Monday, June 20, 2011

த.மு.மு.க. சார்பில் மருத்துவமனை திறப்பு


கீழ்க்கரை, ஜூன். 19: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் த.மு.மு.க. சார்பில் மருத்துவமனை திறப்பு விழா (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு த.மு.மு.க. மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் இபுராகீம் வரவேற்றார். காஞ்சிரங்குடி ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது, த.மு.மு.க. நகர் தலைவர் ஜியாவுல் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம் மருத்துவமனையை ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாகிருல்லா திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் த.மு.மு.க. சார்பில் 96 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. புதியதாக மேலும் 3 ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்படவுள்ளன. 2008-ம் ஆண்டு கோவை குனியமுத்தூரில் ஒரு சிறிய மருத்துவமனை தொடங்கப்பட்டது. அங்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. அதேபோல, குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்க, ராமநாதபுரம் மாவட்டப் பொருளாளராகப் பணியாற்றி இறந்துபோன சல்மானின் நினைவாக காஞ்சிரங்குடியில் அவருடைய பெயரில் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. புதியதாகப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு மக்கள் நலப் பணிகளை விரைவாகச் செயல்படுத்தி வருகிறது என்றார்

புது எம்.எல்.ஏக்கள்-கல்கி

அல்-கோபர் த.மு.மு.க.விற்கு இரத்ததான விருது

அல்-கோபர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இரத்ததான விருது

தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காவும், மீனவ சமுதாயத்திற்காகவும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் தாயான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மார்கப் பணி மற்றும் சமுதாய பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, 24 மணிநேர ஆம்புலன்ஸ் மற்றும் இரத்தான சேவை போன்றவற்றை தொடர்ந்து செய்துவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு நிகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமே என்றால் அது மிகையல்ல.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தாயகம் கடந்து தன் சமுதாயச் சேவையை நிலைநாட்டி வருகிறது. சவூதிஅரேபியா கிழக்கு மாகாணம் அல்-கோபர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த வருட ஹஜ் மாதத்தின் போது ஹஜ் பயனிகளுக்காக இரு இரத்ததான முகாம்களை நடத்தியது. மேலும் அவ்வப்போது அவசரத் தேவைகளுக்காக தம்மாம் மற்றும் அல்-கோபர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் இரத்ததானம் செய்து உயிர் காக்க உதவி வருகிறது. இதனை பாராட்டும் முகமாக அல்-கோபர் கிங் ஃபஹத் மருத்துவமனை தலைமை நிர்வாகிகள் கடந்த 14-6-2011 அன்று நடந்த மருத்துவமனை விழாவில் அல்-கோபர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு விருது வழங்கி கௌரவித்தனர்.

மக்கள் தொடர்பு அதிகாரி

அல்கோபர் கிளை தமுமுக

Tuesday, June 7, 2011

தமுமுக அலுவலகத்தில் தீ வைப்பு நெல்லிக்குப்பத்தில்





நெல்லிக்குப்பத்தில் 04.06.2011 அன்று நள்ளிரவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர அலுவலகத்தில் சில சமூக விரோதிகளால் தீ வைக்க பட்டது. பின்னர் த.மு.மு.க சகோதர்கள் செய்தியை அறிந்து உடனே நகர அலுவலகத்தை நோக்கி விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் காவல்துரைனரிடம் புகர் கொடுக்கபட்டது. காவல்துரைனர் சம்பவ இடத்தை நேரில் பார்த்தனர்.. யார் இந்த கொடூர செயலை செய்தனர் என்பது விசரிகபட்டு வருகிறது.

Thursday, June 2, 2011

தமுமுக துபை மண்டலம் நடத்தும் 8வது இரத்த தான முகாம்


இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 03-06-2011, வெள்ளிக்கிழமையன்று துபை அல் வாசல் மருத்துவமனையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - துபை மண்டலம் சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மனிதநேய பணியில் ஆர்வமுள்ளவர்கள் அல்லாஹ்விற்காக கலந்துகொண்டு இரத்ததானம் செய்யுமாறும், இச்செய்தியை மற்றவர்களக்கு எத்திவைக்குமாறும், தங்களால் முடிந்தவர்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.