இந்த நிகழ்ச்சி நமது முமுகவின் www.tmmkdubai.tk இணையதளத்தில் மற்றும் www.tmmktv.tk ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
Thursday, August 12, 2010
முமுகவின் மாபெரும் இஸ்லாமிய மற்றும் சமுதாய சொற்ப்பொழிவு நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சி நமது முமுகவின் www.tmmkdubai.tk இணையதளத்தில் மற்றும் www.tmmktv.tk ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
Wednesday, August 11, 2010
தேர்தல் வன்முறைகளைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்
Tuesday, August 10, 2010
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெட்டுப் போய் விட்டது - ஹைதர் அலி
தென்காசி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெட்டுப் போய் விட்டது என்று கூறியுள்ளார் தமுமுக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி.தென்காசியில் த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. குற்றம் செய்தவர்களுக்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் பேரமும் நடந்து வருகிறது. மேலும் காவல்துறை மிகவும் கேவலமாக உள்ளது. பல முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்த பின்பும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இவைகளை வலியுறுத்தியும், த.மு.மு.க.வினர் மீது வேண்டுமென்றே பல்வேறு சம்பவங்களில் தொடர்பு படுத்தி வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி கோரிக்கை பேரணி தடையை மீறி நடத்துவோம். நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கை மீறும் விதமாக செயல்பட்டு வருகிறார் என்பதை கூடன்குளம் ஐ.பி. கண்காணித்து வருகிறது.
Monday, August 9, 2010
ஷார்ஜா மண்டலம் சார்பாக மாபெரும் ரமலான் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும்13.08.2010, வெள்ளிக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு பிலிப்பைன்ஸ் பள்ளி வளாகத்தில் மாபெரும் ரமலான் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது.மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியருமான சகோ. தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Saturday, August 7, 2010
துபை மண்டல முமுகவின் மாதாந்திர செயற்க்குழு

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வற்றாத கருணையால்,கடல் கடந்தும் சேவை செய்யும் தமுமுகவின் கிளையான முஸ்லீம் முன்னேற்றக் கழகம் துபை மண்டலத்தின் மாதாந்திர செயற்க்குழு 05-08-2010 அன்று வியாழன் இரவு 10:30 மணிக்கு மண்டலத்தின் தலைவர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்றது.தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சகோ.சிவகாசி முஸ்தஃபா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்ய வேண்டும் என்று உரை நிகள்த்தினார்கள். மேலும் தலைமைக் கழக செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்கள். இச்செயர்க் குழுவில் வரக்கூடிய ரமளான் மாதத்தில் முமுகவின் மார்க்கப் பணி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்ட ஆட்சியர் விருது
இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவிற்கு மாவட்டத்திலேயே அதிகமான இரத்ததான முகாம் நடத்தியதைப் பாராட்டி இராமநா தபுர மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் விருது வழங்கினார்.இவ்விருதினை ம.ம.க மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் அன்வர் அலி, நகரச் செயலாளர் பரக்கத்துல்லாஹ், ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர். சகாய ஸ்டிபன் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts
(
Atom
)



