Tuesday, July 7, 2015

தமுமுகவின் சமுதாயப் பணிகள் 2014-2015


முஸப்பர் நிதி
முஸப்பர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டி தமுமுக நிவாரண நிதி திரட்டியது. திரட்டப்பட்ட நிவாரண நிதியிலிருந்து அம்மக்களுக்கு முஸப்பர் நகரிலிருந்து 39 கிமீ து£ரத்தில் (கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு அருகில்) பள்ளிவாசலுடன் கூடிய குடியிருப்பு வீடுகளை கட்டிக் கொடுப்பதற்காக முஸப்பர் நகரிலிருந்து மீரட் செல்லும் முக்கிய சாலை ஓரம் பதேபூர் கேடி என்ற ஊரில் 27225 சதுர அடி மனை வாங்கப்பட்டு தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி முன்னிலையில் தமுமுக டிரஸ்ட் சார்பாக தலைவர் ஜே.எஸ். ரிபாயி பத்திரப்பதிவை செய்தார். இதனை தொடர்ந்து வீடுகளை கட்டும் ஆரம்ப பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் லட்சக்கணக்கான காஷ்மீரிகள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிதி திரட்டியது. திரட்டப்பட்ட நிதி ரூ.50 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை காஷ்மீர் அரசிடம் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ மற்றும் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி ஆகியோர் நேரில் ஒப்படைத்தனர்.
டிசம்பர் 6, 2014:
பாப்ரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கருஞ்சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. முன்னதாக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு லட்சக்கணக்கான அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மார்க்க நிகழ்ச்சிகள்
தமுமுக, தனது மார்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மூலம் தமிழகம் முழுவதும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய மாநாடுகளை நடத்தி வருகிறது. மேலும், சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில் இஸ்லாமிய பிரச்சார நூலுகம் துவங்கப்பட்டது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கான பயானும், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்களுக்கான பயானும் நடைபெற்று வருகிறது.
ஆம்புலன்ஸ்கள்
அனைத்து சமுதாய ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் பயன்பெறும் பொருட்டு தமுமுக, ஆம்புலன்சுகளை அர்ப்பணித்து இயக்கி வருகிறது. தமுமுக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 121ஐ எட்டியுள்ளது.
பாலஸ்தீனம், பர்மா, இலங்கை முஸ்லிம்களுக்காக
பாலஸ்தீனத்தில் கடந்த ரமலானில் வான்வழி தாக்குதல் நடத்தி 2000 பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்த இனவெறி இஸ்ரேலைக் கண்டித்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதேபோல் மியான்மர் (பர்மா), இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமுமுக ஆண்டுதோறும் கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்களையும், ஏழை எளிய மாணவர்களுக்காக கல்வி உதவிகளையும், ரமலானில் பல்லாயிரக்கணக்கான ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்களையும், ஹஜ் பெருநாட்களின் போது குர்பானி கறியை வழங்கியும் ஏழை மக்களின் நலனில் பங்கெடுத்து வருகிறது.
கோரிக்கை
சமுதாயத்திற்காகப் பாடுபட்டு வரும் தமுமுக, கழகத்தின் அலுவலக செலவினங்களை செய்வதற்குக் கூட பொருளாதாரம் இன்றி சிரமப்பட்டு வருகிறது.
எனவே புனித ரமலானில் இறைவனின் அருளைப் பெற விரும்பும் தாங்கள், தமுமுக பணிகள் சிறக்க உங்களுடைய நன்கொடைகளை தாராளமான அள்ளித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உங்களுடைய நன்கொடைகளை M.O./D.D./Cheque மூலம் அனுப்பலாம்.
உங்கள் நன்கொடைகளை
TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM A/C NO.034811011900510என்ற பெயரிட்டு
“TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM,
NO.7, VADA MARAICOIR STREET,
CHENNAI - 600 001
என்ற முகவரிக்கு அனுப்பிடுவீர்.--
ஜகாத் நிதிகள்
உங்களுடைய 'ஜகாத்' தொகைகளை என்ற TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST A/C NO.034811011900313 என்ற பெயரில் அனுப்பவும். ஜகாத் நிதிகள் அதற்குரிய வகைகளுக்கு மட்டுமே செலவிடப்படும்.
வெளிநாட்டில் வசிக்கும் தமிழக சகோதரர்கள் தங்கள் நன்கொடைகளை NRI Cheque மூலம் மட்டும் அனுப்பவும். வருமான வரிச் சலுகை (80G) பெற விரும்புவோர் TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST என்ற பெயரில் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி
TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM TRUST
NO.7, VADA MARAICOIR STREET,
CHENNAI - 600 001
TAMILNADU - INDIA.
Email: tmmkhq@gmail.com
Website: www.tmmk.in
Ph: 044-25247824, 95000 24398

Sunday, June 21, 2015

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகராட்சி அலுவலகம் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை ஆணையாளரிடம் கேட்டறிந்தார்கள் ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகராட்சியில் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் விதமாக 

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு.

அதுசமயம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வீதிகள் தோறும் வீடுகளில் அன்றாடம் குப்பைகளை சேகரிப்பதற்காக 21 தள்ளு வண்டிகள் புதிதாக வாங்குவதற்கு ஆவண செய்து தர வேண்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதுபோல் கீழக்கரை நகராட்சிப்பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதிமூலம் புதிய சொந்த கட்டிடங்கள் கட்டித்தருவதற்கும் கோரிக்கை தரப்பட்டது.

மேலும் கீழக்கரை பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான குடிதண்ணீர் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடின்றி கிடைத்திட அதற்கான திட்டங்களை மன்றத்தின் மூலமாக ஆவண செய்து வழங்கும்படி அறிவுறுத்தினார்கள்.

இந்த நிகழ்வுகளின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள், 21 வது வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

உடன் மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி, மற்றும் நிர்வாகிகள் யாசர் அரபாத், நூருல் அஃப்பான், மற்றும் கீழக்கரை நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tuesday, June 16, 2015

கீழக்கரை நகராட்சி ஆணையாளரும் முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA வளர்ச்சி பணிகளை பற்றி கலந்து முக்கிய முடிவுகள்



15.06.2015 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களும் கீழக்கரை நகராட்சி ஆணையாளரும் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கீழக்கரை நகர் நிர்வாகிகள் சந்தித்து கீழக்கரை வளர்ச்சி பணிகளை பற்றி கலந்து முக்கிய முடிவுகள் எடுகபடுள்ளன அபோது  உடன் தமுமுக மாவட்ட  துணை செயலாளர் ரைஸ்  இப்ராஹிம் அவர்களும்  கலந்து கொண்டனர்

Friday, June 12, 2015

முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடு

முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடு


  













முஸாபர் நகரில் பாதிக்கப்பட்ட சொந்தங்களுக்காக த.மு.மு.க சார்பில் கட்டப்பட்டுவரும் வீடுகளை மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி தலைமையிலான குழு பார்வையிட்டார்கள்...

Saturday, June 6, 2015

கீழக்கரை நகர் தமுமுக சார்பாக கிழக்குத்தெருவில் தெருமுனை பொதுக்கூட்டம்

05.06.2015 அன்று   தமுமுக  கீழக்கரை நகர்  கீழை சார்பாக  கீழக்கரை முஸ்லிம் பஜார்  தெருவில் தெருமுனை பொதுக் கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக் கூட்டதில் அண்ணன் சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முன்னிலை சகோ.B.அன்வர் அலி அவர்கள் (மமக மாவட்ட செயலாளர்) ராமநாதபுரம் (கிழக்கு)  மற்றும்  கீழக்கரை நகர்  தமுமுக நகர்  செயலாளர் வெஸ்ட் ஆசியா சிராஜு மற்றும் நகர் நிர்வாகிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முனதாக சிவகாசி முஸ்தபா , அவர்கள் கழக கொடியே ஏற்றி வைத்தார்கள் .