண்டித்து தொடர்ந்து அவதூறுப் பிரச்சாரம் செய்யும் சங்கபரிவாரர் ஆதரவு ஊடகங்களை கண்டித்து 
சென்னையில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது இதில் 
 கலந்துக்கொண்ட கீழக்கரை நகர் தமுமுக செயலாளர் முஹமது சிராஜுதீன்.

Monday, July 4, 2016

கீழக்கரை நகர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஃபித்ரா பொருட்கள் வழங்கப்பட்டன








இன்று 03.07.2016 கீழக்கரை நகர்  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில்  ஃபித்ரா பொருட்கள்  வழங்கப்பட்டன   உணவுப்பொருட்கள் அடங்கிய பைகள் ஏழை எளியோர்க்கு வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சிக்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்வர் அலி  மாவட்ட துணைச்செயலாளர் ரைஸ் அவர்கள்  தலைமை தாங்கினார் மற்றும் கீழக்கரை  திமுக  நகர் செயலாளர் பஷீர் அஹமது கீழக்கரை மக்கள் சேவை MKM உமர் கீழக்கரை IUML தலைவர்  லெப்பை தம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.   இலவச உணவுப்பொருட்கள் அடங்கிய சுமார் 240 பைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக கீழக்கரை  நகர்  செயலாளர் முகமது சிராஜுதீன். அபுதாஹிர், நசீர்,இக்பால் புஹாரி கௌஸ்   மற்றும் தமுமுக&மமக கிளை நிர்வாகிகளும்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.



பின்னர் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது


Monday, June 20, 2016

கீழக்கரையைச் சார்ந்த நான்கு இளைஞர்கள் வாகன விபத்தில் மௌத்

கீழக்கரையைச் சார்ந்த நான்கு இளைஞர்கள் வாகன விபத்தில் மௌத் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

கீழக்கரை to ஏர்வாடி ரோட்டில் நான்கு இளந்தளிர்களான இளைஞர்கள் வாகன விபத்தில் மரணம் நெஞ்சை பிழியும் துயரச் செய்தி....

அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கட்டும் மறுமை பேற்றுக்காக பிராத்திப்போம்...

கட்டுபாட்டுடன், கண்காணிப்புடன் பிள்ளைகளை கவனித்து பார்த்துக் கொள்ள வேண்டிய காலச் சூழல்...

பிள்ளைகளை இழந்து பரிதவிக்கும் அந்த குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையை வழங்குவானாக....

3 பேர் சின்னக்கடை தெருவை சேர்ந்தவர்கள் ஒரு பையன் தெற்கு தெரு.

பெயர் விபரம்

ஹமீது கான் அவர்கள் மகன் அப்துல் ரஹ்மான் ஜீனைத் (13) ஈசா தண்டையார் தெரு 8வது படிக்கும் மாணவர் கண்ணாடி வாப்பா பள்ளி

 சீனி முகம்மது காசிம் அவர்கள்   மகன் பாஹித் ( 14) சின்னக்கடை தெரு 8ம் வகுப்பு  முஹைதினியா பள்ளி மாணவர்

ஜகுபர் சாதிக் அவர்கள் மகன் செய்யது இப்ராஹிம் 20 தெற்கு தெரு

செய்யது அப்தாஹிர் அவர்கள் மகன் ராசிக் பரித் 22 தெற்கு தெரு

Saturday, June 18, 2016

Today Dubai Tmmk office iftaar ரமலான் 12 ம் நாளில் ...

Today Dubai Tmmk office iftaar

ரமலான் 12 ம் நாளில் ...
*********************

தமுமுக துபை மண்டலம் தேரா மர்க்கஸில் நடைபெறும் ரமலான் தொடர் சொற்பொழிவில் இன்று, சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் குர்ஆன் கூறும் உதாரணங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்

 இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, May 7, 2016

இன்று கீழக்கரையில் நடைபெற்ற 2 தெருமுனை பிரச்சாரம்




கீழக்கரையில்  06.05.2016 இன்று  ஜும்மா தொழுகைக்கு பின் ராமநாதபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா ஆதரித்து  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது



கீழக்கரையில்  06.05.2016 இன்று  மாலை ராமநாதபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா ஆதரித்து  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

Thursday, May 5, 2016

கீழக்கரையில் வாக்குகள் கேட்டு 7,8,9,10,வார்டுகளில் பிரச்சாரம்

04.05.2016 இன்று மாலை 4.30மணியளவில் கீழக்கரை நகர் தி.மு.க.- 

காங்கிரஸ்,மனிதநேய மக்கள் கட்சி,இ.யூ.முஸ்லிம் லீக்,புதிய தமிழகம் 

மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் 

பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்களுக்கு கப்&சாசர் சின்னத்தில்

வாக்குகள் கேட்டு 7,8,9,10,வார்டுகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம்

நகர் தி.மு.க.செயலாளர் S.A.H.பசீர் அகமது அவர்கள் தலைமையிலும,ஆம்பூர் 


M.L.A.அஸ்லம் பாஷா. M.யாக்கூப் மாநிலஅமைப்பு செயலாளர் அவர்கள் 

முன்னிலையிலும் மற்றும்கூட்டணி கட்சிகளின் 

நிர்வாகிகளும்,தொண்டர்களும் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தார்கள்.



கீழக்கரையில் கப் & சாசர் பிரச்சாரம் பற்றி பத்திரிக்கை செய்திகள்....