Thursday, September 9, 2010
தமுமுக சார்பாக நோம்பு பெருநாள் தருமம் வழங்கப்பட்டன
Tuesday, September 7, 2010
Monday, September 6, 2010
துபை மண்டல முமுகவின் மாதாந்திர செயற்க்குழு
முஸ்லீம் முன்னேற்றக் கழகம் துபை மண்டலத்தின் மாதாந்திர செயற்க்குழு 05-08-2010 அன்று வியாழன் இரவு 10:30 மணிக்கு மண்டலத்தின் தலைவர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்றது. தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சகோ.சிவகாசி முஸ்தஃபா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்ய வேண்டும் என்று உரை நிகள்த்தினார்கள்.மேலும் தலைமைக் கழக செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்கள். இச்செயர்க் குழுவில் வரக்கூடிய ரமளான் மாதத்தில் முமுகவின் மார்க்கப் பணி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.Saturday, September 4, 2010
அபுதாபி சிட்டியில் புதிய கிளை
27-08-2010 அன்று அபுதாபி முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது தமிழ்நாடு
முஸ்லீம் முன்னேற்ற கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின்
மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி ஆகியோர் மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி உரையாற்றினார்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் புதிய நிர்வாகம் மாநில துணை பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி தலைமையில் தேர்ந்து
எடுக்கப் பட்டது.
தலைவர் : தோப்புதுரை. ரசூல் முகம்மது
செயலாளர் : சிதம்பரம் புதகேணி.சுஜாவுதீன்
பொருளாளா ; : ராம்நாட். இஸ்மாயில்
துணைத்தலைவர் : இருமேனி. மௌலவி. இஸ்மாயில்ஷா
துணைச்செயலாளர் : ராஜபாளயம். சேக் முகம்மது
கீழை. அஹமது அப்துல் காதர்
மக்கள் உரிமை பொறுப்பாளர் : மதுரை.முகைதீன்
மக்கள் தொடர்பாளர் : கீழை. ஹசன் அஹமது ரிஃபாய்
செயல் குழு உறுப்பினர்கள் : செஞ்சி. செய்யது இஃப்திகார்தேரிளந்தூர். லு.ளு
அப்துல்லாஹ்
காயல் பட்டிணம் . முகைதீன்
காயல் பட்டிணம் . லெப்பை தம்பி
கீழை. சாதிக் (வு.மு)
தேரிளந்தூர். ஃபஜர் முகம்மது
எழுச்சியுடன் நடைபெற்ற தமுமுக-வின் அமீரக பொதுக்குழு
ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல்அய்ன், ராசல் கைமா, உம்மல்குவைன், புஜைரா என அனைத்து மண்டலங்களிலும் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமீரக பொதுக்குழுக் கூட்டம் துபாய் ஈவான் ஹோட்டலில் 03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. தாயகத்திலிருந்து வருகைப் புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் பொதுக் குழுவில் கலந்துக் கொண்ட அனைத்து மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி மற்றும் இயக்கம் வளர்க்கும் கலை குறித்த பயிற்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. துபை மண்டல தமுமுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டம் இஃப்தார் நிகழ்ச்சியோடு சிறப்புடன் நிறைவடைந்தது.
Thursday, September 2, 2010
சவுதி அரேபியா அல்ஹஸா-வில் தமுமுக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
“ரமலானின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றிய சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமுமுக துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி தனது உரையில், “ வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு விடுமுறையில் தாயகம் செல்லவிருக்கும் ஒவ்வொருவரும், சில மாதங்களுக்கு முன்பாகவே அதற்கான திட்டமிடலிலும், ஏற்பாடுகளிலும் எப்படி உற்சாகத்துடன் ஈடுபடுகிறார்களோ அதுப்போன்ற குர்ஆன் அருளப்பட்ட இந்த கண்ணியத்திற்குரிய மாதத்தினை வரவேற்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
ஒவ்வொரு இறைத்தூதர்களுக்கும் வழங்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் அவர்களுக்கு பிறகு நீடித்திருக்கவில்லை, ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது ரசூல் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமான இந்த குர்ஆன் மட்டும் தான் இறைவனால் பாதுகாக்கப்படுகிறது. மனித வாழ்வின் தத்துவங்களை கூறும் இந்த குர்ஆனின் கருத்துக்களை ஒவ்வொருவரும் அவர் தம் வாழ்விலும் கொண்டு வர வேண்டும்.
இந்த ரமலான் மாதத்தில் எப்படி கட்டுப்பாடுடனும், இறையச்சமிக்கவர்களாகவும் இருக்கிறோமோ, அதுப்போன்றே ரமலான் அல்லாத காலங்களிலும் அவற்றினை தன் வாழ்வியல் நெறியாக கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.
நோன்பு துறப்பதற்கான உணவு ஏற்பாடுகளை அஹமது சுகர்னோ தலைமையில் அப்துல் ரஹ்மான், அமானுல்லாஹ், தொண்டரணி முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்: ஹம்துன் அப்பாஸ்
Wednesday, September 1, 2010
மதானி கைது செய்த போலீஸ் அதிகாரி செப் 13ல் ஆஜராக கொல்லம் கோர்ட் உத்தரவு
news by thatstamil.com


