Saturday, June 22, 2013
கீழக்கரைஇல் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி ’குறித்த தெருமுனை விளக்க பொதுக்கூட்டம்
21.06.2013 அன்று வரும் ஜீலை 6 அன்று தமுமுக நடத்தும் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி ’குறித்த தெருமுனை விளக்க பொதுக்கூட்டம். இடம் கீழக்கரை் முஸ்லிம் பஜாா சிறப்புரை கோவை பீா் த.மு.மு.க.மாவட்ட நிர்வாகிகள் சாதிக் பாஷா, பஷர் அஹ்மத் மற்றும் நகர நிர்வாகிகள் சிரஜுடீன், ஈசி சாதிக் மற்றும் த.மு.மு.க., ம.ம.க. வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Friday, June 21, 2013
கீழக்கரை நகரில் ஜவாஹிருல்லா MLA நாளை (21.06.2013) முகாமிட்டு ஆய்வு - பொது மக்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என TMMK தகவல் !
இராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் முனைவர். பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கீழக்கரை நகருக்கு அடிக்கடி வந்து பொதுமக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நாளை வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரையில் முகாமிட்டு, பொதுமக்களின் குறைகளை நேரில் விசாரித்து ஆவன செய்வார்கள் என கீழக்கரை நகர் த.மு.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
Saturday, June 15, 2013
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹீருல்லாஹ்வின் நேரடி முயற்சியால் மின் கட்டண வசூல் மையம் கீழக்கரை பேருந்து நிலையத்தில் திறக்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..........
இது சம்பந்தமாக நானும் கீழக்கரை நகர் தமுமுக தலைவர் மற்றும் PRO நாசர். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹீருல்லாஹ் அவர்களை சந்தித்து வலியுரித்திய போது எங்கள் முன்னால் சம்மந்த பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணத்தை கேட்டார். மின்வாரிய அதிகாரிகள் மென்பொருள்கள் பெருத்தும் பணிகள் நடைபெறுகின்றது என்று பதில் அழித்தனர் என்பது குறிப்பிடதக்காது.
கீழை. இர்பான்
Thursday, June 13, 2013
Tuesday, June 11, 2013
கீழக்கரை தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது
இது குறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது
தற்போது பள்ளிகள் தொடங்கி விட்டதால் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செயல்பட தொடங்கி விட்டது.
கீழக்கரையில் அதிக அளவில் ஆம்னி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் பள்ளி குழந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்றனர்.இவற்றில் பல வாடகைக்கு இயக்க முறையான அனுமதி பெறவில்லை மேலும் சிலருக்கு இதில் ஓட்டுநர் லைசென்ஸ் இல்லை.சிலர் கூடுதல் வாடகைக்க்காக அதிக அளவில் பள்ளி குழந்தைகளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்றனர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது .
மேலும் தெருக்களிலும்,வளைவுகளிலும் அசுர வேகத்தில் செலவதால் அடிக்கடி சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.அரசு அதிகாரிகள் போக்குவரத்து வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். ஓட்டுநர்களூம் பொறுப்புணர்ந்து பாதுகாப்பான முறையில் அழைத்து செல்லும் வேண்டும்.பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
news by
kilakaraitimes.blogspot.com
Subscribe to:
Posts
(
Atom
)




