Sunday, December 8, 2013

கிழக்கரை நகர் சர்பாக டிசம்பர் 7முதல்12 வரை சாலை பாதுகாப்பு வார



ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமுமுக சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா அறிவிக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சி இன்று துவங்கப்பட்டது. தமுமுக மாவட்ட செயலாளர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று துவக்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் சித்தீக் ,செயலாளர் பைசல் அமீன் ,துணை செயலாளர் புஹாரி,ஒன்றிய தலைவர் ரைஸ் இப்ராஹிம்,செயலாளர் சேகு தாவுத் சாதிக்,இர்பான்,நாசர்,சலீம்,அபுதாகிர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் சிராஜுதீன் தலைமையில் நிகழ்ச்சி ஒருங்கினைப்புகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வழியுறுத்தப்பட்டது, ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு டூவீலர் ஓட்டியவர்களுக்கு பேனா பரிசு வழங்கப்பட்டது.மேலும் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்த கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

சிறுவர் அணி தமுமுக அடுத்த தலைமுறை போராளிகள் டிசம்பர் 6 போர் களத்தில்






Wednesday, December 4, 2013

கிழக்கரை நகர் சர்பாக டிசம்பர் 7முதல்12 வரை சாலை பாதுகாப்பு வார விழா நடைபெறு உள்ளது...


இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கிழக்கரை நகர் சர்பாக டிசம்பர் 7முதல்12 வரை சாலை பாதுகாப்பு வார விழா நடைபெறு உள்ளது... தெடக்கி வைப்பாவர் தமுமுக மாவட்ட தலைவர்  சாதிக் பாட்ஷா, நிகழ்ச்சி இறுதியாக தலைகவசம் வழங்கி நிறைவு உரை வழங்குபவர் முத்த தலைவர்,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் M.H.ஜவாஹிருல்லாஹ்.

Tuesday, December 3, 2013

தமுமுக துபை மண்டலத்தின் இரத்த தான முகாம்







கடல் கடந்தும் தொடரும் மனித நேய பணி

தமுமுக துபை மண்டலத்தின் இரத்த தான முகாம்

துபை அரசின் சுகாதார துறையின் சார்பாக 2:12:2013 திங்கள் அன்று மாலை குளோபல் வில்லேஜில்
இரத்த தான முகாம் நடைப்பெற்றது,இம்முகாமில் தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக அதன் தலைவர் அதிரை அப்துல் ஹமீத் அவர்கள் தலைமையில் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு இரத்தம் தானம் செய்தனர்,

2:12:2013 திங்கள் அன்று துபையில் பெரும்பாலன சகோதரர்களுக்கு அலவலக பணிகள் இருந்தாலும் திரளான சகோதரர்கள் கலந்துக் கொண்டு இம்மை மறுமை நன்மைக்காக இம்முகாமில் இரத்தம் தானம் செய்தது குறிப்பிடத்தக்கது,ஆர்வத்தோடு சகோதரர்கள் இரத்தம் தானம் செய்தது கடல் கடந்து வாழ்ந்தாலும் எங்களின் மனிதநேய பணிகள் தொடரும் என்பதையும் உணர்த்தும் விதமாய் இருந்தது,

இம்முகாமில் தமுமுக அமீரக துணைத்தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா,மண்டல செயலாளர் அய்யம்பேட்டை முஹம்மத் பாரூக்,முன்னாள் செயலாளர் மதுக்கூர் சிராஜ்,லெப்பைக் குடிகாடு ஷஹிதுல்லாஹ்,அதிரை அஷ்ரப்,திருப்பூர் கலீல்,கோவை ரியாஸ்,விழுப்புரம் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜஹாங்கிர், கடையநல்லூர் பாதுஷா,கொள்ளுமேடு ஜாகிர் ஹுசைன் உள்ளிட்ட சகோதரர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்,

எல்லா புகழும் இறைவனுக்கே.