Monday, October 11, 2010
முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலை! த.மு.மு.க. கடும் கண்டனம்
முன்னாள் அமைச்சரான திரு. வெங்கடாசலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே சமூக விரோதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
அவரை கொடூரமான முறையில் கொன்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருமாறு காவல்துறையையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் ஒரு முன்னாள் அமைச்சருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இது தமிழக அரசுக்கு நல்லதல்ல.
திரு. வெங்கடாசலத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Saturday, October 9, 2010
கீழக்கரை தமுமுக நகர் புதிய நிர்வாகிகள்
கீழக்கரை தமுமுக நகர் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு
1) தலைவர்; முஜீப் ரகுமான்
2) துணை தலைவர் : முஸ்தகீன்
3) செயலாளர்: கபீர்
4) துணை செயலாளர் : ராஜா ஹுசைன்.
5) பொருளாளர் :வப்பு மரிக்க.
6) மாணவரணி செயலாளர்: இக்பால்
7) மருத்துவரணி செயலாளர்: சதக்காதுல
8) மக்கள் தொடர்பாளர்: பக்கர்
Wednesday, October 6, 2010
குமரி மாவட்டம் மிடாலத்தில் விநாயகர் ஊர்வலக் கலவரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்
சென்ற வாரம் மக்கள் உரிமையில் குமரி மாவட்டம் மிடாலத்தில் கடந்த 19ம் தேதி விநாயகர் ஊர்வலத்தின் போது நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். இதில் வீடுகள், கடைகள், மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. அரசு பஸ் தீவைத்து கொளுத்தப் பட்டது.சென்ற வாரம் மக்கள் உரிமையில் குமரி மாவட்டம் மிடாலத்தில் கடந்த 19ம் தேதி விநாயகர் ஊர்வலத்தின் போது நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். இதில் வீடுகள், கடைகள், மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. அரசு பஸ் தீவைத்து கொளுத்தப் பட்டது.இச்செய்தி மக்கள் உரிமையில் வெளியானதின் எதிரொலியாக தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.மிடாலம் பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட 8 வீடுகள், 3 கடைகளுடன் கூடிய வீடுகள், 21 கடைகள், மற்றும் 5 வாகனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு மொத்தம் 15 லட்சத்து 68 ஆயிரத்து 800 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிட தமிழக முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.அடுத்து கலவரத்தில் ஈடுபட்ட விநாயகர் ஊர்வலத்தினர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிடாலம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tuesday, October 5, 2010
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து 1 மாதத்தில் அப்பீல் செய்கிறது வக்பு வாரியம்
துபாய் தமுமுக மர்க்கஸில் தமீமுன் அன்சாரி தொலைப்பேசி மூலம் உரை

1-10-2010, அன்று துபாய் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மர்க்கஸில், இரவு 9 மணியளவில் சகோதரர் நாகூர் செய்யத் அலி அவர்கள் ஜும்மா தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் தமிழக துணை பொதுச்செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் பாபரி மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக தமிழகத்தில் இருந்தபடி தொலைப்பேசி மூலம் உரையாற்றினார்கள் தனது உரையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளையும் நீதிமன்ற தீர்ப்பின் மூலமாக முஸ்லிம் சமுதாய மக்களின் உள்ளக் குமுறல்களையும் ,மற்றும் சகோதர சமுதாய மக்கள் சட்ட வல்லுனர்கள் முன்னாள் நீதிபதிகள் நியாயவான்கள் ஆகியோர்களின் கருத்துக்களையும் அவர்களின் கவலைகளையும் எடுத்துரைத்தார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக எடுக்கவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகளையும் பரிமாறிக் கொண்டார்கள், மிகப்பெரிய அரசியல் சதி அரங்கேறி நீதித் துறையின் பரிபாலனம் சிதைக்கப்பட்டு நிர்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப் பட்ட தீர்ப்பு என்றும், முஸ்லிம்கள் இந்நேரத்தில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து ஒற்றுமையாக செயல்படக்கூடிய தருணம் என்றும் எடுத்துரைத்தர்கள். இறுதியாக நிகழ்வில் கலந்துக் கொண்ட சகோதரர்களின் தீர்ப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலுரைத்தார்கள், இன்ஷா அல்லாஹ் உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற சிந்தனையோடு இறைவனின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கலந்துக் கொண்ட சகோதரர்கள் கலைந்துச் சென்றார்கள்.பாபரி மஸ்ஜித் தொடர்பாக வழக்கு தொடுத்தவர் அதிர்ச்சியில் மரணம்
அஸ்லம் புரேவின் ஜனாசா ஊர்வலம்
பாபரி மஸ்ஜித் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அஸ்லம் புரே அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேட்டு அதிர்ச்சி அடைந்து அக்டோபர் 2 அன்று காலை மரணமடைந்தார்.
டெல்லியைச் சேர்ந்த சைக்கிள் ரிக்ஷா விற்பனையாளர் அஸ்லம் புரே. 1991ல் உ.பி. மாநில முதல்வராக இருந்த கல்யாண் சிங் பாபரி மஸ்ஜிதை சுற்றி 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். இந்த நிலப்பகுதியில் எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட மனுவை அது நவம்பர் 1991ல் ஏற்றுக் கொண்டு உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதே போல் மத்திய அரசு கையகப்படுத்திய நிலப் பகுதியில் மீண்டும் கரசேவை செய்ய வி.ஹெச்.பி. 2002ல் முயற்சித்தப் போது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரித்த நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் முன்பும் இவர் பிரமாண வாக்குமூலம் சமர்பித்துள்ளார். அடல்பிகாரி வாஜ்பேயியை லிபரான் ஆணையம் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் இவர் மனு செய்திருந்தார்.பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேட்டவுடன் அஸ்லம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானர். இவர் அது குறித்து யாரிடமும் பேசாமல் தனது அறையை விட்டு வெளியே வராமல் முடங்கிப் போனார். இவரது மகன் இம்ரான் செய்தியாளர்களிடம் பேசுகையில் அயோத்தி தீர்ப்பு எனது தந்தைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நான் எப்படி இனி முஸ்லிம் சமூகத்தை சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்நதார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தாரியாகஞ்சில் உள்ள அவரது வீட்டிலேயே மரணம் அடைந்தார். டெல்லி கேட் அருகே உள்ள அடக்கவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Saturday, October 2, 2010
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விவகாரம்: அவசரமாக தலைமை நிர்வாக குழு கூடியது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாக குழு அவரசகூட்டம் அக்டோபர் 1-ம் தேதி மாலை 4:30 மணிக்கு இன்று சென்னையில் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, துணை பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளை ஏளனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கருதுகின்றது விடுதலைப்பெற்ற இந்தியாவில் வழங்கப்பட்ட மிக மோசமான கட்டப்பஞ்சாயத் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு 450 ஆண்டு காலம் முஸ்லிம்கள் வழிப்பாடு நடத்திய இடம் பள்ளிவாசல் இல்லை என்றும் அது ராமர் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பது நடைமுறைச் சட்டங்களுக்கு முரணாக புராணங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். லக்னோ பெஞ்சின் இந்த நடைமுறையைப் பின்பற்றி; இனி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினால் இனி நாட்டில் எவரும் தமது உரிமைகளை தக்க வைக்க இயலாது. எனவே உத்திரப்பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எடுத்துள்ள முடிவை தலைமை நிர்வாக குழு வரவேற்கிறது.
2. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது டிசம்பர் 6, 1992ல் அப்பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தார். அன்று நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை இன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிறைவேற்ற வேண்டுமென இந்நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
3. அத்வானி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு உத்திரபிரதேச ராய்பரேலி நீதிமன்றத்தில் 18 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட மத்திய அரசு ஆவனச் செய்ய வேண்டுமென இந்நிர்வாக குழு கோருகின்றது.
4. பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதி பரிபாலண முறைக்கு விரோதமாக அமைந்த போதினும் அது இறுதி தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க சட்டவழியாக கடும் முயற்சி மேற்கொள்ளவோம். அதுவரை சட்டம் ஒழுங்கை மதிக்கும் இந்தியர்கள் என்ற அடிப்படையில் அமைதியும் நல்லிணக்கமும் நாட்டில் தழைத்தோங்கும் வகையில் செயல்பட அனைவரையும் இந்நிர்வாக குழு கோருகின்றது.