(18 Jul) சிறுபான்மையின மக்களின் தாய்மொழிப் பாட மதிப்பெண்களையும் தேர்ச்சிக்குக் கணக்கில் கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறினார்.சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியது:எனக்கு முன்னதாக பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கோபிநாத்தும், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமச்சந்திரனும் தமிழகத்தில் சிறுபான்மையினர் மொழி எந்த நிலையில் உள்ளது என்பதை எடுத்துக் கூறினர்.அரசியலமைப்புச் சட்டம் 19 (ஏ), பிரிவு 29, பிரிவு 30-களின்படி, சிறுபான்மையின மக்களுக்கு அவர்களுடைய மொழியைப் பாதுகாப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.ஆனால், இப்போது இந்த மக்கள் தமிழைக் கட்டாயப் பாடமாக கற்கவேண்டும் என்பதோடு, அவர்களின் தாய்மொழியையும் கற்கலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாய்மொழி மதிப்பெண், தேர்ச்சிக்கு கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி, அரசியலமைப்புச் சட்ட உரிமையின்படி அவர்களின் தாய்மொழி மதிப்பெண்ணையும் தேர்ச்சிக்கான கணக்கில்
எடுத்துக்கொள்ள வேண்டும்.அதற்கு தமிழ்ப் பாடத்தின் முதல் பகுதியை இரண்டாகப் பிரித்து, முதல் பிரிவில் செயல்பாட்டுத் தமிழையும், இரண்டாம் பிரிவில் சிறுபான்மையினரின் தாய் மொழியையும் சேர்க்க வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:சிறுபான்மையின மக்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்கும்போது, தமிழை கட்டாயப் பாடமாக படிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது? தமிழைப் படித்தால்தான் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் வாய்ப்பு கிடைக்கும். எனவே, தமிழை கட்டாயமாகப் படித்தே ஆகவேண்டும்.சிறுபான்மையினரில் ஒருசிலர் மட்டும்தான் தமிழைப் படிக்காமல் இருக்கின்றனர். இது சட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை என்பதற்கு அடையாளம் என்றார்.Sunday, July 20, 2014
திருப்புலானி ஒன்றியம் மேலப்புதுக்குடி தமுமுக கிளை சார்பில் இன்று நடைபெற்ற இப்தார்
Saturday, July 19, 2014
Friday, July 18, 2014
சிறுபான்மையினரின் தாய் மொழிப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும்: ஜவாஹிருல்லா
Thursday, July 17, 2014
லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சட்டமன்றத்தில் மமக கோரிக்கை
முஸ்லிம் தமிழர்களின் ஆடையான லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சட்டமன்றத்தில் மமக கோரிக்கை
இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வேட்டி அணிவதை தடைச் செய்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு எச்சரிகை தாக்கீடு அனுப்பபடும் என்றும் வேட்டி அணிவதை தடைச் செய்யும் மன்றங்களின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யும் வகையில் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்றும் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முனைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது 'தமிழர்களின் கலாச்சார ஆடையான வேட்டியை தடைச் செய்த கிரிக்கெட் சங்கத்திற்கு எச்சரிகையும் வேட்டி கட்டுவதை தடைச் செய்யும் மன்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டத் தொடரிலேயே சட்டமும் இயற்றப்படும் என்ற அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
இந்த சட்டத்தில் முஸ்லிம் தமிழர்களின் ஆடையான லுங்கி அணிவதை தடுப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகை காணப்பட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்

Saturday, July 12, 2014
பாலஸ்தீன மக்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு இரையாக்கி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அப்பாவி பாலஸ்தீன மக்களை தொடர்ந்து வெடிகுண்டுகளுக்கு இரையாக்கி வரும் இஸ்ரேலைக் கண்டித்தும்,
பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும்,
சென்னை உட்பட அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் வரும் செவ்வாய் (15.07.2014) அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமுமுக தலைமையகம் அறிவித்துள்ளது.
Tuesday, July 8, 2014
Wednesday, July 2, 2014
ஷார்ஜாவில் தமுமுக நடத்தும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஃப்தார்
ஷார்ஜாவில் தமுமுக நடத்தும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் இஃப்தார்
இடம் – தமுமுக மர்கஸ், நத்தானி மெடிக்கல் சென்டர் பில்டிங்,
நாள் – 04-07-2014 வெள்ளிக்கிழமை
தலைமை –
அண்ணன் ஹூசைன் பாஷா
(அமீரக துணை தலைவர் தமுமுக)
சிறப்புரை –
எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது
(இணைப் பொதுச்செயலாளர் ம.ம.க)
பத்திரிக்கையாளர் என்.தைமிய்யா
(கழக பேச்சாளர் தமுமுக)
நன்றியுரை தோப்புத்துறை அபுல் ஹசன்
மண்டல தலைவர் தமுமுக

Subscribe to:
Posts
(
Atom
)
.jpg)