Friday, August 6, 2010

இலவச பொது மருத்துவ முகாம் இடம்: ராமநாதபுரம்

வருகின்றே 8/8/2010 அன்று ராமநாதபுரம் தமுமுக உடன் மதுரை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெறும் இலவச பொது மருத்துவ முகாம் இடம்: ராமநாதபுரம் இவன்: ராமதபுரம் தமுமுக

இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!


இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியுள்ளார். 63 வயதான இவர் டெல்லியைச் சேர்ந்தவர். 1947 ஜூலை 11ஆம் தேதி பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேறினார்.வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற குரைஷி பாரசீகம், அரபி, ஜெர்மன் மொழிகளில் சிறந்த புலமை மிகுந்தவர்.மக்கள் தொகை, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதுக்கு வந்த இளம் தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீவிர ஆய்வு செய்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் பல்வேறு சமூக நல அமைப்புகளோடு சிறந்த தொண்ட £ற்றியவர். தொடர்பியல் மற்றும் சமூக சந்தை என்ற பிரிவில் இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.புற்றீசல் போல் பெருகிவரும் புதிய கட்சிகள் குறித்து கவலை தெரிவித்த குரைஷி “அரை மணி நேரத்திற்கு ஒரு கட்சி தொடங்கப்படுகிறது. சில கட்சிக ளுக்கு தலைமையகமே இல்லை. சில கட்சிகள் டீக்கடைகளில் இயங்கு வதாக குறிப்பிட்டவர், இத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும்“ என்றார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களை சந்திக்க வருமாறு அஇஅதிமுகவின் தலைமை நிலையம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே. செங்கோட்டையன் தமுமுகவின் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 30 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது.
இன்று ஆகஸ்ட் 5 அன்று மாலை 3 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லத்தில் எதிர்கட்சி தலைவருமான அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தமுமுக பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர்.


அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்து பறிமாறிக் கொண்டனர். அனைத்திந்திய அளவில் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்துள்ள நீதயரசர் ரங்கநாத் மி்ஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை அஇஅதிமுக வலியுறுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அஇஅதிமுக பொதுச் செயலாளரிடம் கோரி்க்கை விடுத்தனர்

Thursday, August 5, 2010

தமுமுக துபை மண்டலம் அல்-அய்னில் இரத்த தான முகாம்


கடல் கடந்து வாழ்ந்த போதிலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.. என்று சத்திய மார்கத்தின் வழிகாட்டுதலில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் தமுமுக ஊழியர்கள்,தமிழகத்திற்கு வெளியேயும் வெளிநாடுகளிளும் ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகள் எண்ணிலங்காதவை..வட்டியில்லாக் கடனுதவித் திட்டத்தில் சிறந்த சேவையாற்றி வரும் அல்-அய்ன் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,தற்போது இரத்த தான சேவையைத் தொடங்கியுள்ளது. கடந்த 29-07-2010 வியாழனன்று மாலை 5 மணி தொடங்கி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியை நோக்கி தமுமுக தொண்டர்கள் அணிவகுக்கத் தொடங்கினர். இரத்த சேமிப்பு கொள்ளளவை கருத்தில் கொண்டு குறைந்த அளவில் மட்டும் இப்போதைக்கு வழங்கினால் போதுமென்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால், 24 சகோதரர்கள் தங்தளது இரத்தத்தை தானமாக வழங்க முன் வந்தனர்.மாலை 5 மணி தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற முகாமை அமீரக மு.மு.க வின் துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் தொடங்கி வைத்தார்.அமீரக மு.மு.க செயலாளர் சகோதரர் யாஸீன் நூருல்லாஹ்வின் ஆலோசனையின் பேரில் மண்டல தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி,மண்டல செயலாளர் மண்னை ஹாஜா மைதீன்,மண்டல துணைச் செயலாளர் அதிரை அப்துல் ரஹ்மான்,மண்டல இணைச் செயலாளர்கள் களப்பால் சையது யூசுஃப்,விழுப்புரம் முஜிபுர்ரஹ்மான்,மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி ஆகியோர் முகாமை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தனர்.இரத்த வங்கியில் உதவியாளராக பணிபுரியும் தமிழக இளைஞர் மருதன்,தமிழர்கள் ஒன்று திரண்டு இரத்த தானம் செய்வது பாராட்டுக்குரியது என்று கூறிய அவர்..உண்மையில் நல்லதோர்இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் குநிப்பிட்டார்.இனி தொடர்ந்து இரத்த தான முகாம்கள நடத்தப் போவதாக மண்டல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.புகழனைத்தும் இறைவனுக்கே..!
கொள்ளுமேடு பை.மு.ரிஃபாயிஅல்-அய்ன்

துபை முமுகவின் ரமலானை வரவேற்ப்போம் இஸ்லாமிய




Wednesday, August 4, 2010

உங்களது வாக்கை டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைவர் தமுமுக,அவர்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இதில் உள்ள இணைப்பை http://twocircles.net/polls/tcn_person_year_2010.html
கிளிக்கி அதில் வரும் பக்கத்தில் உங்களது வாக்கை டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைவர் தமுமுக,அவர்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, August 3, 2010

300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு

மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி



வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன் அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது. தமுமுகவினரின் பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.