Friday, November 20, 2015
கீழக்கரை தமுமுகவிண் இரங்கல் அறிக்கை
கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை டைரக்டர் டாக்டர் செய்யது அப்துல் காதர் அவர்கள் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தி அறிந்து நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம் இருப்பினும் பிறக்கும் அணைத்து உயிர்களும் ஒருநாள் இறந்தே தீரவேண்டும் என்பது இறைகட்டளை 2013ம் ஆண்டு கீழக்கரை தமுமுக சார்பாக சாலைபாதுகாப்பு வாரம் நடத்தினோம் அதில் ஒரு குறும்படம் எடுத்தோம் அப்படத்தில் டாக்டர் அவர்கள் இயற்கையாக மிகவும் இயல்பாக நடித்துகொடுத்தார்கள் அது இன்றுகூட எங்களுக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது டாக்டர் அவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய எல்லாம் வால் அல்லாஹ்விடம் நானும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கீழக்கரை நகர் நிர்வாகிகளும் மனிதநேய மக்கள் கட்சியின் கீழக்கரை நிர்வாகிகளும் துவா செய்வதுடன் டாக்டர் அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அமைதியையும் பொறுமையையும் கொடுப்பானாக என்று கூறி எங்கள் வேதனையை பகிர்ந்து கொள்கிறோம்.
அன்புடன்
எஸ்.முஹமது சிராஜுதீன்
தமுமுக நகர் செயலாளர்
கீழக்கரை
அன்புடன்
எஸ்.முஹமது சிராஜுதீன்
தமுமுக நகர் செயலாளர்
கீழக்கரை
Thursday, October 15, 2015
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில_நிர்வாகிகள் நியமனம் ! !
#மனிதநேய_மக்கள்_கட்சியின் #தலைவர் பேராசிரியர்#எம்_எச்_ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் வெளியிடும் அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் கடந்த அக்டேபார் 13 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
பின்வருவோர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் (திருச்சி மாவட்டம்)
எஸ்.எம். ஜெய்னுல்ஆபிதீன் (இராமநாதபுரம் மாவட்டம்)
கோவை எம்.ஏ.செய்யது (கோவை மாவட்டம்)
பி. ஜோசப் நொலஸ்கோ (தூத்துக்குடி மாவட்டம்)
கே. முஹம்மது கவுஸ் (மதுரை மாவட்டம்)
அ. அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. (வேலூர் மாவட்டம்)வழக்குறைஞர் ஆர். சரவணபாண்டியன் (தஞ்சாவூர் மாவட்டம்)
#எம்_யாக்கூப்(காஞ்சிபுரம் மாவட்டம்)
மாயவரம் ஜெ.அமீன் (நாகப்பட்டிணம் மாவட்டம்)
வழக்குறைஞர் தஞ்சை பாதுஷா (தஞ்சாவூர் மாவட்டம்)
#தலைமை_நிலையச்_செயலாளர்:
எம். ஹுசைன் கனி (இராமநாதபுரம் மாவட்டம்)
கடந்த அக்டோபர் 6 அன்று நடைபெற்ற தலைமை பொதுக்குழுவில்
ப. அப்துல் ஸமது பொதுச் செயலாளராகவும், ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைமை நிர்வாகிகளில் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றவர்; ஒருவர் பொறியாளர்; இருவர் வழக்குறைஞர்கள்;
இருவர் பட்டதாரிகள் ஆவர்.
இருவர் பட்டதாரிகள் ஆவர்.
இவண் : எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி
Sunday, October 4, 2015
கீழக்கரை நகர் சார்பாக மாணவர்களுக்கான மார்க்க நல்லெழுக்க பயற்சி வகுப்பு நடைபெற்றது
Sunday, September 27, 2015
கீழக்கரை தமுமுக மாணவர் அணி சார்பாக தர்பியா முகாம் நடைபெற உள்ளது
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04.10.2015 காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை காஞ்சிரங்குடி தோட்டத்தில் கீழக்கரை தமுமுக மாணவர் அணி சார்பாக தர்பியா முகாம் நடைபெற உள்ளது இம்முகாமில் நமது மதிப்பிற்குரிய பேராசிரியர் MH ஜவஹிருல்லாஹ் MLA அவர்கள் மற்றும் பேரா ஹாஜாகனி அவர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர் கீழக்கரையை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது.
தமுமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது. மேலும் தொடருபுகு கீழக்கரை நகர் செயலாளர் முஹமது சிராஜூதீன் 9443170984
இப்படிக்கு
கீழக்கரை நகர் தமுமுக
தமுமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது. மேலும் தொடருபுகு கீழக்கரை நகர் செயலாளர் முஹமது சிராஜூதீன் 9443170984
இப்படிக்கு
கீழக்கரை நகர் தமுமுக
Sunday, September 20, 2015
பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும் பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை
பேரா. M.H.ஜவாஹிருல்லா. M.L.A. கோரிக்கை மறைந்த பிஎஸ் அப்துர் ரஹ்மான் பெயரில் சென்னையில் சாலைக்கு பெயரிட வேண்டும்
சட்டமன்றத்தில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழுக்காக உழைத்த, தமிழர்களின் நலனுக்காக பாடுபட்ட பத்திரிகையாளர், மறைந்த மாலை முரசு பத்திரிகையின் நிறுவனர், மரியாதைக்குரிய இராமசந்திரன் ஆதித்தனார். அவர்களுக்கு சென்னையில் அவர் தங்கிய தெருவிற்கு அவரது பெயரை சூட்டியதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த முதல்வர் பாரத ரத்னா திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தின் பாடலில் "மேரா நாம் அப்துல் ரஹ்மான்" என்று ஒரு பாடலை பாடுவார். அவருடைய நண்பர்தான் அந்த திரு. அப்துல் ரஹ்மான். கீழக்கரையைச் சேர்ந்தவர், தொழில் அதிபர், மிகப் பெரிய வள்ளலாக விளங்கியவர்.
இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரைக்கு செல்லக்கூடிய கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏறத்தாழ 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சாலையைப் போடுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்தபோது அவர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து சுமார் 75 இலட்சம் வட்டியில்லாமல் வழங்கினார். அதைப்போல் இராமநாதபுரத்தில் இருக்கக்கூடிய சேதுபதி சீதக்காதி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அவர்தான் நிதியுதவி செய்திருந்தார். அதுபோன்று நீச்சல் குளம் அமைப்பதற்கும் அவர்தான் வழி வகுத்து நிதியளித்தார். இராமநாதபுரம் கீழக்கரையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அமைப்பதற்கும் மற்றும் ஏராளமான அரசு அலுவலகங்கள் அமைப்பதற்கும் அவர் காரணமாக இருந்திருக்கிறார். எனவே, அவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலே வசித்த பகுதியில் ஒரு சாலைக்கு திரு.பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, September 12, 2015
சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.இராமநாதபுரம் தமுமுக மார்கஸில் நடைப்பெற்றது.
2.09.15 கீழக்கரை தமுமுக சகோதரர்கள் முயற்சியால் ஏர்வாடி தர்ஹாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு நபர்கள் சத்திய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி இராமநாதபுரம் தமுமுக மார்கஸில் நடைப்பெற்றது.
மேற்பட்ட நான்கு நபர்களுக்கு தமுமுக உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் மௌலவி ஹனிப் ரஷாதி திரு கலிமாவை கூறி இஸ்லாமி அடிபடைகளை பற்றி அவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம், கீழக்கரை தமுமுக சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Subscribe to:
Posts
(
Atom
)