Thursday, October 9, 2014

தத்தளிக்கும் காஷ்மீர்




கீழக்கரை நகர் தமுமுக சார்பில் காஷ்மீர் மக்களின் துயர் துடைக்க  நிவாரன நிதி திரட்டும் பணி நடத்து கொண்டு இருக்கிறது. கீழக்கரை வாசிகளா உங்கள் நிதிஐ காஷ்மீர் மக்களுக்காக தந்து உதவுங்கள்.

தொடருபுகு கீழக்கரை நகர் தலைவர் முஹம்மது சிராஜுதீன் 

Monday, October 6, 2014

ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பிறகு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி ஹனிப் ரஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் தமுமுக சகோதரர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Monday, September 29, 2014

தமிழக முதல்-அமைச்சர்கள்

தமிழக  முதல்-அமைச்சர்கள்

1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம் வருமாறு:

ராஜாஜி        10-04-1952 முதல் 13-04-1954 வரை

கே.காமராஜ்        13-04-1954 முதல் 02-10-1963 வரை

எம்.பக்தவச்சலம்        02-10-1963 முதல் 06-03-1967 வரை

அண்ணா        06-03-1967 முதல் 03-02-1969 வரை

மு.கருணாநிதி         10-02-1969 முதல் 04-01-1971 வரை
                              15-03-1971 முதல் 31-01-1976 வரை

எம்.ஜி.ஆர்        30-06-1977 முதல் 17-02-1980 வரை
                              09-06-1980 முதல் 15-11-1984 வரை
                              10-02-1985 முதல் 24-12-1987 வரை

ஜானகி ராமச்சந்திரன்        07-01-1988 முதல் 30-11-988 வரை

மு.கருணாநிதி        27-01-1989 முதல் 30-01-1991 வரை

ஜெ.ஜெயலலிதா        24-06-1991 முதல் 12-05-1996 வரை

மு.கருணாநிதி        13-05-1996 முதல் 13-05-2001 வரை

ஜெ.ஜெயலலிதா        14-05-2001 முதல் 21-09-2001 வரை

ஓ.பன்னீர்செல்வம்        21-09-2001 முதல் 01-03-2002 வரை

ஜெ.ஜெயலலிதா        02-03-2002 முதல் 12-05-2006 வரை

மு.கருணாநிதி        13-05-2006 முதல் 15-05-2011 வரை

ஜெ.ஜெயலலிதா        16-05-2011 முதல் 27-09-2014 வரை 



Thanks dailythanthi

Saturday, September 27, 2014

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:

ஜெயலலிதா மற்றும் 3 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு:
ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு பாடம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ Moulavi JS Rifayee வெளியிடும் அறிக்கை:

1991-1996ஆம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு கடந்த 18 ஆண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நீண்ட காலம் நடந்த வழக்கு என்ற சாதனையைப் பெற்றுள்ளது. 

சமீபகாலமாக பல்வேறு பதவி ஆசை வார்த்தைகளுக்கு நீதிபதிகளும் பலி ஆகிறார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உச்சக்கட்ட அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருக்கிறது; நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இது அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களுக்கும்; அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஒரு பாடமாக அமையும். 

இந்த தீர்ப்பினால் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று ஒரு தரப்பும், தோற்று விட்டோம் என்று இன்னொரு தரப்பும் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால் இதற்கு அடுத்தடுத்த நீதிமன்றங்களும் இந்தத் தீர்ப்பை அலசக்கூடிய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்தவகையில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாடமாக அமைந்துவிட்ட தீர்ப்பு என்று மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தீர்ப்பைப் பார்க்கிறது.

இவண்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர்

Saturday, September 20, 2014

அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியைக்கும் தொண்டி தமுமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி


தொண்டியில் இன்று செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்த வருடம் அதிகளவில் மாணவர்கள் மதிப்பெண் பெற்றனர் இதற்கு பெரிதும் காரனமாக அமைந்த ஆசிரியர் ஆசிரியைக்கும் பள்ளிக்கும் தொண்டி தமுமுக சார்பில் விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விருதுகளை அரசு மேல் நிலைப்பள்ளி தொண்டிக்கு வருவதற்கு இடத்தை தானமாக வழங்கிய கல்வி தந்தை கான்சாகிபு செய்யது முகம்மது அவர்களின் பேரன் செய்யது முகம்மது அவர்கள் விருதுகளை வழங்கினார் உடன் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் இஞ்சினியர் அபுபக்கர் மானவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஆசிக் அஹமது உள்ளிட்டோர் இருந்தனர்

Decan chronicle ஆங்கில பத்திரிகையில் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அவர்கள் அளித்த பேட்டி

த மு மு க தலைவர் ரிபாய் வெளிப்படுத்தியதாவது , 

யார் இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து சந்தேகம் எழுப்பும் நபர்களின் கருத்தை மாற்றுவதற்கு மோடியின் பேட்டி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் .

எனினும், மோடியும் , அவரது கட்சியை சார்ந்தவர்களும் முஸ்லிம்கள் குறித்து கூறிய கடந்த கால அறிக்கைகள், குஜராத் கலவரங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தால் அது தவறு என்று கூறினார்.

தேசபற்றை நிரூபிக்க பிரதமரின் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் ஏற்கனவே நாட்டிற்காக போராடியும், உயிரை தியாகம் செய்தும் இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Tmmk president rifayee expressed hope that modi's statement would change the opinion of those who raise doubts about the patriotism of indian muslims.

however, he said that if modi and his party thought that muslims would forgot their past statements and the gujarat riots, they were wrong.we don't need prime minister's certificate to prove our patriotism .

We always fought sacrificed our lives for the country, he noted-

http://www.deccanchronicle.com/140920/nation-current-affairs/article/muslims-laud-pm-narendra-modi’s-remark