Saturday, September 20, 2014

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி தாரீர்!

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி தாரீர்! பேரழகும் இளங்குளிரும் கொண்டாடி மகிழும் அழகிய காஷ்மீர், இப்போது பெரு வெள்ளத்தில் மூழ்கி சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இமயத்தின் அடிவாரத்தில், பார்புகழ் போற்றும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நம் இந்திய சகோதர, சகோதரிகள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு உதவிட இந்தியா வெங்கும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண நிதியை சேகரிக்கிறார்கள். 1999ல் ஒரிஸ்ஸா புயல் நிவாரண நிதி, 2001ல் குஜராத் பூகம்ப நிவாரண நிதி என தேசிய பேரழிவுகளின் போது, நாட்டு மக்களுக்காக நிவாரண நிதி சேகரித்த தமுமுக இப்போது, ஜம்மு&காஷ்மீர் மக்களின் துயர் துடைக்கவும் மக்களை தேடி வருகிறது. மனிதநேயம் கொண்டோரே... உங்கள் உள்ளங்களை திறந்து உதவிடுவீர்...!! வங்கி கணக்கு விபரம்: A/C No:034811011900313 TMMK TRUST, Andhra Bank, Chennai Main Branch, Rajaji Salai, Chennai-1 தலைமையகம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 7, வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை &1 போன்: 044&25247824

Tuesday, September 16, 2014

காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்காக நிவாரண நிதி திரட்டப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. முதலாவதாக சென்னை தலைமையகத்திற்கு ‘ஹலால் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களிடம் ரூ.10,000/&க்கான காசோலையை வழங்கினார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உடன் இருந்தார்.

Sunday, September 14, 2014

தத்தளிக்கும் காஷ்மீர்: ஒரு முக்கிய வேண்டுகோள்

தத்தளிக்கும் காஷ்மீர்:
ஒரு முக்கிய வேண்டுகோள்
உலகில் உன்னதமான சுற்றுலாத்தலமான, இயற்கை எழில் நிறைந்த காஷ்மீர், சமீபத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் அழிவின் அடையாளமாக காட்சியளிக்கிறது.
மழை நின்று ஒருவாரம் ஆகியும் வெள்ளத்தின் காரணமாக ஸ்ரீநகரின் வீதிகள் அனைத்துமே மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டாலும், லட்சக்கணக்கான மக்கள் அதிலே மாட்டிக்கொண்டு இன்னமும் பரிதவித்து வருகின்றனர்.
வீடுகளை, உடைமைகளை இழந்தவர்களாக, உடுப்பதற்கும், உண்ணுவதற்கும் இல்லாதவர்களாக காஷ்மீர் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அடுத்த வேளை உணவிற்கு ஏங்கி நிற்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் பல கிராமங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. வெள்ளம் வடிந்து இயல்பான நிலைக்கு அவர்கள் திரும்பவே நீண்ட காலம் ஆகலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் ஏற்படாத ஒரு மோசமான வெள்ளப் பேரழிவு இது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மத்திய, மாநில அரசுகளும், இந்திய ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டும், உதவியும் செய்து வருகின்றன. எனினும் அங்கிருந்து வரக்கூடிய செய்திகளும், அங்குள்ளவர்களுடன் நாம் தொடர்பு கொண்டபோது கிடைத்த செய்திகளும் நம்மை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகின்றன. அதிர்ச்சியடைய செய்கின்றன.
இந்தியாவின் எந்தப் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த துயரத்தில் பங்குபெற்று உதவிகளை செய்துவரக்கூடிய தமுமுக, ஏற்கனவே குஜராத் நிலநடுக்கத்தின் போதும், ஒரிஸ்ஸா வெள்ள பாதிப்பின்போதும் கோடிக்கணக்கில் நிதியுதவியும், பொருளுதவியும் செய்திருக்கிறது.
அதேபோல் காஷ்மீர் துயரத்திலும் தன்னை இணைத்துக் கொள்கிறது. தன்னுடைய லட்சக்கணக்கான தொண்டர்களையும் அந்த துயரத்தில் பங்கெடுக்கச் செய்யும் விதமாக அம்மாநில மக்களுக்காக தாராள பொருளாதாரத்தைத் திரட்டி, அனுப்புவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உ.பி. மாநிலம் முசப்பர் நகர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருளுதவிகளை கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சியின் இறுதிக்கட்டமாக வரும் 19.09.2014 அன்று நமது கழகத்தின் மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி அவர்களும், பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் முசப்பர் நகர் செல்ல இருக்கிறார்கள்; இன்ஷாஅல்லாஹ்.
அதேபோன்று காஷ்மீர் மக்களுக்காகவும் நம்மால் இயன்ற அளவிற்கு குறைந்தது 2 கோடி ரூபாயாவது திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்களின் தலைமையில் மாநிலச் செயலாளர்கள் கோவை செய்யது, பி.எஸ்.ஹமீது ஆகிய மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆகவே துண்டுப்பிரசுரங்கள், பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் காஷ்மீர் துயரத்தை எடுத்துச்சொல்லி நிதி திரட்ட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் அடுத்தடுத்து வரக்கூடிய ஒவ்வொரு ஜும்ஆவிலும், எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினத்தன்றும் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்காக்களிலும் நிதி திரட்டி காலதாமதமின்றி வரும் 10.10.2014க்குள் தலைமையிடம் ஒப்படைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நீங்கள் செய்யும் தாராள பொருளுதவி பாதிக்கப்பட்ட காஷ்மீர மக்களின் கண்ணீரைத் துடைப்பதுடன், இறைவனின் அருளையும் பெற்றுத்தரும் என்பதையும் மறவாதீர்.
- தமுமுக தலைமையகம்

Wednesday, September 3, 2014

கீழக்கரை நகர தமுமுக சார்பில் பொதுக்கூட்டம்








இராமநாதபுரம் கிழக்கு கீழக்கரை தமுமுக சார்பில் 1/9/2014 அன்று மாலை பொதுக்கூட்டம் நடைப்பெற்றது பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் வரலாற்று உணமைகளை தமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை செய்யது அவர்கள் தனது சிறப்புரையில் எடுத்துரைத்தார்.

மாவட்ட தலைவர் சகோதரர் தொண்டி சாதிக்,மாவட்ட செயலாளர் தேவிபட்டினம் ஊராட்சிமன்ற தலைவர் சகோதரர் ஜாகீர் ஹுசைன்,பொருளாலர் சகோதரர் வானி சித்திக் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்

Wednesday, August 27, 2014

கீழக்கரை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்று ஆய்வு

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடம் ரூபாய் 15,00000 ( பதினைந்து லட்சம் ) செலவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியிலிருந்து கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டிட வேலைகளை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்று ஆய்வு செய்தபோது.

கீழக்கரை தமுமுக நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.

கீழக்கரை  தமுமுக நடத்தும்  31.08.2014 மாலை 6:30 மஃரிப் தொழுகைக்குப்பிறகு கீழக்கரை நகர் நடத்தும் பாலஸ்தீனத்தில் நடப்பது என்ன ? உண்மையை உரைக்க மாபெரும் பொதுக்கூட்டம்.
தலைமை : M.சாதிக் பாட்சா மாவட்ட தலைவர்.
வரவேற்புரை : S.முஹம்மது சிராஜுதீன் நகர் தலைவர்.
சிறப்புரை : சகோ.கோவை செய்யது அவர்கள் மாநில செயலாளர் தமுமுக.
சகோ.ஜாஹிர் ஹுசைன் மாவட்ட செயலாளர் மமக (தேவிபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் )
நன்றியுரை : சகோ.அன்பின் ஹசன் அவர்கள் (மூத்த தலைவர் கீழக்கரை நகர் தமுமுக)
பாலஸ்தீனத்தில் நடக்கும் அநீதியை அறிந்திட அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறது தமுமுக , கீழக்கரை நகர், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்.