Thursday, May 8, 2014

முக்கிய அறிவிப்பு +2 ரிசல்ட் வரும் மே 9 ந் தேதி வெளியீடு

+2 ரிசல்ட் வரும் மே 9 ந் தேதி வெளியீடு www.tnresult.nic.in www.dgel.nic.in www.dge2.nic.in www.dge3.nic.in ஆகிய இணையதளங்களில் பாத்துக்கொள்ளலாம் .

Thursday, May 1, 2014

வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் இஸ்லாமிய சொற்பொழிவு

 தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக வரும் வெள்ளியன்று இரவு 9:00 மணியளவில் தேரா மர்கசில் மண்டல தலைவர் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்கள் குர்ஆன் ஹதீஸுக்கு கட்டுபடுவோம் என்ற தலைப்பிலும்,

சோனாப்பூர் பலுதியா கேம்பில் மஹ்ரிப் தொழுகைக்குப் பின் சகோதரர் லெப்பைகுடிகாடு ஷபியுல்லாஹ் அவர்கள் பெற்றோர்களை பேணுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்கள் இந்நிகழ்வில் திரளாக சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம் 

Tuesday, April 22, 2014

நடிகர் விஜய் பற்றிய அவதூறு பேச்சு: தமுமுகவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை

தமுமுகவின்
பத்திரிக்கை அறிக்கை
_____________________________
நடிகர் விஜய் பற்றிய அவதூறு பேச்சு: தமுமுகவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
சில மணி நேரங்களுக்கு முன்பு யூடியுப் இணையதளத்தில் நடிகர் விஜய் அவர்களை பற்றி தரக்குறைவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர் பேசி உள்ளார் என பலர் நம்மை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அதன்அடிப்படையில் யூடியுப் இணையதளத்தை ஆய்வு செய்தபோது நடிகர் விஜய் அவர்களை அவதூறாக பேசியவருக்கும் தமுமுகவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இதுபோன்ற பேச்சுகளை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது, இதுபோன்ற அவதூறான பேச்சுகளை சமூக வலை தளங்களிலோ, இணையதளத்திலோ எழுதவோ, பேசவோ கூடாது என்பதை தமுமுக தலைமை தமது தலைமை நிர்வாகிகள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை கண்டிப்பாக தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அநாகரிகமான விமர்சனங்களுக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். அதுவேறு ஒரு இயக்கத்தின் சார்பில் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த இயக்கத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்
(ஜே.எஸ். ரிபாயி)

Saturday, April 19, 2014

கீழக்கரை நகரில் உதயசுரியனுக்கு வாக்கு சேகரிக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்







இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முகமது ஜலில் அவர்களை ஆதரித்து கீழக்கரை நகரில் உதயசுரியனுக்கு வாக்கு சேகரிக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

Thursday, April 17, 2014

மல்லிப்பட்டினத்தில் மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி






கலவரம் நடைபெற்ற மல்லிப்பட்டினத்திற்கு மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று (16.04.2014) காலை சென்றார். அவரை ஜமாத் நிர்வாகிகளும், மமகவினரும் வரவேற்று சங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பொதுச் செயலாளர் கேட்டறிந்தார். இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல், சமூக மோதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டதாகவும், தினத்தந்தி பத்திரிக்கை, அப்பட்டமாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் ஜமாத்தினர் குறைகூறினர். தற்போது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கு மமக சட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
நேற்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் ‘ஒற்றுமையாக இருப்போம்’ என வாக்குறுதிகளை பரிமாறிக் கொண்டதாகவும், சேதப்படுத்தப்பட்ட தர்ஹாவை இந்துக்கள் தங்கள் செலவில் சரிசெய்து தருவதாக கூறியுள்ளதாகவும் ஜமாத்தினர் கூறினர்.
மமக பொதுச் செயலாளரை சந்திக்க அவ்வூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வருகை தந்தனர். அவர்களிடம், ‘அமைதியைப் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், பல சமூக மக்களும் வாழும் ஜனநாயக நாட்டில் மிகுந்த பொறுப்போடு நாம் செயல்பட வேண்டும்’ என்று பொதுச் செயலாளர் கூறினார்.
இச்சந்திப்பின்போது ஜமாத் தலைவர் முகம்மது ரபீக், செயலாளர் எச். சேக் அப்துல்லா, தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எச். அஹமது கபீர், செயலாளர் எச். ரஹ்மத்துல்லா, பொறுப்பாளர்கள் அப்துல் ஜப்பார், கே.எச்.எச். முகம்மது ஹனீபா, அப்துல் மஹ்ரூப், எம்.கே.எம். அபுதாஹிர் மற்றும் மமக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இச்சந்திப்பு தங்களுக்கு ஆறுதலாகவும், மன நிம்மதியாகவும் இருப்பதாக ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.