Wednesday, July 14, 2010

இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி

திருச்சி 28வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி







திருச்சி மாநகராட்சி 28வது வார்டுக்கு எதிர் வரும் 22ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக மீராமைதீன் (45) அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி 28வது வார்டு பகுதியில் காமராஜர் நகரில் வகித்து வரும் மீரா மைதீன் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார்.

குடிநீர் பிரட்சினையை தீர்ப்பது, இலவச பட்டா வழங்குவது முதலியவற்றை தனது பிராதான தேர்தல் வாக்குறுதிகளா களத்தில் மீரா மைதீன் இறங்கியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------

மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டு இடைத்தேர்தல் மனிதநேய மக்கள் கட்சி போட்டி


திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற 1வது வார்டு இடைத்தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் செய்யது முகம்மது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் செயல் அலுவலர் செல்வமணியிடம் செய்யது முகம்மது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Tuesday, July 13, 2010

முஸ்லிம் பெண்களின் நிகாப் மீதான தடையை எதிர்க்கும் அமெரிக்கர்கள்

வாஷிங்டன்:முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவது ஃப்ரான்ஸில் சட்டவிரோதமாக்கப்படும் மசோதா இன்னும் ஓரிரு நாளில் ஃபிரான்ஸ் பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்கர்கள் இத்தடையை எதிர்க்கின்றனர்.

பெவ் எனும் ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ஃபிரான்ஸில் 10-ல் 8-பேர் பொது இடங்களில் நிகாப் மீதான தடையை ஆதரித்துள்ளனர். வெறும் 17% ஃபிரான்ஸ் மக்களே தடையை எதிர்க்கின்றனர். ஜெர்மனியில் 71%, பிரிட்டனில் 62%, ஸ்பெயின் 59% மக்களும் தடையை ஆதரிக்கின்றனர்.ஆனால் நிகாப் மீதான தடையை மூன்றில் இரண்டு அமெரிக்கர்கள் எதிர்க்கின்றனர்.

ஃப்ரான்ஸின் தேசிய தினத்திற்கு முந்தய நாளான ஜூலை 13 அன்று பாராளுமன்றத்தில் பொதுயிடங்களில் நிகாபிற்கு தடை விதிப்பது குறித்து வாக்கு எண்ணிக்கை நடக்கயிருக்கிறது.

ஒப்புதல் வேண்டி மேல்சபைக்கு(செனட்) அனுப்பி வைக்கப்படும், செப்டம்பரில் முடிவு தெரியும்.

இதன்படி பொதுயிடங்களில் முழுமுகத்திரையுடன் பெண்கள் பிடிபட்டால் 150 யூரோ (190 டாலர்) அபராதமும், ஆண்கள் மனைவியை அல்லது பிள்ளைகளை நிர்பந்தித்தால் 30,000 யூரோ அபராதமும், ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

ஃப்ரான்ஸில் சிறுபான்மையாகயிருக்கும் முஸ்லிம் பெண்களை இந்த சட்டம் பெரிதும் பாதிக்கும். 1,900 பேர் மட்டுமே நிகாப் அணிவதாக அமைச்சகம் தெரிவிக்கிறது. இதேபோன்று சட்டங்கள் பெல்ஜியம், ஸ்பெயினில் நிலுவையில் உள்ளது,

ஆனால் குறிப்பாக ஐரோப்பாவின் சிறுபான்மை முஸ்லிம்களை பெரியளவில் கொண்டிருக்கும் ஃப்ரான்ஸில் மட்டுமே பெரிதும் புண்படுத்துகிறது.
நன்றி: பாலைவனத்தூது

அல் உம்மா இயக்க தலைவர் முஹம்மது அன்சாரி கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றம்



அவர் மனைவி சம்சுநிஷா மூன்று பெண் குழந்தைகளுடன்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம்



கோவை ஜீலை 11-
அல் உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி, கோவை மத்திய சிறையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று
கோவை மத்திய சிறையில் உள்ளார். இவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றி சிறை நிர்வாகம் உத்திரவிட்டது. இதையடுத்து அன்சாரி
பலத்த பாதுகாப்புடன் (10ம் தேதி சனிகிழமை ) சென்னை புழல் சிறைக்கு கொண்டு சொல்லப்பட்டார்.

இந்த தகவலையை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே சமுதாய இயக்க தலைவர்கள், தமுமுக
தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி,கோவை இ உம்மர், முஸ்லிம் லீக் தலைவர் காதர்மைதீன், அப்துல்
ரஹ்மான் எம்.பி, இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் பாக்கர், பாப்புலர் ஃபிரண்ட் மாநில துனை தலைவர் இஸ்மாயில், குணங்குடி
அனிபா, மற்றும் அரசு உயர்அதிகாரிகளுக்கு அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் அன்சாரி மனைவிக்கு தகவல் கிடைக்க புழலுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தன் மூன்று பெண் குழந்தைகளுடன்
கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம் நடத்தினர். பிறகு காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு
கோவை குற்றவியல் அலுவலக மேலாளர் மல்லிகாவிடம் மனு அளித்தனர். பிறகு கலெக்டர் வேறு நிகழ்ச்சியில் உள்ளதால் அவர்
அன்சாரி மனைவியிடம் தொலை பேசி தொடர்பு கொண்டு உங்கள் கணவரை கோவை மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிர்வாத்திற்க்கு
பரிந்துறை செய்கிறேன்.

பிறகு உள்துறை செயலாளர் அவர்களுக்கு கலெக்டர் அலுவலக முலம் மனு கொடுத்தார். அளித்தார் விபரம்
கோவையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 13 வருடங்களாக கோவை மத்திய சிறையிலேயே தன்
தண்டனை காலத்தை கழித்து வரும் எனது கணவர் முஹம்மது அன்சாரி எக்காரணமும் இல்லாமல் மிகக் கொடுமையான முறையில்
அதிகாலை 5 மணிக்கு சிறைமாற்றம் செய்யப்பட்டுள்ளார
எங்களுக்கு திருமணமாகி இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பெண் குழந்தைகள் உண்டு. எனது கணவர் ஏற்கனவே
கடுமையான நீரழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார். மேலும் அவருக்கு இருதய நோயும் உண்டு நான் சென்ற முறை வியாழன்று
நேர்கானல் சென்ற போது மிகவும் சோர்வாக இருந்தார்.
நானும் எங்களது குடும்பத்தார் அனைவரும் கோவையில் தான் வசிக்கின்றோம். சிறைமாற்றம் செய்த காரணத்தால் எங்களின்
குடும்பத்தாருக்கும், எங்களது குழந்தைகளுக்கும் மிக நீண்ட தூரம் பயணம் செய்து மனு நேர்காணல் சென்று காண சிரமமாக இருக்கும்
என்பதை கருத்தில் கொண்டு அவரை கோவை மத்திய சிறைக்கே மாற்ற செய்து தரும்படி தாங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
என மனுவில் கூறியுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் உம்மா ஷா, கோவை தங்கப்பா, அபுதாஹிர், தாஜ்பாபு, ரபிக், ஏர்டெல் அபு ஆகியோர் செய்து வந்தார்கள்.







Monday, July 12, 2010

துறைமுகம் ம.ம.க சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சரி பார்ப்பு பணி


வடசென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சரி பார்ப்பு மற்றும் விடுபட்டவர்களின் பெயர் இணைப்பு முகாம் நடைபெற்றது.

இதில் ஏராளமான வாக்காளர்கள் தங்கள் பெயரை சரி பார்த்துக் கொண்டதோடு, விடுபட்டவர்கள் தங்களின் பெயர்களையும் இணைத்துக் கொண்டனர்.

ஜூலை 16ல் காஷ்மீரின் மனிதஉரிமை மீறுதல்களை கண்டித்து தமுமுகவின் போராட்டம்

இன்ஷா அல்லாஹ், ஜூலை 16 அன்று காஷ்மீரில் நடைப்பெறும் மனித உரிமை மீறுதல்களை கண்டித்து தமுமுக சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெறுகிறது. நீதிக்கு குரல் கொடுக்க அணிதிரள்வீர்!!


Thursday, July 8, 2010

முழுத்த்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெறும் முதல் இந்திய முஸ்லிம் மாணவி


பாட்னா தனது சமூகத்திற்கு புகழ் சேர்க்கும் விதமாக பீகாரை சேர்ந்த ஜீஷான் அலி என்ற மாணவி 'முழுத்திறன் கொண்ட அறிவு ஜீவி' என்ற பட்டத்தை பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார்.

அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனமான USIEF இப்பட்டத்தை ஜீஷான் அலிக்கு வழங்கவுள்ளது.இப்பட்டத்தை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி பெறுவது இதுவே முதன் முறையாகும்.

"இச்செய்தியை கேட்டதும் நான் வியப்படைந்தேன், அளவு கடந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன், நான் உண்மையாகவே கவுரவிக்கப்பட்டுள்ளேன்" பாட்னா பல்கலைகழக Ph.D மாணவி ஜீஷான் பேட்டியளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

USIEFன் முழுத்திறன் அந்நிய மொழி கற்பித்தல் உதவியாளர் (FLTA) என்ற திட்டத்தின் மூலம் இவர் இப்பட்டத்தை பெற்றிருக்கிறார். இத்திட்டத்தின் மூலம், 21-29 வயதுள்ள இந்தியர்கள் தற்போது கல்லூரிகளில் ஆங்கில ஆசிரியராகவோ அல்லது ஆங்கில ஆசிரியராக பயிற்சி எடுப்பவராக தேர்ந்தெடுக்கப்படுவர்.

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அவர்களின் 9 மாத அமெரிக்க கல்லூரி வாழ்க்கையில் பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி அல்லது உருது சொல்லித்தர வேண்டும்.

இப்போட்டியில் சுமார் 150 நாடுகளிலிருந்து மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். ஆனால் 60 நாடுகளை சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மவ்லானா ஜாத் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஜீஷான் அலி, இத்திட்டத்தில் ஹிந்தி மற்றும் உருது கற்பிப்பார். இது தவிர, அமெரிக்காவிற்கான கலாச்சார தூதராகவும் பதவி வகிப்பார். இது தொடர்பாக, ஜூலை இறுதியில் இவர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்