Sunday, February 27, 2011

கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் பெண்கள் உள்பட 350 பேர் கைது ! போக்குவரத்து பாதிப்புகள் !






மனித நேய மக்கள் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகிறது.
பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மாநாடுகள் வாகன பேரணிகள் மேலும் குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மதுக்கடை மறியலில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது கட்சியின் கோவை மாநகர சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கோவை செல்வபுரம்தெற்கு, கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி, உக்கடம் பஸ் நிலையம், போத்தனூர் ஆட்டுத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில்
உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை (25-02-2011) அன்று மாலை 4 மணிக்கு கோவை செல்வபுரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை த மு மு க, மற்றும் ம ம க, கட்சியினர் அதுபோல் அருகில் உள்ள
பள்ளிகூட ஆசிரியர்கள், மாணவர்கள்,அந்த பகுதி அனைத்து சமூக பொது மக்கள் ஆகியோர்கள் முற்றுகையிட்டார்கள். ஒரு மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே காவல் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துனை ஆட்சியாளர், மற்றும் டாஸ்மாக்
அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை முலம் வருகிற 6ம் தேதி அந்த டாஸ்மாக் கடையை முழுமையாக அகற்றிகிறோம் என்று வாக்கு உறுதி அளித்தார்கள். பின்னா மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர் காவல் துறை பிறகு மாலை 8 மணிக்கு விடுதலை
செய்தினர். இந்த மறியல் போராட்டத்திற்க்கு த மு மு க. மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமையில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், பொருளாளர் அப்பாஸ், மற்றும் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அப்பாஸ், சுலைமான், ஜாபர் சாதிக், ரபிக், உள்பட
பெண்கள் கலந்து கொண்டார்கள்.

Monday, February 21, 2011

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்



சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.
மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.

Friday, February 18, 2011

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக மீனவர் சமுதாயம் உயிரிழப்புகளையும், படுகாயங்களையும் எதிர்கொள்வது தொடர்கதையாகி வரும் நிலையில், நாகையைச் சேர்ந்த 106 மீனவர்கள் 15.02.2011 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 22.02.2011 அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகையிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Thursday, February 17, 2011

106 தமிழக மீனவர்கள் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தொடர்ந்து பலவகையிலும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். உயிர்களைப் பறிகொடுத்தல், உடைமைகளை இழத்தல் என துன்பங்களை சந்தித்துவரும் நமது மீனவர்கள் இப்போது கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கக்கட-ன் மீன் வளங்களை, தங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கும் நோக்கத்தோடு, தமிழக மீனவர்களை அச்சுறுத்தி ஒருவகை மிரட்டல் போக்கை இலங்கை அரசு செய்து வருகிறது.

இவ்விவகாரத்தில் இந்திய நடுவண் அரசு, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும் விதமாக கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.

அந்த தைரியத்தில்தான் இலங்கை ராணுவம் 106 தமிழக மீனவர்களைக் கைது செய்யும் அளவுக்கு துணிச்சல் பெற்றிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களை 48 மணி நேரத்திற்குள் விடுதலை செய்திடவும், அவர்களது உடைமைகளை சேதமின்றி திருப்பிக் கொடுக்கவும் மத்திய-மாநில அரசுகள் உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Saturday, February 12, 2011

தமுமுக துபை மர்க்கஸில் இணையதளம் மூலமாக தலைவரின் உரை.

இறைவனின் கிருபையால், பிப்ரவரி 10 வியாழன் இரவு 10 மணியளவில் தமுமுக துபை மர்க்கஸில் தாயகத்தில் இருந்து, தமுமுக தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இணையதளம் மூலமாக இன்றைய அரசியல் சூழ்நிலைகளை பற்றி உரை நிகழ்த்தினார்கள்,கடந்த மாதம் தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு பின் முதன் முதலாக வளைகுடா இயக்க சகோதரர்களுக்கு மத்தியில் இணையதளம் மூலமாக பேராசிரியர் அவர்கள் உரையாற்றியது துபை மண்டல தமுமுக சகோதர்களுடன்தான் என்பது குறிப்பிடத்தக்கது, உரைக்குப் பின் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்கள், நிகழ்விற்கு துபை மண்டல கிளை கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்புக் கொடுக்கப்பட்டது அனைத்து கிளை கழக சகோதரர்களும் ஆர்வமுடன் சமுதாய கவலையுடன் கலந்து கொண்டார்கள் . எல்லாப் புகழும் இறைவனுக்கே.

mhj1.jpg

கவலையுடன் சமுதாய செய்திகளை கேட்கும் சமுதாய கண்மணிகள்.
mhj2.jpg