Sunday, January 10, 2016

தொண்டியில் தமுமுக கிளை தொண்டரணி செயலாலர் மீராண் உள்ளிட்டோர் மீது கொலை. வெறி தாக்குதல்



10.01.16 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டியில் தமுமுக கிளை தொண்டரணி செயலாலர் மீராண் உள்ளிட்டோர் மீது கொலை. வெறி தாக்குதல்
தொண்டியில் ஐக்கிய ஜமாத்தையும் மதரஸா நிர்வாகத்தையிம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஷாஜஹான், சிக்கந்தர், சிக்கந்தர் சகோதரர்,
பாம்புக்குட்டிநெய்னா, அஷ்ரப் அலி, நசூருதீன் உல்லிட்டோரை தட்டிக்கேட்ட தமுமுக நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி

Friday, January 8, 2016

2015 ஆண்டு கீழக்கரை நகரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A அவர்களும் - Part 1

2015 ஆண்டு கீழக்கரை நகரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A அவர்களும் - Part 1

1) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

2) கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட ஹைரத்துல் ஜலாலிய தொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு. இந்த நிகழ்சியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களும் கிழக்குத்தெரு ஜமா அத்தார்கள் மற்றும்
தமுமுக - மமக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
3) கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது. 29-08-2015 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான குப்பை கழிவுகல் கொட்டப்பட்டு உள்ளது.குப்பை கொட்டப்பட்ட பகுதியில் உள்ள சுவர் விழும் அபாய நிலையிலும், மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் நிலையிலும் உள்ள இடம் சம்மந்தமாக அதை சரி செய்யும் பணிக்காக பகுதியில் பொது மக்களிடம் ‪#‎மமக‬ சட்டமன்ற குழு ‪#‎தலைவர்பேராசிரியர்‬‪#‎Dr_MH_ஜவாஹிருல்லா‬.,MLA., அவர்கள் மக்களை சந்தித்து குரைகலை கேடபோது

4) கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமியதொடக்க பள்ளியில் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. அவர்களின் சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம்.


5) ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகராட்சியில் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு. இந்த நிகழ்வுகளின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.


6) கீழக்கரையில் அரசு உதவிபெறும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் 34 ம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLAஅவர்கள் பங்கேற்பு ! !
மற்றும்கீழக்கரை மக்களோடு மக்களாக அணைத்து பொது நிகழ்ச்சி களிலும் காலத்து கொண்டுள்ளார்
தொடரும்...

Sunday, December 6, 2015

சென்னை வில்லிவாக்கம் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்கள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் இராமநாபுர சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லாஹ் அவர்கள்





சென்னை வில்லிவாக்கம் சிட்கோநகர் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு, நிலைமைகளை களத்தில் முழுநேரமாக இருந்து கவனித்து செயலாற்றி வரும் தமுமுக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தாஹா நவீன், பகுதி நிர்வாகிகள் மற்றும் இபுறாகிம், சிந்தா, தீன், ஜலீல், சாதிக் மற்றும் கீழை ஹசன்  உட்பட்டவர்களிடம் விரிவாக கேட்டு மனச்சோர்வின்றி பணியாற்ற ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மதிய உணவு, பிரட், தண்ணீர், பிஸ்கட்டு பாக்கட்டுகளை வழங்கினார்ர்கள்

நியூஸ்
கீழை ஹசன 

Monday, November 30, 2015

கீழக்கரை தமுமுகவின் டிசம்பர் 6 அழைப்பு


கீழக்கரை வாழ் இஸ்லாமிய சொந்தங்களே மதசார்பற்ற தேசத்தின் சகோதர உறவுகளே எதிர்வரும் டிசம்பர் 6 இந்தியாவின் மானம் உலக அரங்கில் அசிங்கப்பட்ட நாள் ஆம் 300 ஆண்டுகால இந்தியாவின் வரலாற்று சின்னமான பாபர் மசூதி காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நாள் ஒவ்வரு வருடமும் டிசம்பர் 6ல் மீண்டும் அதே இடத்தில் அல்லாஹ்வின் பள்ளி கட்டப்படும்வரை எதிர்கால நமது சந்ததிகள் மறக்காமல் இருப்பதற்காக தமுமுக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவது உங்களுக்கு தெரியும் 2015 டிசம்பர் 6 அன்று ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு காலை 10 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்திற்கு கீழக்கரை நகரில் வாழும் அணைத்து இஸ்லாமிய சொந்தங்களும் திரண்டு வருமாறு அன்போடு அழைக்கிறது கீழக்கரை நகர் தமுமுக அன்று காலை 9.30 மணி அளவில் முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடையில் இருந்து வாகனங்கள் புறப்படும்

இப்படிக்கு 
கீழக்கரை தமுமுக நகர் செயலாளர்
முஹமது சிராஜுதீன் 

Friday, November 20, 2015

டிசம்பர் -6 தமுமுக தலைமையில் போராட்டம் நடைபெறும் மாவட்டங்கள்



கீழக்கரை தமுமுகவிண் இரங்கல் அறிக்கை

கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை டைரக்டர் டாக்டர் செய்யது அப்துல் காதர் அவர்கள் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தி அறிந்து நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம் இருப்பினும் பிறக்கும் அணைத்து உயிர்களும் ஒருநாள் இறந்தே தீரவேண்டும் என்பது இறைகட்டளை 2013ம் ஆண்டு கீழக்கரை தமுமுக சார்பாக சாலைபாதுகாப்பு வாரம் நடத்தினோம் அதில் ஒரு குறும்படம் எடுத்தோம் அப்படத்தில் டாக்டர் அவர்கள் இயற்கையாக மிகவும் இயல்பாக நடித்துகொடுத்தார்கள் அது இன்றுகூட எங்களுக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது டாக்டர் அவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய எல்லாம் வால் அல்லாஹ்விடம் நானும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கீழக்கரை நகர் நிர்வாகிகளும் மனிதநேய மக்கள் கட்சியின் கீழக்கரை நிர்வாகிகளும் துவா செய்வதுடன் டாக்டர் அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அமைதியையும் பொறுமையையும் கொடுப்பானாக என்று கூறி எங்கள் வேதனையை பகிர்ந்து கொள்கிறோம்.
 அன்புடன்

 எஸ்.முஹமது சிராஜுதீன் 
 தமுமுக நகர் செயலாளர்
 கீழக்கரை